Tuesday 29 November 2011

free sms send website

ஜிமெயிலில் Automatic Reply Mail அனுப்புவதற்கு



கூகுள் வழங்கும் இலவச மின்னஞ்சல் சேவை வசதியான ஜிமெயிலில் ஏராளமான வசதிகள் உள்ளது.அதில் ஒன்று தான் இந்த Vacation Responder வசதி. நாம் எப்பொழுதாவது வெளியூருக்கு சென்று விட்டாலோ அல்லது வேறு ஏதேனும் சூழ்நிலைகள் காரணமாக உங்களின் மின்னஞ்சலை பார்க்க முடியாமல் போகலாம்.
அந்த நேரத்தில் உங்களுக்கு அனுப்பப்படும் மின்னஞ்சலுக்கு பதில் போட முடியாமல் போய்விடும். உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி விட்டு பதில் வரும் என காத்திருப்பவர்க்கும் ஏமாற்றம் தான் மிஞ்சும்.
நீங்கள் எப்பொழுது திரும்ப வருகிறீர்களோ அப்பொழுது தான் Reply அனுப்ப முடியும். இதனால் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவதோடு மட்டுமில்லாமல் ஏதேனும் தொழில் ரீதியான மின்னஞ்சலாக இருந்தால் உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போகும்.
இந்த பிரச்சினைகளை தீர்ப்பது தான் ஜிமெயிலின் Vacation Responder வசதி. இந்த வசதியின் மூலம் ஒரு குறிப்பிட்ட செய்தியை சேமித்து இந்த வசதியை ஆக்டிவேட் செய்து விட்டால் நீங்கள் இல்லாத சமயத்தில் வரும் அனைத்து மின்னஞ்சல்களுக்கும் Automatic பதில் அனுப்பி விடும். இதனால் மின்னஞ்சல் அனுப்பிவரும் உங்களின் நிலைமையை புரிந்து கொள்வார். பிரச்சினைகள் தவிர்க்கப்படும்.
Vacation Responder வசதியை ஆக்டிவேட் செய்வது எப்படி:
முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
அடுத்து Options ==> Mail Settings பகுதிக்கு செல்லுங்கள்.
உங்களுக்கு வரும் விண்டோவில் Vacation Responder என்ற வசதி பகுதிக்கு செல்லவும்.
அதில் On என்பதை கிளிக் செய்து Message என்ற பொக்சில் நீங்கள் இல்லாத நேரத்தில் மற்றவர்களுக்கு போய் சேர வேண்டிய பதிலை Type பண்ணவும். பின் Only Send a Response to people in my contacts என்பதை கிளிக் செய்து Save Changes கொடுக்கவும்.
First Day - நீங்கள் மின்னஞ்சல் பார்க்க முடியாமால் போகும் திகதி.
Ends - இந்த வசதியை நிருத்தப்படவேண்டிய நாள்.
பிறகு அந்த கட்டத்தில் உங்களுக்கு வேண்டியதை டைப் செய்து கொள்ளுங்கள். கீழே உள்ள டிக் மார்க் தேர்வு செய்தால் உங்கள் மின்னஞ்சல் Contact List ல் இருந்து வரும் மின்னஞ்சல்களுக்கு மட்டும் Automatic Reply Email அனுப்பப்படும். வேறு மின்னஞ்சல்களுக்கு வந்தால் Automatic Reply அனுப்பாது.
அனைத்தும் தெரிவு செய்த பின்னர் கீழே உள்ள Save Changes என்ற பட்டனை கிளிக் செய்தால் இந்த வசதி ஆக்டிவேட் ஆகிவிடும். அதற்க்கான அறிவிப்பு உங்கள் மின்னஞ்சல் முகப்பு பக்கத்தில் இருக்கும்.
திரும்ப வந்து இதில் உள்ள Endnow லிங்கை அழுத்தினால் இந்த வசதி Off ஆகிவிடும்.

பென்டிரைவை RAMஆக பயன்படுத்துவதற்கு



நமது கணணிகளில் சில வேலை போதுமான அளவு RAM காணப்படாமல் இருக்கலாம். மேலதிகமாக RAM ஒன்றை பொறுத்துவதனால் அவற்றின் விலை மிக அதிகமானதாகவே இருக்கின்றன. அதேவேளை பென்டிரைவ்களின் விலை குறைவானதே.முதலில் Windows Xp யில் எவ்வாறு பென்டிரைவ் ஒன்றை RAM ஆக பயன்படுத்தி கணணியின் performanceயை அதிகரிக்கலாம்.
முதலில் பென்டிரைவ் ஒன்றை(குறைந்தது 1GB) USB port வழியாக பொறுத்துங்கள்.
1. பின் My Computer ல் Right Click செய்து Properties தெரிவு செய்யுங்கள்.
2. அதிலுள்ள Advanced பகுதியில் Performance இல் உள்ள Settings பொத்தானை அழுத்துங்கள்.
3. அதன் பின் தோன்றும் வின்டோவில் Advanced பகுதியில் Change பொத்தானை Click செய்து பென்டிரைவ்வை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
4. பின் Custom Size என்பதை Click செய்து பயன்படுத்த வேண்டிய அளவை டைப் செய்யுங்கள். (Initial மற்றும் Max எனும் இரு பிரிவிலும் ஒரே அளவை வழங்குங்கள்).
5. பின்னர் Set செய்து உங்கள் கணணியை Restart செய்யுங்கள் அல்லது ReadyBoost அல்லது eboostr மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின் பென்டிரைவ்வை பொறுத்தி eboostr control pannel இல் பென்டிரைவ்வை add செய்து பயன்படுத்தலாம். (Restart செய்தல் கட்டாயமானதே)
6. Windows 7 யில்  பென்டிரைவ் ஒன்றை RAM ஆக பயன்படுத்தலாம். உங்கள் கணணி 256GB RAM கொண்டிருந்தால் 8 ReadyBoost Devices களை ஒவ்வொன்றும் 32GB கொள்ளவை உடை பென்டிரைவ்களாக பயன்படுத்தலாம். எனவே Windows 7 இல் மொத்தமாக 256GB RAM வரைக்கும் பயன்படுத்தலாம்.
உங்கள் பென்டிரைவ்வில் Right Click செய்து Properties தெரிவு செய்யுங்கள்.
அதில் ReadyBoost பகுதியில் Use This Device ஐ தெரிவு செய்யுங்கள்.
Space to reserve for system speed என்ற இடத்தில் கூட்டி விடவும்.
இப்போது Apply செய்து விடுங்கள், உங்கள் பென்டிரைவ்வின் Performance உயர்ந்துவிடும்.