Saturday 3 December 2011

FORMAT செய்வதற்க்கு Driver CD தடையாய் இருக்கின்றதா?








            நாம் பல காரணங்களுக்காக எமது வன்தட்டை Format செய்ய வேண்டியுள்ளது. உதாரணமாக கணினியின் வேகம் குறைந்து விட்டது, System file கோளாறு, வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதல், வன்தட்டின் பார்ட்டிஷன் அளவை மாற்ற போன்ற பல காரணங்கள்.

ஆனால் அப்படி முடிவு செய்துவிட்ட பின்னர், அந்த முடிவிலிருந்து பின் வாங்குவதற்கு முக்கியமாக ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்கக்கூடும். அது Devise driver CD கையில் இல்லையே? என்பதாக இருக்கலாம். காரணம் மிக சரியானதே. ஏனெனில் புதியதாக நீங்கள் இயங்குதளத்தை(OS) நிறுவிய பிறகு, உங்கள் Graphic card, Sound card, Web cam, Printer, Scanner போன்ற சாதனங்கள் முறையாக வேலை செய்வதற்கு, அந்தந்த கருவிகளுக்கான பிரத்தியேகமான Devise driver உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் அந்த Devise driver CD உங்களிடம் இல்லாத பொழுது, உங்கள் கணினியில் புதியதாக இயங்குதளத்தை நிறுவ அல்லது ஒரே Configuration கொண்ட உங்கள் நண்பரின் கணினிக்கு உங்கள் கணினியில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள Devise driverCopy எடுத்து கொடுக்க, மிகவும் பயனுள்ள Driver backup மற்றும் Restore மென்பொருள் Double driver ஐப் பயன் படுத்தலாம்.

    இதிலுள்ள Scan button ஐ சொடுக்கியவுடன், உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து டிவைஸ் ட்ரைவர்களும் பட்டியலிடப்படும்.

இந்த பட்டியலிலிருந்து நமக்கு தேவையான டிவைஸ் ட்ரைவர்களையோ, அல்லது எல்லாவற்றையுமோ தேர்வு செய்து Backup button ஐ அழுத்தி, பிறகு திறக்கும் Backup Drivers வசனப் பெட்டியில், இதனை எங்கு சேமிக்க வேண்டும் (பென் ட்ரைவிலும்) என்பதை கொடுத்து விட்டால் போதும்.

நீங்கள் தேர்வு செய்திருந்த அனைத்து Driverகளும் அதற்கான குறிப்பிட்ட Folderகளில் Backup ஆகியிருப்பது தனிச் சிறப்பு.

இயங்குதளத்தை மறுபடியும் நிறுவிய பிறகு இந்த Backup Folderக்குச் சென்று இங்குள்ள Double driver அப்ளிகேஷனை ரன் செய்து ட்ரைவர்களை மறுபடியும் எளிதாக Restore செய்து கொள்ளலாம். 

பென்ரைவை பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள்







பென்ரைவ் என்பது இப்பொழுது கணணி உபயோகிப்பவர்கள் அனைவரும் உபயோகித்து கொண்டு இருக்கும் ஒரு பொருளாகும். இதன் மூலம் நமக்கு தேவையான கோப்புகளை சேமித்து கொண்டு மற்றவர்களுக்கோ அல்லது வேறொரு கணணியில் பதியவோ உபயோகப் படுத்தப்படுகிறது. இந்த பென்ரைவ்களில் என்ன பிரச்சினை என்றால், இதில் எளிதில் வைரஸ் பரவும் பாதிப்பு உள்ளது. ஆகையால் நம் கணணிக்கும் வைரஸ் பரவி விடுகிறது. நம் பென்ரைவ் பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள் கீழே தரப்பட்டுள்ளன.

1. USB WRITE PROTECTOR
இந்த மென்பொருள் உங்களுடைய பென்ரைவ்களில் உள்ள கோப்புகளை மற்றவர்கள் படிக்க மட்டுமே அனுமதிக்கும். இந்த கோப்புகளை அவர்கள் திருத்துவதற்கு இந்த மென்பொருள் அனுமதிக்காது.

இதனால் உங்கள் பென்ரைவ் நீங்கள் யாருக்கு வேண்டுமென்றாலும் பயப்படாமல் கொடுத்து அனுப்பலாம். மற்றும் வைரசினால் இந்த பென்ரைவ்களை கண்டறிய முடியவில்லை.

 http://www.gaijin.at/dlusbwp.php  இந்த லிங்கினூடாக மென்பொருளை டவுன்லோட் செய்யுங்கள்

2. USB FIREWALL
பென்ரைவ் உபயோகிக்கும் பெரும்பாலானோர் உபயோகிக்கும் மென்பொருள். இது USB யில் இருந்து கணணிக்கு வைரஸ் பரவாமல் இருக்க பயன்படுகிறது. இதை DOWNLOAD செய்து இயக்கியவுடன் இந்த மென்பொருள் உங்கள் கணணியின் பின்பக்கத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்.

ஏதேனும் வைரஸ் உங்கள் கணணியில் ஊடுருவ முயற்சிக்கும் போது இந்த மென்பொருள் நமக்கு எச்சரிக்கை கொடுக்கிறது.

          http://www.net-studio.org/eng/usb-firewall.html  இந்த லிங்கினூடாக மென்பொருளை டவுன்லோட் செய்யுங்கள்

3. PANDA USB VACCINATION TOOL
பாண்டா நிறுவனம் வழங்கும் இலவச மென்பொருளாகும். இந்த மென்பொருளை நம் கணணியில் நிறுவினால் பென்ரைவில் உள்ள autorun.inf கோப்பை முற்றிலுமாக தடைசெய்கிறது.

உங்கள் பென்ரைவில் தானே இயங்கும் வசதி தடுக்கப்படுவதால் வைரஸ் பரவும் வாய்ப்பு முற்றிலுமாக குறைகிறது. இந்த மென்பொருளுக்கு நமக்கு தேவையான சோட்கட் தேர்வு செய்யும் வசதியும் உள்ளது.

       http://download.cnet.com/Panda-USB-Vaccine/3000-2239_4-10909938.html  இந்த லிங்கினூடாக மென்பொருளை டவுன்லோட் செய்யுங்கள்

4. USB GUARDIAN
இந்த மென்பொருள் உபயோகிக்க மிகவும் சுலபமானது. இதன் மூலம் பாதுகாப்பாக நமக்கு தேவையான கோப்புகளை சேமித்து கொள்ள முடியும். வைரஸ் பாதிக்கும் என்ற கவலையே வேண்டாம். இதன் மூலம் நமக்கு தேவையான கோப்பை நாம் lock செய்தும் வைத்து கொள்ளலாம்.

computerill உருவாக்கப்படும் பைல் வகைகள்







                   கணினியில் பல வகை பைல்கள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.

ஒரு சிலவற்றையே நாம் அடிக்கடி பயன்படுத்துகின்றோம் .இதனால் தான் நம் நண்பர்கள் இமெயில் மூலமாக ஏதேனும் ஒரு பில் அனுப்புகையிலும் வெப் தளங்களிருந்து ஒரு பைலை இறக்கிய சூழ்நிலையிலும் அந்த பைல் வகை என்ன?அது எதற்கு பயன்படுத்தப்படுகிறது ?எந்த அப்ளிகேஷனில் அவற்றை திறந்து பயன்படுத்தலாம் போன்ற கேள்விகளுக்கு பதிலின்றி தேடுகிறோம். இங்கு சில முக்கிய பைல் வகைகள் அவற்றின் துணைப்பெயர்களுடன் தரப்படுகின்றன. பொதுவாக அவற்றை திறக்கும் அப்ளிகேஷன் பெயரும் உடன் தரப்படுகிறது.

.avi வீடியோ பைல். விண்டோஸ் மீடியா பிளேயர்.

.bmp பட பைல் .பெயின்ட் மற்றும் அடோப் போட்டோ சொப் போன்ற படங்களை கையாளும் அப்ளிகேஷன்காளில் திறந்து பயன்படுத்தலாம்.

.cfg கொன்பிகரேசன் பைல் .இதனைத் திறந்து பயன்படுத்தக் கூடாது.

.dat டேட்டா அடங்கிய தகவல் பைல்.டேட்டாவினைக் கையாளும் எந்தவொரு அப்ளிகேசனிலும் இதனை திறக்கலாம்.

.doc டொக்கிமென்ட் பைல் .வேர்ட் தொகுப்பில் திறந்து பயன்படுத்தலாம்.

.exe எக்சிகியூட்டப்பில் பைல்.புரோக்கிராம் ஒன்றின் முதன்மையான பைல். இதில் டபிள் கிளிக் செய்தால் அந்த புரோக்கிராம் இயங்கும்.

.gif பட பைல் .பெயின்ட் மற்றும் அடோப் போட்டோ சொப் போன்ற படங்களைக் கையாளும் அப்ளிகேசங்களில் திறந்து பயன்படுத்தலாம்.

.htm இணையத்தளத்தில் வைக்கப்படும் டொக்கிமென்ட்.இன்ரநெட் எக்ஸ்புளோரர் உட்பட எந்த பிரவுசரிலும் இதனைத் திறந்து பயன்படுத்தலாம் .

.html இணையத்தளத்தில் வைக்கப்படும் டொக்கிமென்ட்.இன்ரநெட் எக்ஸ்புளோரர் உட்பட எந்த பிரவுசரிலும் இதனைத் திறந்து பயன்படுத்தலாம் .

.ini.டெக்ஸ்ட் கான்பிகர் செய்யக்கூடிய பில். நோட்பாடில் திறக்கலாம்

.jpeg/jpg பட பில். பெயின்ட் மற்றும் அடோப் போட்டோ சொப் போன்ற படங்களைக் கையாளும் அப்ளிகேசங்களில் திறந்து பயன்படுத்தலாம் .

.mov மூவி பைல்.குயிக் டைம் அப்ளிகேசனில் திறக்கலாம் .

.mpeg/mpg வீடியோ பைல். குயிக் டைம் மற்றும் விண் ஆம்ப் புரோக்கிராம்களில் திறக்கலாம்

.mp3 ஓடியோ பைல்.விண்டோஸ் மீடியா பிளேயர் மற்றும் விண் ஆம்ப் போன்ற அப்ளிகேசங்களில் திறக்கலாம்.

.pdf போர்ட்டபிள் டொக்கிமென்ட் பைல். அடோப் ரீடர் போன்ற pdf பைல்களைத் திறக்கும். எந்த சொப்வயர் புரோக்கிராமிலும் திறக்கலாம்.

.pps ஸ்லைட்.ஷாபிரசண்டேசன் பைல்.பவர்பொயின்ட் புரோக்கிராம்களில் திறக்கலாம்.

.ppt ஸ்லைட்.ஷாபிரசண்டேசன் பைல். பவர்பொயின்ட் புரோக்கிராம்களில் திறக்கலாம்.

.sys சிஸ்டம் பைல். திறக்க வேண்டாமே.

.txt டெக்ஸ்ட் பைல். நோட்பாடில் திறக்கலாம்.

.wav ஓடியோ பைல். விண்டோஸ் மீடியா பிளேயர் மற்றும் விண் ஆம்ப் போன்ற ஓடியோ
புரோக்கிராம்களில் திறந்து பயன்படுத்தலாம்.

.xls ஸ்ப்ரெட் சீட் பைல். எக்செல் தொகுப்பில் பயன்படுத்தலாம்.

.zip சுருக்கப்பட்ட பைல். வின்சிப் புரோக்கிராம் பைல்களை விரித்துக் கொடுக்கும்.

இணையத்தில் தகவல்களை இலவசமாக சேமித்து வைப்பதற்கு




இணையத்தில் கோப்புகளை சேமிப்பதற்கு பல தளங்கள் உதவி புரிகின்றன. அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் தளத்தில் 5GB கொள்ளளவு உள்ள தகவல்களை இலவசமாக சேமித்து வைக்கலாம்.கணினியில் தகவல்களை சேமித்தால் சில நேரங்களில் ஏதாவது வைரஸ் தாக்குதலினால் தகவல்களை மீட்க முடியாமல் போகலாம், ஓன்லைன் மூலம் நம்மிடம் இருக்கும் ஒளிப்படங்கள் மற்றும் பல தகவல்களை இலவசமாக சேமித்து வைக்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்று Sign in என்பதை சொடுக்கி நாம் புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கி கொண்டு நம் தகவல்களை பதிவேற்றலாம், தனித்தனியாக கோப்பறை அமைத்து வகைப்படுத்தி பதிவேற்றலாம்.
ஓடியோ, வீடியோ, பிடிஎப் என அனைத்து வகையான கோப்புகளையும் சேமிக்கலாம். எந்த நாட்டிற்கு சென்றாலும் கையில் தகவல்களை எடுக்காமல் போனாலும் கவலை இல்லாமல் இத்தளத்திற்கு சென்று நம் பயனாளர் கணக்கை கொடுத்து எங்கிருந்து வேண்டுமானாலும் நம் தகவல்களை எடுக்கலாம்.
ஆண்டிராய்டு போனில் இருந்தும் பதிவேற்றலாம், பதிவிறக்கும் வசதியும், மேலும் பல கூடுதல் வசதிகளும் உள்ளது. 5GB வரை சேமிப்பதற்கு இடம் கொடுக்கும் இந்தத்தளம் தகவல்களை ஓன்லைனில் சேமிக்க உதவும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
இணையதள முகவரி