Sunday 29 July 2012

பிளாக்கரில் read more பட்டன் வைக்க..!!

நமது பிளாக்கரில் Read more பட்டன் வைப்பது எப்படி என்பதைப் பார்ப்போம்.. இது எதற்காக என்றால் முகப்பு பக்கத்தில் நிறைய பதிவுகளைத் தோன்றச் செய்யத்தான். அவ்வாறு பதிவுகளை சுருக்கி காட்டும்போது நம்முடை வலைப்பூவின் முகப்புப் பக்கத்தில் நிறைய பதிவுகளை காட்டலாம். நிறைய பதிவுகளை முகப்பு பக்கத்தில் காட்டுவதால் நம் தளத்திற்கு வரும் வாசகர்கள் நிறைய நேரம் நம் வலைப்பூவில் இருப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.

பதிவுகளை சுருக்கி காட்டுவதால் முகப்பு பக்கம் விரைவாக திறக்கும்.

ஒரு சில வலைப்பதிவுகளில் பயனுள்ள நல்ல பதிவுகள் அதிகம் இருக்கும். ஆனால் அவை முகப்பு பக்கத்தில் முழுப்பதிவையும் கொண்டிருக்கும். இப்படி முகப்பு பக்கத்தில் முழுப்பதிவும் இருப்பதால், வலைப்பூ திறக்க அதிகம் நேரம் எடுத்துக்கொள்ளும்.



Trial version மென்பொருள்களை நிரந்தரமாக்க சீரியல் எண்களை இலவசமாக பெற

இணையத்தில் இப்போது இலவச மென்பொருள் அதிகளவில் கிடைக்கிறது.. நமக்கு தேவையான மென்பொருள்களை நாம் தரவிறக்கி பயன்படுத்துகிறோம். அவ்வாறு தறவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருளானது ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் Expire ஆகிவிடும்.




அனைத்துவித windows களுக்கும் பயன்படும் 100 வகை சாப்ட்வேர்கள்..!

கணினி பயனாளர்களுக்குத் தேவையான அனைத்து மென்பொருள்களும் இங்கு பட்டியலிடப்பட்டிருக்கிறது.. தேவையான மென்பொருகள் இங்கிருந்தே தரவிறக்கம் செய்யும் வகையில் கொடுத்திருக்கிறேன்.. download என்ற லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து பயன்பெறவும்.. 



முகம் பார்த்து பேச ஒரு அழகிய இலவச மென்பொருள்..(Video chating software)

உலகில் புத்தம் புதிய டிஜிட்டல் சமாச்சாரங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இதில் வீடியோ சாட்டிங் என்பது இப்போது பிரபலம் ஆகிக்கொண்டிருக்கிறது.. கணினியிலிருந்து மொபைல் வரைக்கும் நேரடியாகவே பார்த்துபேசுவது போன்ற பிரமையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது..

இதில் தொட்டுப் பார்ப்பது மட்டும் தான் முடியாது.  ஆனால் மற்ற முகபாவங்களை நாம் கவனித்து உரையாடலாம்.. அத்தகைய வாய்ப்பை இந்த சாப்ட்வேர் ஏற்படுத்தி தருகிறது..



மொபைலில் 700க்கும் மேற்பட்ட இணைய வானொலிகள் கேட்க...!!


Virtual Radio
கையடக்கப் பேசிகளில்(cellphones) நிறைய வசதிகள் இருந்தபோதிலும் அதில் வானொலிக் கேட்பது என்பது ஒரு அலாதியான சுகம்தான்.

 இவற்றில் உள்ள பண்பலை வானொலிகள்(FM) தெளிவின்மை காரணமாக பலரும் இவ்வசதியைப் பயன்படுத்துவதில்லை.

ஆனால் திறன் மிக்க, தெளிவான இணைய வானொலிகளை இப்போது கையடக்க பேசிகளிலேயே கேட்டு மகிழலாம்.





உங்கள் கணினியில் Task Manager பிரச்னை தீர..


உங்கள் கணினியில் வைரஸ் போன்ற பிரச்னைகளால் டாஸ்க்மேனேஜர் செயலிழந்து போகலாம். இந்த சமயத்தில் கணினியில் இவ்வாறு செய்தியொன்றைக் காட்டும்.


"Task Manager has been disabled by your administrator"

task manager disabled
இதுபோன்ற சூழ்நிலை உங்கள் கணிக்கு ஏற்பட்டால் இதைத் தவிரக்க, இந்த மென்பொருள் உதவும். இம்மென்பொருளின் மூலம் மீண்டும் உங்களின் கணினியில் Task Manager -ஐ இயக்க வைக்கலாம்.



பவர் பாய்ண்ட் கோப்புகளை வீடியோ கோப்புகளாக மாற்றம் செய்ய

மைக்ரோசாப்ட்டின் ஆபீஸ்(MS Office) தொகுப்பில் உள்ள பவர்பாய்ன்ட் செயலியை நம்மில் பலர் பயன்படுத்தி வருகிறோம். எளிதாக தகவல்களை தொகுத்து animation வேலைகளுடன் வழங்க இந்த பவர்பாய்ண்ட் நமக்கு உதவுகிறது. இதிலுள்ள  பயன்பாடுகள் ஏராளமானவை.

ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த பவர்பாய்ண்ட்டை அதிகம் பயன்படுத்துகிறார்கள். வகுப்புகளில், கருத்தருங்குகளில் என எல்லாவற்றிலும் இந்த பவர்பாய்ண்ட் ப்ரசண்ட்டேஷனைப் பயன்படுத்திதான் தங்களுது கருத்துகளை எடுத்து கூறுகின்றனர். பாடம் நடத்தவும் சில வேளைகளில் பவர்பாய்ண்ட் பிரசன்ட்டேஷன் உதவுகிறது என்றால் அது மிகையாகாது. 



உங்கள் பதிவுகள் காப்பி அடிக்கப்படுகிறதா..?


தளத்தின் பெயர்: tynt™ publisher tools

தளத்தில் என்ன சிறப்பு என்கறீர்களா? இருக்கிறது.. உங்கள் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், பதிவுகள், போன்ற உங்கள் சொந்த ஆக்கங்கள் பிறர் அவர்களின் தளத்தில் பதிவிடும் போது உங்கள் தளத்திற்கு இணைப்பு கொடுக்காமலேயே விட்டுவிடுவார்கள் இல்லையா? அவர்களுக்குத் தெரியாமலேயே பதிவுகளை காப்பி செய்யும்போது இணைப்பு கொடுத்துவிட்டால்...

ஆம்.. அதைத்தான் செய்கிறது இந்த தளம்.. 



உங்கள் photo -வை ஓவியமாக மாற்ற..


உங்களுடைய போட்டோக்களை ஒரே சொடுக்கில் ஓவியமாக மாற்ற முடியுமா? கருப்பு வெள்ளை ஓவியமாகவும், கலர்புல் ஓவியமாகவும் மாற்ற முடியுமா? நீங்கள் விரும்பிய Effect-களை அதில் கொண்டு வர முடியுமா?

முடியும் நண்பர்களே.. ! எல்லாமே ஒரே சொடுக்கில் சாத்தியம்தான்.  ஒரிஜினல் ஓவியத்தைப் போன்றதொரு தோற்றத்திற்கு உங்களுடைய புகைப்படத்தை கொண்டு வர முடியும். இதற்கு இரண்டு வழிமுறைகள் இருக்கிறது.




ஒரே கிளிக்கில் ஏழு தேடுபொறிகளுக்கான முடிவுகளைப் பெற....

இந்த தேடல் இயந்திரம் அல்லது தேடுபொறியில் முதல் இடத்தைப் பெறுவது சந்தேகமே இல்லாமல் கூகிள் சர்ச் என்ஜின்தான்(Google Search Engine). உலகின் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் தேடு இயந்திரம் இது.. 


இதைப் போன்றே சில முக்கிய தேடிபொறித் தளங்களும் இருக்கின்றன. அவை Yahoo, ASk, மற்றும் Bing ஆகியவை.. இதனுடன் போட்டிப்போட்டு முன்னேற முயற்சி செய்துகொண்டிருக்கின்றன உலகின் மற்ற தேடுபொறிகள். 



New Blogger Template

Green Mag Blogger Template

இந்த வார்ப்புரு இரண்டு sidebar களைக் கொண்டது. வெள்ளை நிறப் பின்னணியில் நல்லதொரு தோற்றத்தைக் கொண்டுள்ளது. 

VIEW TEMPLATE  
DOWNLOAD TEMPLATE




Recover Deleted Files



how to recover deleted files




ஏதாவது ஒரு நினைவில் அல்லது தேவையில்லையென நினைத்து ஒரு கோப்பை நாம் நம் கணினியிலிருந்து  அழித்திருப்போம்.. அது மீண்டும் தேவைப்படும்போது அழித்த கோப்புகளை மீட்பதில் அதிகம் சிரமம் ஏற்படும்.

Recycle bin -ல் இருந்தால் பரவாயில்லை. மீண்டும் அதை மீட்டுவிடலாம். ஆனால் அதிலிருந்தே தேவையில்லையென அழித்திருந்தால் அந்தக் கோப்பை எப்படி மீட்பது? இதோ அதற்கான மென்பொருள்: Recuva




கோப்புகளை தானாக சேமிக்கும் மென்பொருள்...

திடீரென ஏற்படும் மின்தடையால் நீங்கள் பாவித்துக்கொண்டிருக்கும் கோப்புகளை சேமிக்க இயலாமல் போகும். இதுபோன்ற சமயங்களில் கோப்புகளை தானாகவே சேமிக்க உதவுகிறது இம்மென்பொருள். இது நம்முடைய கோப்புகளை தானாக சேமிக்கிறது(Automatic Save). 

மென்பொருளின் பெயர்: AutoSave Essentials

இம்மென்பொருளின் மூலம் Music, Photos, Documents என்ற மூன்று பிரிவுகளில் அடங்கும் கோப்புகளை சேமிப்பதற்கான வசதிகள் உள்ளடங்கி இருக்கின்றன. 
எந்த வகையான கோப்பை நாம் மேற்கொள்கிறோமோ அதை ஆட்டோமேட்டிக்காக சேமிக்க இந்த மென்பொருளில் வசதி தரப்பட்டிருக்கிறது. சேமிக்க வேண்டிய கோப்புகளை மற்ற சாதனங்களிலும் சேமிக்குமாறும் அமைத்துக்கொள்வது கூடுதல் வசதி. அதாவது Pendrive, Hard drive, போன்ற External Device களிலும் சேமித்துக்கொள்ளலாம்.



ஒரே மென்பொருளில் பல்வேறு கோப்புக்களைத் திறக்க


ஒரே மென்பொருளில் ஏன் அனைத்துவிதமான கோப்புகளையும் திறக்க வேண்டும்? அந்தந்த கோப்புகளுக்குரிய மென்பொருள்களிலேயே திறந்து வாசித்துவிடலாமே என்கிறீர்களா? அதுவும் சரிதான். ஆனால் பல்வேறு கோப்புகளுக்குரிய மென்பொருளை உங்கள் கணினியில் ஒரே சமயத்தில் நிறுவி நீங்கள் பயன்படுத்த முடியுமா? அதுதான் சாத்தியமில்லை.. 
அவ்வாறு நீங்கள் பல்வேறுவகையான மென்பொருள்களை கணினியில் நிறுவும்போது உங்கள் கணினியின் வேகம் அதள பாதாளத்திற்கு சென்று விடும். நத்தை ஊர்வதைவிட மிக குறைவான வேகத்தில் செயல்படும். சில சமயம் அப்படியே Hang ஆகி நின்றுவிடும். 




free 300 hundred Software


இணைப்பைச் சொடுக்குவதன் மூலம் உங்களுக்குத் தேவையான மென்பொருளைத் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். 

Office

OpenOffice - office suite
Ms office 2010-office suite
PC Suite 602 
 - office suite
AbiWord 
- text editor
Atlantis Nova 
- text editor
Microsoft PowerPoint Viewer 
 - power point files viewer
Adobe Reader 
- pdf reader
Foxit PDF Reader 
- pdf reader
PDFCreator 
- create pdf documents
Doc Convertor 
 - document convertor
Convert 
- unit convertor
Converber 
- unit convertor
Sunbird 
- calendar/organizer
EssentialPIM Free 
- calendar/organizer
PhraseExpress 
- speed up your writing
ATnotes 
- create notes on the desktop



விண்டோஸ் எக்ஸ்பியில் ஏற்படும் இருபத்தைந்திற்கும் மேற்பட்ட பிரச்னைகளை சரிசெய்ய

விண்டோஸ் எக்ஸ்பி(Windows xp) ஆபரேட்டிங் சிஸ்டம்தான் இன்று பெரும்பாலானோர் பயன்படுத்துகிறோம் இல்லையா? விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஆகிய புதிய version கள் வந்துவிட்டாலும் பழகிப் போன windows XP விட்டு விட நமக்கு மனசிருப்பதில்லை.. அதோடு மட்டுமில்லாமல் தொடர்ந்து பயன்படுத்திப் பழகிவிட்டதால் மற்ற புதிய இயங்குதளங்களுக்கு மாறுவதற்கும் தயக்கம் வருவது சகஜம்தான்.. இல்லையா?


சரி.. வேண்டாத இந்த கதைகளை எல்லாம் விட்டுவிடலாம்.. நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவரா? அப்படியானால் இந்தப் பதிவு உங்களுக்குத்தான். விண்டோஸ் எக்ஸ்பியில் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்ய பயன்படும் ஒரு அற்புதமான மென்பொருளைப் பற்றி இப்பதிவில் காண்போம். ஒரு வரி விடாமல் படித்துப் பயன்படுத்திப்பாருங்கள்.. இந்த மென்பொருளின் மகத்துவம் உங்களுக்குப் புரியும். 

உங்கள் கணினியில் வைரஸ் தாக்கம் நடைபெற்றுவிட்டவுடன் என்ன நடக்கும் தெரியுமா? 



மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியீட்டு எண்கள்


*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க 
*#0000# –  தயாரிப்பு தேதி பார்க்க
#*2472# – தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய 
*#7780# –  பேக்டரி அமைப்பை கொண்டுவர
*8375#  – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய 
*#9999# –  தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய
*#0001#  –  போனின் சீரியல் எண்ணை காண
*#8999*778# –  சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய
#*#8377466#  – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய
*#67705646# – clears the LCD display(operator logo).


*#147# – This lets you know who called you last (Only vodofone).









சோனி எரிக்சன் பிசி சூட் மென்பொருளானது உங்கள் சோனி எரிக்சன் மொபைல் போனின் செயல்பாடுகளை மேம்படுத்தும் ஒரு இலவச மென்பொருள் பயன்பாடாக உள்ளது. உங்களுக்கு ஒருங்கிணைப்பு மற்றும் உங்கள் தனிப்பட்ட தரவு மேலாண்மை (அதாவது நாள்காட்டி மற்றும் தொடர்பு தகவல் போன்ற) மற்றும் தொலைபேசி வழியாக இணைய இணைப்பினை உங்கள் கணினியை இணைக்க முடியும் சோனி எரிக்சன் பிசி சூட் உங்கள் கணினியில் உங்கள் தொலைபேசி இணைக்கிறது.





  

கைபேசியில் அழைப்புக்களை சிறந்த முறையில் பதிவுசெய்யும் மென்பொருள் (Best CallRecorder v1.0 S60v5 SymbianOS9.4) உங்களுக்கு வரும் அழைப்புக்களை அல்லது நீங்கள் அழைக்கும் அழைப்புக்களைபதிவு செய்து மறுபடியும் கேட்பதற்கு



Compatible devicesNokia 3250, Nokia 5320 XpressMusic, Nokia 5500Sport, Nokia 5630 XpressMusic, Nokia 5700 XpressMusic,

Nokia 5730 XpressMusic, Nokia 6110 Navigator, Nokia 6120 classic, Nokia 6121 classic, Nokia 6124 classic, Nokia 6210 Navigator, Nokia 6220 classic, Nokia 6290, Nokia 6650, Nokia 6710 Navigator, Nokia 6720 classic, Nokia E50, Nokia E51, Nokia E55, Nokia E60, Nokia E61, Nokia E61i, Nokia E62, Nokia E63, Nokia E65, Nokia E66, Nokia E70, Nokia E71, Nokia E75, Nokia E90Communicator, Nokia N71, Nokia N73, Nokia N75, Nokia N76, Nokia N77, Nokia N78, Nokia N79, Nokia N80, Nokia N81, Nokia N81 8GB, Nokia N82, Nokia N85, Nokia N86 8MP, Nokia N91, Nokia N91 8GB, Nokia N92, Nokia N93, Nokia N93i, Nokia N95, Nokia N95 8GB, Nokia N96
Does not work on: LG KS10 (Joy), LG KT610, LG KT615, Samsung i7710, Samsung i8510 INNOV8, Samsung SGH-G810, Samsung SGH-i400, Samsung SGH-i450, Samsung SGH-i520, Samsung SGH-i550, Samsung SGH-i560, Samsung SGH-i570, Samsung SGH-L870

China Mobile Pc Suite

இப்போது சந்தையில் China Mobile அதன் காணப்படுகின்றது. அதை கணணியில் பயன்படுத்த China Mobile PC Suite நிறைய பொருக்கு தேவைப்படுகின்றது.  அதை  Download செய்யலாம்






தமிழ் தட்டச்சு முறைகள்

தமிழ்த் தட்டச்சு முறைகள் என்பது கணினியில் தமிழை உள்ளீடு செய்வதற்கான பல்வேறு முறைகளைப் பற்றியதாகும். தமிழில் பல வகையான மென்பொருட்கள் மற்றும் எழுத்துருக்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இவற்றில் விசைப்பலகை அமைப்பு, எழுத்து வகைகள், எழுத்துரு அமைப்புகள் போன்றவைகளும் தனித்தனியாக இருக்கின்றன. இதனால் இணையத்திற்கான தமிழ் எழுத்துருக்களைப் பலரும் தனித்தனியாக அவர்கள் வசதிக்குத் தகுந்தபடி தேர்வு செய்து கொண்டிருக்கின்றனர்.

விசைப்பலகை

கணிப்பொறியில் தமிழைத் தட்டச்சு செய்யும் விசைப்பலகை அமைப்புகள் பல இருக்கின்றன. கீழ்காணும் நான்கு தட்டச்சு முறைகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
  • தமிழ்த் தட்டச்சு விசைப்பலகை
தமிழ்த்தட்டச்சு விசைப்பலகை (Tamil type writing key board) எனும் இந்த விசைப்பலகை தட்டச்சு எந்திரத்தில் பயன்படுத்தப்படும் முறையைத் தழுவி அமைக்கப்பட்டது. பாமினி, அமுதம், கிருதி தமிழ், மீசன், குறிஞ்சி போன்ற தமிழ் எழுத்துருக்கள் இந்த விசைப்பலகை முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
  • தமிழ் 99 விசைப்பலகை
தமிழ்நாடு அரசு 1999 ஆம் ஆண்டு தமிழ்வலை 99 (Tamilnet 99) எனும் விசைப்பலகை முறையை அறிமுகப்படுத்தியது. தமிழ் தட்டச்சு தெரியாத அனைவரும் எளிதாகப் பார்த்து மாற்று விசையின் உதவியின்றி தட்டச்சு செய்யும் முறையில் இந்த விசைப்பலகை அமைக்கப்பட்டிருக்கிறது.
  • உச்சரிப்பு வழி விசைப்பலகை
அனைத்து மொழிகளையும் பயன்படுத்தும் அச்சுத் தொழில் சார்ந்த துறைகளில் பொதுவான ஒலியியல் குறியீடுகளுக்குத் தகுந்ததாகத் தட்டச்சு செய்யும் முறையில் இந்த உச்சரிப்பு வழி விசைப்பலகை (Phonetic key board)அமைக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் தமிழில் அதிகம் பயன்படுத்தும் மயிலை எழுத்துருவிற்கான விசைப்பலகை குறிப்பிடக் கூடியதாக இருக்கிறது.
  • மாற்றுமொழி விசைப்பலகை
மாற்றுமொழியின் வாயிலாகத் தட்டச்சு செய்யும் வழியில் ஆங்கில எழுத்துச் சேர்க்கையின் மூலம் தமிழ்மொழியைத் தட்டச்சு செய்யும் முறையில் இந்த மாற்றுமொழி விசைப்பலகை (Transliteration or Romanised key board) அமைக்கப்பட்டிருக்கிறது.
  • பிற விசைப்பலகைகள்
இது தவிர எளிமையாகத் தட்டச்சு செய்து கொள்ளக்கூடிய வகையிலும் சில விசைப்பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. சில பத்திரிகை நிறுவனங்கள் தங்கள் அமைப்பின் பயன்பாட்டிற்கு மட்டும் என்று தனிப்பட்ட விசைப்பலகை முறையை அமைத்துக் கொண்டுள்ளன என்பதும் இங்கே கவனிக்கத் தக்கது.






நன்றாக, விரைவாக Start ஆன கம்ப்யூட்டர், மெதுவாக Start ஆகி கடுப்பைக் கிளப்பியிருக்கிறதா? இதோ அதற்கான தீர்வு..!

திடீர்னு என்னுடைய கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆக ரொம்ப நேரமெடுத்துக்கொண்டது.. எனக்கு ஒரு சந்தேகம்.. நல்ல cofiguration உடைய என்னுடைய கணினிக்கு இன்று என்ன வந்தது? என்னுடைய பொறுமையை சோதித்தது. வெறுப்பில் கணினியை அணைத்துவிட்டு சென்றுவிட்டேன். 




மிக எளிதாக admin account, admin password, மாற்றி அமைப்பது எப்படி


பெரும்பாலான சமயங்களில் நாம் உபயோகபடுத்தும் கணினியில் Administrator கடவு சொல் நாம் மறந்து போயிருப்போம், அல்லது யாராவது மாற்றியிருப்பார்கள், அப்படி பட்ட சமயங்களில் நாம் திண்டாட வேண்டியிருக்கும்,  Admin password ஆனது மிகவும் முக்கியமான ஒன்றாகும்,ஏனெனில் applications, services, hardwares, softwares, நிறுவ அல்லது நிறுவியதை அழிக்க இந்த administrator login மிக அவசியமான ஒன்றாகும்.

இப்போதெல்லாம் நிறைய கடவு சொல் உடைப்பான்கழ் (password breaker) தரவிரகதுக்கு கிடைகின்றது, அது எல்லாம் காசு குடுத்து வாங்க வேண்டியதிருக்கும், ஆனால் விண்டோஸ் லேயே ஒரு loop hole (ஓட்டை) இருக்கிறது, 


இன்று நாம் பார்க்க இருப்பது விண்டோஸ் சர்வர்களில் உள்ள Admin Tool யை பற்றியது. இது எதற்காக எனில் ஒவ்வொரு சமயங்களிலும் Start-control-panel-administrativ tools சென்று தேவையான Tools யை தேர்வு செய்வதற்கு பதிலாக start-run சென்று இந்த கட்டளைகளை குடுத்தால், நேரடியாக நாம் நமக்கு தேவையான tools இக்கு செல்லலாம்.











1) Active Directory Domain and Trust - domain.msc
2) Active Directory Management - admgmt.msc
3) Active Directory Sites and Services - dssite.msc
4) Active Directory Users and Computers - dsa.msc
5) ADSIEDIT(Active Directory Services Interface Edit) - adsiedit.msc
6) Certification Authority Manager - certsrv.msc
7) Cluster Administrator - cluadmin.exe
8) Computer Management - compmgmt.msc
9) Configure Your server wizard - cys.exe
10) Device manager - demgmt.msc
11) DHCP Server - dhcpmmt.msc
12) DNS Management - dnsmgmt.msc
12) Local Group Policy Editer - gpedit.msc
13) Performance Monitor - performon.msc
14) NLB (Netword Load Balance) - nlbmgr.exe
15) Shared Folder - fsmgmt.msc

Thursday 19 July 2012

கணணியில் ஏற்படும் பிரச்னைகளும், அதற்கான காரணங்களும்


கணணி முடங்கி போகும் நேரங்களில், எர்ரர் செய்திகள் காட்டப்படும். ஏன் இவ்வாறு வருகின்றது என்று தெரியாமல் குழம்பி போயுள்ளவர்கள் ஏராளம்.
கணணியில் தோன்றும் சில எர்ரர் செய்திகளும், அதற்கான விளக்கங்களும் கீழே தரப்பட்டுள்ளன.
1. மொனிட்டரின் எல்.இ.டி விளக்கு விட்டு விட்டு எரிகிறது: இதற்குக் காரணம் எங்கேனும் இணைப்பு விட்டுப் போய் இருக்கலாம். மொனிட்டர் கேபிள், டேட்டா கேபிள், ராம் மெமரி, டிஸ்பிளே கார்ட் மற்றும் சிபியு தொடர்புகளில் பிரச்சினை இருக்கலாம். மேலே கூறிய அனைத்தையும் சரி பார்க்கவும்.
2. தொடர்ந்து மூன்று பீப் ஒலி கேட்கிறது: ராம் மெமரி சிப் தொடர்பில் கோளாறு இருக்கலாம். எனவே அவை சரியாக அதன் ஸ்லாட்டில் பொருந்தியுள்ளனவா எனப் பார்க்கவும். மற்ற பிரிவுகளைச் சோதனை செய்கையில் இவை சற்று இடம் பெயர்ந்திருக்கலாம்.
3. மூன்று பீப் ஒன்று நீளமாக, இரண்டு குறைவாக: இந்த ஒலி கிடைத்தால் டிஸ்பிளே கார்டில் பிரச்னை. இந்த கார்டை ஒரு முறை எடுத்து திரும்ப பொருத்தவும். பிரச்னை தொடர்ந்தால் இதனை மாற்ற வேண்டியதிருக்கும்.
4. மூன்று நீளமான பீப் ஒலி, சம கால இடைவெளியில்: பயாஸ் அல்லது ராம் செட்டிங்ஸ் பிரச்சினை. ராம் சிப் மற்றும் பயாஸ் செட்டிங்ஸ் செக் செய்திடவும்.
5. தொடர்ந்த பீப் ஒலி: கீ போர்டு பிரச்சினை. எடுத்துக்காட்டாக உங்கள் விரல்கள் ஏதேனும் தொடர்ந்து ஒரு கீயை அழுத்திக் கொண்டிருக்கலாம் அல்லது ஏற்கனவே அழுத்தப்பட்ட கீ, தூசி அல்லது வேறு பிரச்சினையால், மேலே எழாமல் அழுத்தப்பட்ட நிலையிலேயே இருக்கலாம்.
6. பிளாப்பி டிஸ்க்/ சி.டி.டிரைவின் எல்.இ.டி விளக்கு தொடர்ந்து எரிகிறது: டேட்டா கேபிள் மாட்டியதில் சிக்கல் உள்ளது. கேபிள் முறுக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவும்.
7. மொனிட்டர் திரையில் எந்த டிஸ்பிளேயும் இல்லை: ஹார்ட் டிஸ்க் கேபிள் தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது. சரியாகப் பொருத்தவும். அதில் உள்ள சிகப்பு மார்க் பவர் சப்ளையைப் பார்த்து இருக்க வேண்டும்.
8. பவர் எல்.இ.டி எரியவில்லை: மெயின் பவர் வரும் வயர் சரியாகப் பொருந்தி உள்ளதா எனப் பார்க்கவும். எஸ்.எம்.பி.எஸ் சரியாக வேலை செய்கிறதா எனச் சோதிக்கவும். மதர் போர்டுக்கான இணைப்பும் சரியாக இருக்க வேண்டும்.
9. CMOS Error என்று செய்தி வருகிறது: மதர் போர்டில் உள்ள 3 வோல்ட் பேட்டரியினை மாற்றவும். அதன் ஒரிஜினல் செட்டிங்ஸை நீங்களே கொண்டு வரவும். இதற்கு கணணியுடன் தரப்பட்ட சீமாஸ் செட் அப் சார்ட் பார்க்கவும்.
10. HDD Error or Hard Disk Failure என்று செய்தி வருகிறது: பவர் தரும் கேபிள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதா என்று பார்க்கவும். ஒரு முறை எடுத்து, இணைக்கும் இடத்தில் உள்ள தூசியினை நீக்கிப் பொருத்திப் பார்க்கவும்.
ஹார்ட் டிஸ்க் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதனை உறுதி செய்திடவும். ஹார்ட் டிஸ்க்கிற்கான டேட்டா கேபிளையும் ஒரு முறை எடுத்து, சுத்தம் செய்து மீண்டும் இணைக்கவும்.
சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் பாராமீட்டர்கள் சரியாகக் கொடுக்கப்பட்டுள்ளதா எனச் சோதனை செய்திடவும். அல்லது செட்டிங் பார்ட்டிஷனை சோதனை செய்திடவும். இதற்கு எப்டிஸ்க் (FDisk) கட்டளை கொடுத்து பின் ட்ரேக் 0 ஆக பார்மட் செய்திடவும்.
11. சரியான மின்சாரம் இல்லாமல் மதர் போர்டு திடீரென முடங்குகிறது: எஸ்.எம்.பி.எஸ் செக் செய்திடவும். அல்லது ராம் மெமரி சரியாக வேலை செய்கிறதா என்பதைச் சோதனை செய்திடவும்.
உங்கள் சாப்ட்வேர் காப்பி செய்யப்பட்டது என்றால், அதிலிருந்தும் பிரச்சினை ஏற்படலாம். சி.பி.யு மேல் உள்ள சிறிய விசிறி சரியாகச் செயல்படவில்லை என்றாலும் இந்த எர்ரர் காட்டப்படும்.
12. மொனிட்டரின் ஸ்கிரீன் காட்சி ஆடுகிறது: டிஸ்பிளே கார்டு சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதைச் சோதிக்கவும். ஏதேனும் வைரஸ் புரோகிராம் உள்ளே புகுந்தும் இந்த வேலையைச் செய்திடலாம். அல்லது வீடியோ மெமரியில் பிரச்சினை இருக்கலாம்.
13. திரைக் காட்சி அதிர்கிறது: மொனிட்டரைச் சுற்றி ஏதேனும் காந்த அல்லது ரேடியோ அலைகள் உருவாகலாம்.
14. சி.பி.யு. கேபினட்டில் லேசாக ஷாக் அடிக்கிறது: கணணிக்கான மின் இணைப்பின் எர்த் இணைப்பு சரியில்லாமல் இருக்கலாம். எனவே மெயின் பவர் கேபிளைச் சோதிக்கவும்.
15. Non System Disk Error: ஹார்ட் டிஸ்க்கிற்கான சீமாஸ் செட் அப்பில் தவறு இருக்கலாம். ஹார்ட் டிஸ்க்கில் பார்ட்டிஷன் உருவாக்கப்படாமல் இருக்கலாம். ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் பார்மட் செய்யப்படாமல் இருக்கலாம்.
16. Missing Operating System: சிஸ்டம் இயக்குவதற்கான கோப்புகள் இல்லாமல் இருக்கலாம்.
17. Missing Command Interpretor: Command.com பைல் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம் அல்லது அழிக்கப்பட்டிருக்கலாம்.
18. IO Error: சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் எந்த வகை என்று தரப்பட்டிருப்பது சரியாக இல்லை. பார்மட்டிங் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட இயங்குதளம் சரியானதல்ல.
19. Divide Over Flow எர்ரர் மெசேஜ்: சில டைரக்டரிகள் அல்லது பைல்கள் கிராஷ் ஆகி இருக்கலாம். CHKDSK/F அல்லது SCANDISK பயன்படுத்தி அவற்றைச் சரி செய்திடவும்.
20. செயல்படுகையில் ஹார்ட் டிஸ்க்கிலிருந்து சத்தம் வருகிறது:சீரான மின்சாரம் தரப்படவில்லை. கேபிள்கள் சரியாகப் பொருத்தப்படவில்லை.
ஹார்ட் டிஸ்க்குகளில் கனக்டர் கேபிள் பொருத்தப்பட்டிருந்தால் எடுத்து விட்டு சரியானகேபிளைப் பொருத்தவும். ஹார்ட் டிஸ்க் பலவீனமாக இருக்க வேண்டும் அல்லது பெருமளவில் பேட் செக்டார்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.
21. ஹார்ட் டிஸ்க் ப்ராசஸ் செய்கையில் முடங்கி நிற்கிறது: CHKDSK/F அல்லது SCANDISK பயன்படுத்தி பேட் செக்டார்களைச் சோத னை செய்திடவும். நிறைய இருந்தால் மீண்டும் ஹார்ட் டிஸ்க்கினை போர்மட் செய்திடவும்.
22. Hard Disk Not Detected: பவர் கனெக்டர்களைச் சோதனை செய்திடவும். டேட்டா கேபிள்களைச் சரி பார்க்கவும். ஜம்ப்பர்களைச் சோதனை செய்திடவும்.
23. ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் காட்டப்படவில்லை: ஹார்ட் டிஸ்க்கை போர்மட் செய்த இயங்குதளம், தற்போதுள்ள மதர்போர்டுடன் இணைந்து போகவில்லை.
24. MMX/DLL FILE MISSING: இந்த கோப்புகள் பவர் திடீரென நின்று போனதால் கரப்ட் ஆகி இருக்கலாம் அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். எனவே இந்த கோப்புகளை வேறு ஒரு கணணியிலிருந்து கொப்பி செய்து இதற்கு மாற்றவும்.
பொதுவாக கணணி இயங்காமல் நின்று போய்விட்டால், உடனே ஒரு பதற்றம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என்று பல்வேறு விதமாக நாமாகவே எண்ணிக் கொள்வோம்.
அத்தகைய பதற்றத்தைத் தணிக்கவே இந்த விளக்கம் தரப்பட்டுள்ளது. எனவே பிரச்சினையின் தன்மையைப் புரிந்து கொண்டு, உங்களால் கணணி கேபினைத் திறந்து சரி செய்ய முடியவில்லை என்றால் அதற்கான டெக்னீஷியனை அழைத்து சரி செய்திடவும்.