Friday 30 September 2011

Timeline Users: பேஸ்புக்கில் உங்களை Unfriend செய்தவர்களை சுலபமாக கண்டறிவதற்கு


பேஸ்புக் தளம் Timeline எனப்படும் புதிய தோற்றத்தை அனைவருக்கும் தெரிவித்து உள்ளது.
இந்த புதிய தோற்றத்தின் நோக்கம் பேஸ்புக்கின் அனைத்து தகவலும் ஒரே பக்கத்தில் இருக்கும். எதற்காவும் உள்ளே செல்ல வேண்டிய அவசியமில்லை மற்றும் இந்த புதிய தோற்றத்தில் சில வசதிகள் மறைந்தும் உள்ளது.
அதில் ஒன்று தான் உங்களை நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கியவர்களை பார்க்கும் வசதி. அதன் படி உங்களை நீகியவர்களை எப்படி காண்பது என கீழே பார்ப்போம்.
முதலில் உங்கள் பேஸ்புக்கின் profile பகுதிக்கு செல்லுங்கள். அதில் உங்கள் ஸ்க்ரோல் பாரை நகர்த்தி Made 16 New friends என்பது போல இருக்கும் பகுதிக்கு செல்லுங்கள்.
அதில் Made friends என்று இருக்கும் லிங்கில் கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு இன்னொரு popup விண்டோ ஓபன் ஆகும்.
இந்த மாதத்தில் உங்களுக்கு நண்பர்களாக சேர்ந்தவர்கள் பட்டியல் இருக்கும். அதில் ஒவ்வொரு நபருக்கும் நேராக Friends என்ற ஒரு பட்டன் இருக்கும்.
ஆனால் உங்களை யாராவது பட்டியலில் இருந்து நீக்கி இருந்தால் அவர் பெயருக்கு நேராக Add Friend என்ற பட்டன் இருப்பதை பார்க்கலாம்.
இந்த பட்டன் இருந்தால் அவர் உங்களை அவரின் நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளார் என அறிந்து கொள்ளலாம்.

இணைய உலகில் கோப்புகளை சேமிப்பதற்கு


வன்தட்டு, சீடி, டிவிடி, ப்ளாஷ் ட்ரைவ் என எந்த மீடியாவில் நாம் பைல்களைப் பதிந்து சேமித்து வைத்தாலும் என்றாவது ஒரு நாள் அந்த கோப்புகள் நமக்குக் கிடைக்காமல் போகலாம்.
நம் வன்தட்டு கெட்டுப் போகாது என்ற எண்ணத்தில் கோப்புகளை கணணியிலேயே பதிந்து வைக்கிறோம். ஆனால் நகர்ந்து செயல்படும் வகையில் அது இயங்குவதால் நாம் எதிர்பாராத ஒரு நாளில் அதன் இயக்கம் முடங்கிப் போய் கோப்புகளை நம்மால் பெற இயலாமல் போய்விடுகிறது.
என்ன செய்தாலும் கோப்புகள் கிடைப்பது இரண்டாம் பட்சம் தான் என்று சொல்லும் அளவிற்கு நிலைமை மோசமாகிறது. மற்ற மீடியாக்களின் வாழ்நாளும் அதே போல் தான்.
இதற்கான பல தீர்வுகளில் ஒன்றாக கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில் ஒரு தீர்வு கிடைக்கிறது. பல இணைய தளங்கள், நம் கோப்புகளை பதிந்து சேவ் செய்து வைத்திட வசதிகளை நமக்குத் தருகின்றன. ஓரளவில் கோப்புகளை சேமித்து வைத்திட இந்த வசதி இலவசமாகவே தரப்படுகிறது.
இந்த வகையில் சி.எக்ஸ்(cx) என்னும் இணைய தளம் இயங்குகிறது. இந்த தளத்தின் இணைய முகவரி: http://www.cx.com/ . இந்த தளம் சென்று நம் மின்னஞ்சல் முகவரி, பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சீட்டு கொடுத்துப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் 10 ஜிபி இடம் தரப்படுகிறது. பதிந்தபின் இந்த தளத்தில் லொகின் செய்து நாம் பதிந்து சேவ் செய்திட விரும்பும் கோப்புகளை நம் கணணியிலிருந்து பதிவேற்றம் செய்திடலாம். மிக எளிதாக இதனை மேற்கொள்ளலாம். நாம் எத்தனை கோப்புகளை பதிவேற்றம் செய்துள்ளோம் என்ற கணக்கும் காட்டப்படுகிறது.
இந்த தளத்தில் எந்த ஒரு வகை கணணியிலிருந்தும் கோப்புகளை பதிவேற்றம் செய்திடலாம். விண்டோஸ், மேக் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். மேலும் இணைய இணைப்பு வசதி கொண்ட மொபைல் போன்களிலிருந்தும் பதிவேற்றம் மற்றும் தரவிறக்க பணிகளை மேற்கொள்ளலாம்.
இதனால் நாடு விட்டு நாடு சென்றாலும், ஓரிடத்தில் இணைய இணைப்பே கிடைக்கவில்லை என்றாலும் கிடைக்கும் இடத்தில் இருந்து கோப்புகளை கையாளலாம்.
பின்னர் இதனை மீண்டும் நம் கணணிக்கு தரவிறக்கம் செய்வதும் எளிதாகவும், வேகமாகவும் நடைபெறுகிறது. ஒவ்வொரு பெயர் பதிவிற்கும் 10 ஜிபி இடம் தரப்படுவதால் தனி நபர் பயன்பாட்டிற்கு இது மிகவும் உகந்தது.
எந்த இடத்திலிருந்தும், எந்த கணணியிலிருந்தும் இந்த கோப்புகளை தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்பதால், அடிக்கடி பயணம் மேற்கொள்வோர், தங்கள் கோப்புகளை பாதுகாப்பாக வைத்திட இது ஒரு சிறந்த வசதி ஆகும்.

உங்களைப் பற்றி அறிய உதவும் இணையம்


எல்லோருக்குமே மற்றவர்கள் தங்களை பற்றி என்ன நினைக்கின்றனர் என்பதை அறிவதில் ஆர்வம் இருக்கும். சிலர் வெளிப்படையாகவே கேட்டு விடுவார்கள்.
இன்னும் சிலர் மற்றவர்கள் நினைக்காததை எல்லாம் நினைப்பதாக நினைத்து கொண்டு கவலைப்பட்டு கொண்டிருப்பார்கள்.
மற்றவர்கள் நினைப்பது பற்றி அலட்டிக்கொள்ளாதவர்களும் இருக்கவே செய்கின்றனர். இவை ஒருபுறம் இருக்க, உங்களை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியென்றால் அதற்காக என்றே ஒரு இணையதளம் இருக்கிறது.
ஜட்ஜ்.மீ என்னும் அந்த தளம் சக இணையவாசிகள் உங்களை பற்றி என்ன நினைக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள வழி செய்கிறது.
மற்றவர்களின் எண்ணங்களை அறிய நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த தளத்தில் உங்கள் புகைப்படத்தை இடம்பெற செய்வது மட்டும் தான். அதன் பிறகு உறுப்பினர்கள் உங்களை பற்றிய அபிப்ராயத்தை தெரிவிப்பார்கள்.
பர்ஸ்ட் இம்ப்ரஷன் ஈஸ் தி பெஸ்ட் இம்ப்ரஷன் என்று ஆங்கிலத்தில் ஒரு சொல் வழக்கு உண்டல்லவா? அதே போலவே உங்களை பார்த்ததும் தோன்றக்கூடிய சித்திரத்தை இந்த தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொருவருக்கும் உங்களை பார்க்கும் போது எத்தகைய எண்ணம் ஏற்படுகிறது என்பதை அவர்கள் உங்கள் புகைப்படத்தை பார்த்ததும் தெரிவிக்கும் கருத்துக்கள் வழியே அறிந்து கொள்ளலாம்.
எப்படியும் தினந்தோறும் நம்மை எத்தனையோ பேர் பார்க்கின்றனர். அவர்களுக்கு எல்லாம் நம்மைப்பற்றி ஒரு அபிப்ராயம் தோன்றும். அந்த அபிப்ராயங்களை தெரிந்து கொள்ள இந்த தளம் உதவுகிறது.
அபிப்ராயம் என்பதும் பக்கமாக கருத்துக்களோ அல்லது விமர்சனங்களோ கிடையாது. அபிப்ராயங்கள் அழகாக வரைபடத்தின் வாயிலாக உணர்த்தப்படுகின்றன.
ஒவ்வொரு புகைப்படத்தின் அருகிலும் இந்த வரைபடம் தோன்றுகிறது. சகஜமாக பேசக்கூடியவர், கூச்ச சுபாவம் உள்ளவர், புத்திசாலியானவர், அழுத்தமானவர் என நான்கு காரணிகளின் அடிப்படையில் வரைப்படத்தில் ஒருவரை பற்றிய மதிப்பீடு காட்டப்படுகிறது.
புகைப்படத்தை பார்த்ததும் தோன்றக்கூடிய எண்ணங்களை இனையவாசிகள் வரைபடத்தின் மீது கிளிக் செய்து உணர்த்தலாம். இணையவாசிகளின் அபிப்ராயம் சேர வரைபடத்தில் அவற்றின் முடிவுகளையும் அழகாக காணலாம்.
தேர்தல் போன்ற நேரங்களில் கட்சிகளின் செல்வாக்கு அலசி ஆராயப்பட்டு வரைபடத்தின் மீது காட்டப்படுவது போல நீங்களும் உங்களைப்பற்றிய அலசலை வரைபடமாக காணலாம்.
ஆர்வம் உள்ளவர்கள் இந்த தளத்தில் புகைப்படத்தை சமர்பித்து மற்றவர்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளலாம். அதே போல இந்த தளத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள மற்றவர்களின் புகைப்படங்களையும் பார்த்து தங்களுக்கு தோன்றும் முதல் எண்ணத்தை தெரிவிக்கலாம்.
இந்த மதிப்பீட்டு தளத்தை பார்க்கும் போது மற்ற மதிப்பீட்டு தளங்களுக்கு எல்லாம முன்னோடியாக கருத்தப்படும் ‘ஹாட் ஆர் நாட்’ தளத்தின் நினைவு வரலாம்.
ஹாட் ஆர் நாட் தளம் ஒருவர் அழகாக இருக்கிறாரா இல்லையா என்பதை தெரிந்து கொள்வதற்காக அவர்களின் புகைப்படத்தை பார்த்து மற்றவர்கள் மதிப்பெண்கள் அளிப்பதை அடிப்படையாக கொண்டது. இந்த தளம் சுவாரஸ்யமானது என்றாலும் இதன் மீது பல்வேறு விமர்சனங்கள் உண்டு.
ஆனால் ஜட்ஜ்.மீ தளம் அவ்வாறு இல்லாமல் எவருக்குமே ஆர்வம் இருக்ககூடிய தங்களைப்பற்றிய மற்றவர்களின் முதல் எண்ணங்களை அறிய உதவுகிறது. இதன் அடிப்படையில் ஒருவர் பொதுவாக தங்களைப்பற்றி அறிந்து கொண்டு தேவை என்றால் தங்களை மாற்றி கொள்ளவும் முற்படலாம்.

குரோம் உலாவியில் தரவிறக்க இடத்தை மாற்றுவதற்கு



இன்றைய இணைய உலகில் கூகுள் குரோம் உலாவி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
கூகுள் குரோம் உலாவியில் Download Location மாற்றுவது எவ்வாறு? என்று பார்ப்போம். உங்கள் உலாவியை திறந்து மேலே சிவப்புக்கட்டமிட்ட பகுதியை கிளிக் செய்யவும்.
அதில் Options. ஐ தெரிவுசெய்யுங்கள். அடுத்து உங்களுக்கு புதிய தாவலில் ஒரு விண்டோ வரும். அதில் இடது பக்கம் உள்ள Under the Hood என்பதை கிளிச் செய்திடவும்.
அதில் பல உபதலைப்புக்கள் தரப்பட்டிருப்பதை பாருங்கள். அங்கே Download என்ற உபதலைப்பில் Download location என இருப்பதை கண்டறியவும்.
அங்கே உள்ள Browse button ஐ கிளிக் செய்து உங்களுக்கு விரும்பிய Location ஐ தெரிவு செய்யவும்.
அதற்கு கீழே உள்ள Ask where to save each file before downloading என்ற வசனத்துடன் ஒரு டிக் பெட்டி இருப்பதை கவனித்து அதையும் டிக் செய்யவும்.
இனி ஒவ்வொரு தரவிறக்கத்தின் போதும் Download location ஐ கேட்கும்.
இவ்வாறு செய்தால் நீங்கள் தரவிறக்கிய கோப்புகளை கணணி முழுவதும் தேடி அலைய வேண்டியதில்லை.

Thursday 29 September 2011

திறந்த மடல் எழுத உதவும் இணையம்

அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கோ அல்லது கிரிக்கட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கருக்கோ திறந்த மடலை எழுத விரும்புகிறீர்களா? ஆம் என்றால் மை ஓபன் லெட்டர் உங்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தளத்தின் வாயிலாக நீங்கள் உலகில் உள்ள யாருக்கு வேண்டுமானாலும் திறந்த மடல் எழுதலாம். அண்ணா போன்ற தலைவர்கள் தம்பிக்கு என்று மடல்களை எழுதியுள்ளனர்.
நாளிதழ்களில் அவ்வப்போது பிரபலங்கள் முக்கிய பிரச்னை குறித்து திறந்த மடல்களை எழுதுவதுண்டு. சில நேரங்களில் பத்திரிகைகளில் தொண்டர்களின் கடிதங்களும் திறந்த மடல்களாக வெளியாவதுண்டு.
திறந்த மடல்கள் மூலம் முக்கிய விஷயங்கள் குறித்து வலுவான கருத்துக்களை தெரிவிக்கலாம். ஆனால் மின்னஞ்சல் யுகத்தில் கடிதங்கள் எழுதும் பழக்கமே அரிதாகி வருகிறது. இந்நிலையில் மின்னஞ்சல் வடிவில் திறந்த மடல்களை எழுதும் வசதியை ஏற்படுத்தி தரும் தளமாக மை ஓபன் லெட்டர் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
எதற்காக வேண்டுமானாலும் யாருக்காக வேண்டுமானாலும் இந்த தளத்தில் இருந்து திறந்த மடலை எழுதலாம். யாருக்கு கடிதத்தை எழுதுகிறீர்கள் என குறிப்பிட்டு உங்கள் பெயரையும் குறிப்பிட்டு கடிதத்தை எழுத துவங்கலாம்.
கடிதம் எழுதுவதற்கான பகுதியில் வலைப்பதிவுகளில் காணப்படக்கூடிய அனைத்து வசதியும் இருக்கின்றன. கடித வரிகளை தேவையான இடங்களில் அடிக்குறிப்பு இடுவது, எழுத்துருக்களை மாற்றுவது, வண்ண எழுத்துக்களை சேர்ப்பது, புகைப்படங்களை இணைப்பது என பல்வேறு வசதிகள் இருக்கின்றன. தேவை ஏற்பட்டால் செய்திகளை மேற்கோளாகவும் இணைக்கலாம்.
ஆக வெறும் வரிகளாக இல்லாமல் தேவைக்கேற்ப அழுத்தங்களை கொடுத்து அழகான கடிதத்தை உருவாக்கலாம். இந்த கடிதத்தை இணைய வெளியில் பதிப்பிப்பதன் மூலம் திறந்த மடலை உலகின் பார்வைக்கு சமர்பிக்கலாம்.
கடிதத்தின் கீழ் மற்றவர்கள் அது குறித்து கருத்து தெரிவிப்பதற்கான வசதியும் இருக்கிறது. ஆர்வம் உள்ளவர்கள் இந்த தளம் மூலமாக திறந்த மடல்களை எழுதலாம். மற்றவர்கள் எழுதியுள்ள கடிதங்களை படித்து பார்த்து கருத்து தெரிவிக்கலாம்.
இன்னும் மகத்தான கடிதங்கள் எதுவும் இந்த தளத்தில் சமர்பிக்கப்படவில்லை என்றாலும் இந்த தளம் மகத்தான உரையாடலுக்கு வழி வகுக்கும் சாத்தியம் கொண்டிருக்கிறது.
இணையத்தில் கருத்து தெரிவிக்கவும் விவாதத்தில் ஈடுபடவும் எண்ணற்ற வழிகள் இருந்தாலும் கடிதம் மூலம் கருத்துக்களை தெரிவிக்கும் போது அதன் வீச்சும் பரப்பும் தனித்துவம் மிக்கதாக அமையலாம்.
ஒரு வலைப்பதிவிலோ, டிவிட்டர் குறும்பதிவிலோ அல்லது பேஸ்புக் அப்டேட்டிலோ சொல்ல முடியாததை கடிதம் மூலம் சொல்லலாம். உலகின் கவனத்தை ஈர்க்கலாம்.
ஏற்கனவே குறிப்பிட்ட பிரச்னை தொடர்பாக உலகின் கவனத்தை ஈர்க்க இணையவாசிகளின் ஆதரவை திரட்ட பெட்டிஷன்ஸ் ஓன்லைன் போன்ற இணையம் வழி மனு போடும் தளங்கள் இருக்கின்றன. அந்த வகை தளங்களின் நீட்சியாக இந்த தளத்தை கருதலாம்.

ASCII வரைபடம் வரைய உதவும் இணையம்


ASCII(American Standard Code for Information Interchange) ஒவ்வொரு விசைக்கும் இணையான ஒவ்வொரு Character-ஐ வைத்து எளிதாக சில நிமிடங்களில்(Ascii art) படம் வரையலாம்.
இத்தளத்திற்கு சென்றவுடன் தோன்றும் விண்டோவில் இடது பக்கம் இருக்கும் வடிவங்களில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து வரையத் தொடங்கலாம்.
ஒவ்வொன்றையும் தேர்ந்தெடுத்து பலகையில் வரையும் அந்த டூல் பற்றி அறிந்து கொள்ளலாம். எல்லாம் எழுத்துக்களை கூட நாம் சேர்க்க விரும்பும் கோணத்தில் உருவாக்கலாம்.
எல்லாம் வரைந்து முடித்த பின் Export என்பதை சொடுக்கி எளிதாக கொப்பி செய்யலாம், Html கோப்பாக மாற்ற விருப்பம் உள்ளவர்கள் Export Html என்பதை சொடுக்கி எளிதாக சேமிக்கலாம்.

உங்களுக்கு தேவையான ரிங்டோன்களை நீங்களே உருவாக்குவதற்கு



சில பாடல்கள் கேட்க அருமையாக இருக்கும். நாம் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்களும் இருக்கும். சில பாடல்களில் இடையில் வரும் இசை நன்றாக இருக்கும்.
அதைப்போல சில பாடல்களில் இடையில் வரும் பாடல்வரிகள் அருமையாக இருக்கும். நாம் நமது தேவைக்கேற்ப பாடல்வரிகளை, இசையை நமது செல்போனில் ரிங்டோனாக வைத்துக் கொள்ளலாம்.
அவ்வாறு வைத்துக்கொள்ள நமக்கு ரிங்டோன் மேக்கர் தேவைப்படும். 2 எம்.பி கொள்ளளவு கொண்ட இந்த சின்ன மென்பொருளினை பதிவிறக்கம் செய்யஇங்கு கிளிக் செய்யவும். இதனை நிறுவியதும் உங்களுக்கு ஒரு விண்டோ ஒப்பன் ஆகும்.
தேவையான பாடலை நீங்கள் உங்கள் கணணியில் இருந்து தேர்வு செய்யவும். பாடலை ஒலிக்க விடுங்கள். தேவையான இடம் வந்ததும் இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்தி வையுங்கள். மீண்டும் ஒரு முறை பாடலை ஒலிக்க விடுங்கள். சரியாக வருகின்றதா என பாருங்கள். அடுத்துள்ள Next அழுத்துங்கள்.
Save Ringtone to My Computer கிளிக் செய்து பாடலை எங்கு சேமிக்க விரும்புகின்றீர்களோ அங்கு சேமியுங்கள்.
உங்களுக்கு Processing நடைபெறும். ரிங்டோன் தயாரானதும் அடுத்து நீங்கள் சேமித்து வைத்துள்ள இடத்தில் சென்று பாருங்கள். நீங்கள் உருவாக்கிய ரிங்டோன் அங்கு இருக்கும். அதிலிருந்து உங்கள் செல்போனுக்கு ரிங்டோனை மாற்றிக் கொள்ளுங்கள்.

Wednesday 28 September 2011

vVLC மீடியா பிளேயரில் புகைப்படம் எடுப்பதற்கு



கணணி உபயோகிக்கும் அனைவருக்கும் VLC மீடியா பிளேயரை பற்றி அறிந்திருப்போம். கணணியில் வீடியோ, ஓடியோ கோப்புகளை இயக்க உதவும் இலவச மென்பொருள்.
இந்த மென்பொருளில் ஏராளமான வசதிகள் உள்ளது மற்றும் இந்த மென்பொருள் வெறும் பிளேயராக மற்றும் இல்லாமல் சில மற்ற வசதிகளையும் கொண்டுள்ளது.
ஆனால் பெருமாலானவர்கள் அந்த வசதிகள் இருப்பது கூட தெரியாமல் அதற்கென தனித்தனி மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இன்று இரண்டு வசதிகளை பற்றி பார்ப்போம்.
வீடியோவில் இருந்து Snap Shot எடுப்பது எப்படி: VLC மீடியா பிளேயரில் ஏதேனும் ஒரு வீடியோ ஓடிகொண்டிருக்கிறது என வைத்து கொள்வோம். அந்த வீடியோவில் குறிப்பிட்ட ஒரு காட்சியை புகைப்படமாக Snapshot எடுக்க வேண்டுமென்றால் அந்த குறிப்பிட்ட காட்சி வந்தவுடன் மேனுபாரில் Video - Snapshot கொடுத்தால் போதும். உங்களுக்கு பிடித்த காட்சி புகைப்படமாக உங்கள் கணணியில் சேமிக்கபட்டுவிடும்.
snapshot எடுத்த பகுதியின் மாதிரியை சிறியதாக இடது பக்கத்தின் மேலே உங்களுக்கு காட்டும் மற்றும் புகைப்படம் சேமிக்கும் இடத்தையும் உங்களுக்கு காட்டும்.
Snapshot போர்மட் மாற்ற: டீபால்டாக png போர்மட்டில் உங்களுடைய Snapshot சேமிக்கப்படும். இதனை JPG போர்மட்டிற்கு மாற்ற விரும்பினால் Tools - Preferences - (or) Ctrl+P கொடுத்து வரும் விண்டோவில் Video என்பதை தேர்வு செய்யவும். அதில் Snap shot பகுதியில் புகைப்பட போர்மட்டை மாற்றி Apply பட்டனை அழுத்துங்கள்.
ஒரே கிளிக்கில் Snapshots எடுக்க: ஒரே கிளிக்கில் snapshot எடுக்கும் வசதி வேண்டுமெனில் View - Advanced Controls தேர்வு செய்தால் கீழே சில பட்டன்கள் தெரியும். இரண்டாவதாக உள்ள Camera ஐக்கான் பட்டனை அழுத்தினால் ஒரே க்ளிகிங் snapshot எடுக்கும் வசதியை பெறலாம்.

உங்கள் தளத்திற்கான SEO மார்க்கை ஓன்லைன் மூலம் தெரிந்து கொள்வதற்கு



ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த வகையில் அல்லது பலரிடம் கேட்டு தெரிந்து கொண்டு நம் தளத்திற்கு உருவாக்கும் Search Engine Optimization சிறப்பாக செயல்படுகிறதா என்பதை ஓன்லைன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ஓன்லைன் மூலம் நாம் பல தளங்களை பார்க்கிறோம். SEO -ல் நாங்கள் கெட்டிக்காரர்கள் என்று சொல்லும் அனைத்து தளங்களையும் நாம் ஓன்லைன் மூலம் SEO Explorer மூலம் சோதித்துப் பார்க்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்று Enter Url என்று கொடுத்திருக்கும் கட்டத்திற்குள் எந்த வலைப்பூவை சோதித்துப்பார்க்க வேண்டுமோ அதன் தள முகவரியை கொடுத்து Go என்ற பொத்தானை சொடுக்கினால் போதும்.
அடுத்து வரும் திரையில் நமக்கு Overview என்ற Tab-ல் நம் தளத்தின் ஸ்கோர் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.Title and Meta மற்றும் Kewords என்னவெல்லாம் கொடுத்திருக்கிறோம் என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
எந்தவிதமான பயனாளர் கணக்கும் தேவையில்லை. துல்லியமான SEO முடிவுகளை உடனுக்கூடன் தெரிந்து கொள்ளலாம்.

Tuesday 27 September 2011

ஒருமுறை மட்டும் படிக்கக்கூடிய மின்னஞ்சலை அனுப்புவதற்கு


[ செவ்வாய்க்கிழமை, 27 செப்ரெம்பர் 2011, 12:39.21 பி.ப GMT ]
அவசரத்தில் மின்னஞ்சல் அனுப்பிய பின் ஏன் அனுப்பினோம் என்று நினைத்து வருத்தப்படுபவர்கள் பலர்.
அதற்கு தீர்வாக தான் ஒரு இணையதளம் உள்ளது. கீழே உள்ள சுட்டியில் சென்றவுடன் தோன்றும் விண்டோவில் சென்று  அனுப்ப வேண்டிய தகவலை தட்டச்சிடவும்.
அதன் பின் தங்களுக்கு ஒரு தொடுப்புக் கிடைக்கும். அதை தகவல் சேர வேண்டியவருக்கு எப்படியாவது அனுப்பிவிடுங்கள்.
அவர் திறந்து வாசிக்கலாம் அதன் பிறகு அவர் மூடி விட்டுத் திறந்தால் மறுபடியும் அங்கே தகவல் இருக்காது.

ஜிமெயில் தரும் புத்தம் புதிய வசதிகள்


கூகுள் குழுமத்திலிருந்து வெளிவரும் ஜிமெயில் புத்தம் புதிய வசதிகளை கொண்டிருக்கிறது.
இவற்றை எந்தக் கட்டணமும் இன்றி நாம் பெற முடியும். மெயில் செட்டிங்ஸ் பிரிவில் லேப்ஸ் தளத்தில் இவற்றை இயக்க செட் செய்திட முடியும். இதன் மூலம் நம் ஜிமெயில் பயன்பாட்டினை நம் விருப்பப்படி அமைக்க முடியும். அத்தகைய சில வசதிகளை இங்கு காணலாம்.
1. ஆயத்த பதில்கள்(Canned Responses): இதனைப் படிக்கையில் ஏதோ நாம் விடுமுறையில் ஊருக்குச் செல்கையில் அல்லது மின்னஞ்சல் பார்க்க இயலாத நாட்களில் நமக்கு வரும் அஞ்சல்களுக்கான பதில்களைத் தானாக அனுப்பும் வசதி போல் தெரியும்.
இது அதுமட்டுமல்ல வழக்கமாக நாம் அனுப்ப வேண்டிய பதில்களை அல்லது வாடிக்கையாளர்களுக்கான செய்திகளை ஆயத்தமாகத் தேவைப்படும்போது அனுப்ப தயாரித்து வைக்கலாம்.
2. நிகழ்வுகள் நாட்காட்டி(Google Calendar Widget): இது ஒரு டெம்ப்ளேட் இணைப்பது போல. நமக்கு நாமே எழுதி வைக்கும் நினைவூட்டல் கட்டம். இதில் நாம் மேற்கொள்ள வேண்டிய நிகழ்வுகளை எழுதி அமைக்கலாம். இதனை கூகுள் காலண்டர் வசதி என்றும் அழைக்கலாம். இது ஜிமெயில் தளத்தின் இடதுபக்கத்தில் ஒரு கட்டமாக அமைக்கப்படும்.
3. கூகுள் முன் நினைவூட்டி(Google Docs Widget): உங்கள் நண்பர்கள் அல்லது தலைமை நிர்வாகியிடமிருந்து உங்கள் கவனத்திற்கு கூகுள் டாக்ஸ் அனுப்பப்பட்டால் உங்கள் ஜிமெயில் தளத்தில் அதன் முன் தோற்றக் காட்சி ஒன்று காட்டப்படும். இதனால் நீங்கள் நேரங்கடந்து இதனைக் காணும் சூழ்நிலை தவிர்க்கப்படும்.
4. அஞ்சலில் இடம் காட்டும் மேப்(Google Maps preview): உங்கள் இமெயில் முகவரி ஏட்டில் உள்ள முகவரிகளுக்கான ஊர்கள் சார்ந்த சிறிய மேப் ஒன்று காட்டப்படும்.
5. படங்களை இணைக்க(Inserting Images): அஞ்சல் செய்தியிலேயே புகைப்படங்கள் மற்றும் படங்களை இடைச் செருகலாக அமைப்பது. இதன் மூலம் அந்த படங்களுக்கான குறிப்புகளையும் நாம் இணைக்கலாம். மற்றபடி நாம் படங்களை இணைப்பாகத்தான் அமைக்க முடியும்.
6. படித்ததாகக் குறித்துக் கொள்(Mark as Read message): நமக்கு வரும் அஞ்சல் செய்திகள் அனைத்தையும் படித்துக் கொண்டிருக்க முடியாது. சிலவற்றைத் திறந்து படிக்கும் எண்ணமும் நமக்கு இருக்காது. திறக்காத அஞ்சல்கள் படிக்காதவையாகத் தோற்றமளிக்கும். எனவே இவற்றைப் படிக்காமலேயே, படித்ததாகக் குறித்துக் கொள்ளும் வசதியை இது தருகிறது.
7. அஞ்சல் முன் தோற்றம்(Message Sneak Peek): இந்த வசதி குறித்தும் சென்ற வாரம் எழுதப்பட்டது. மின்னஞ்சல் செய்தியினைத் திறக்காமலேயே அதில் உள்ளதைக் காட்டும் வசதி இது. இதிலிருந்து என்ன செய்தி உள்ளது என்பதனை நாம் அதனைத் திறக்காமலேயே உணர முடியும்.
8. மவுஸ் வழி உலா(Mouse Gestures): மவுஸைப் பிடித்தவாறே அதனை அசைத்து மின்னஞ்சல் பட்டியலில் செல்லும் வசதி இது. ரைட் கிளிக் செய்தவாறே இடது பக்கம் மவுஸை நகர்த்தினால் முந்தைய மின்னஞ்சலுக்குச் செல்வீர்கள்.
வலது பக்கம் நகர்த்தினால் அடுத்த அஞ்சலுக்குச் செல்லலாம். மேலே நகர்த்தினால் இன்பாக்ஸ் செல்லலாம். இப்படியே பல நகர்த்தல்களை மேற்கொள்ளலாம்.
9. அனுப்பியவரின் நேரங்காட்டி(Sender’s Time Zone): மின்னஞ்சல் மூலம் நாம் பன்னாட்டளவில் உள்ள நண்பர்களுடன் தொடர்பு கொள்ள முடிகிறது. அஞ்சலைப் பார்த்தவுடன் அவருடன் பேசலாம் என்று தோன்றுகிறதா? அந்த நேரத்தில் அவர் நாட்டில் அவர் ஊரில் என்ன நேரம்? தூங்கும் நேரமா? என்ற கேள்விகளுக்கு இந்த வசதி பதிலளிக்கிறது.
10. அனுப்பியதை நிறுத்து(Undo Send): அஞ்சல் ஒன்றை அனுப்பியவுடன் அடடா, அனுப்பியிருக்கக் கூடாதே என்று எண்ணுகிறீர்களா? சில நொடிகள் எனில் அது அனுப்பப்படுவதை நிறுத்த, இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.

ஆசிரியர்களுக்கு திறமையான ஐடியாக்களை கொடுக்கும் இணையம்


கல்வி கண் திறக்கும் கடவுள் என்று சொல்லக்கூடிய ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் பல வகையான ஐடியாக்கள் மற்றும் செயல் முறைகளை தெளிவாக எடுத்துச்சொல்ல ஒரு தளம் உள்ளது.
ஒரு கடினமான பாடத்தை எப்படி நடத்தினால் மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்வார்கள் என்பதில் தொடங்கி வொர்க்‌ஷீட் எப்படி உருவாக்க வேண்டும் என்பது வரை அனைத்து விதமான ஐடியாக்களையும் நமக்கு அளிப்பதற்காக ஒரு பயனுள்ள தளம் உள்ளது.
A to Z Teacher Stuff இது தான் இணையதளத்தின் பெயர் ஆசிரியர்களுக்கு எப்படி அவர்களின் அறிவை மேலும் பட்டை தீட்டலாம் என்று சொல்லும் இத்தளத்திற்கு சென்று நாம் Word Shapes Worksheet Generator, Word Search Maker, Handwriting Worksheet Generator, Leveled Books Database, Science Experiments Teacher Tools ,Teacher Tips, Lesson Plans, Printables & Worksheets என அனைத்தும் பயன்படுத்தலாம் தேவையான பிரிண்ட் செய்த பேப்பரை தரவிறக்கம் செய்யலாம்.
ஆசிரியர்களுக்கு பாடத்தில் ஏழும் சந்தேகங்களுக்கு விடை அளிக்க பல திறமையான ஆசிரியர்கள் உள்ளனர். ஒவ்வொரு நாளையும் எவ்வாறு திட்டமிட்டு பாடம் நடத்த வேண்டும்.
பாடத்தில் உள்ள முக்கியமானவற்றை மாணவர்கள் மனதில் பதியும்படி சொல்ல எண்னென்ன நுணுக்கங்கள் எல்லாம் உள்ளன என்பதை அழகாக பட்டியலிட்டு சொல்கிறது இத்தளம்.

Monday 26 September 2011

வாழ்க்கை கையேட்டை உருவாக்கும் இணையம்


திருமணம் போன்ற விழாக்களுக்கு புத்தகங்களை பரிசளிப்பது நல்ல விஷயம் தான். ஒரு சிலர் இதற்காக என்று வாழ்க்கை வழிகாட்டி புத்தகங்களாக தேடிப்பிடித்து பரிசளிப்பது உண்டு.
சரி இத்தகைய வாழ்க்கை வழிகாட்டி புத்தகத்தை நீங்களே உருவாக்கி அதனை நண்பர்களுக்கு விழாக்களின் போது பரிசளிக்க முடிந்தால் எப்படி இருக்கும்? “விஸ்டம் ஆப் அதர்ஸ்” இணையதளம் இந்த அற்புதத்தை தான் சாத்தியமாக்குகிறது.
விஸ்டம் ஆப் கிரவுட் என்பது இப்போது இணைய உலகில் பிரபலமாக இருக்கும் கருத்தாக்கம். அதாவது இணையத்தின் ஆற்றலை பயன்படுத்தி கொண்டு கூட்டத்தின்(மற்றவர்களின்) ஆலோசனையையும் அறிவினையும் ஒருங்கிணைத்து பயன்படுத்தி கொள்ளுதல் என்று பொருள்.
அதே போலவே மற்றவர்களின் வாழ்க்கை அனுபவ பாடங்களை திரட்டி அழகான வாழ்க்கை வழிகாடி புத்தகமாக உருவாக்கி அதனை பரிசளிக்க உதவுகிறது இந்த தளம்.
இந்த தளத்தின் செய்லபாட்டை பார்ப்பதற்கு முன்னர் இந்த தளம் உருவானதன் பின்னணியில் உள்ள கதையை தெரிந்து கொண்டால், இதன் நோக்கத்தையும் பயன்பாட்டையும் எளிதாக புரிந்து கொண்டுவிடலாம்.
இந்த தளத்தின் நிறுவனர்கள் கடந்த 2005 ம் ஆண்டு தங்களது நெருங்கிய நண்பர்களின் திருமணத்திற்கு பரிசளிக்க விரும்பிய போது எல்லோரும் நினைப்பது போல புதுமையான பரிசினை அளிக்க நினைத்தனர்.அதற்காக யாரும் செய்திராத ஒரு முயற்சியில் ஈடுபட்டனர்.
மண வாழ்க்கையை துவக்க உள்ள தம்பதிக்கு வெற்றிகரமான இல்லற வாழ்க்கைக்கான குறிப்புகளை பரிசளிக்க விரும்பினர். இந்த குறிப்புகளை தங்கள் வாழ்க்கையில் இருந்தும், தங்கள் நண்பர்களின் வாழ்கையில் இருந்துமே எடுக்க முற்பட்டனர்.
அதாவது தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வாழ்க்கையில் இருந்து அனுபவ சிதறலகளை சேகரித்து அதனை தொகுத்தளிக்க விரும்பி அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு கடிதம் எழுதினர். அந்த கடித்ததில் வெற்றிகரமான மன வாழ்க்கைக்கான வழிகளை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டிருந்தனர்.
அவர்கள் சற்றும் எதிர்பாராத வகையில் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து ஆதரவு குவிந்தது. சிறு வயது நண்பர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் தங்கள் வாழ்க்கை அனுபவத்தில் இருந்து வெற்றிகரமான மன வாழ்கைக்கு தேவையான வழிகளை குறிப்பிட்டிருந்தனர்.
அவற்றில் சில நெகிழ வைத்தன. சில புன்னகைக்க வைத்தன. சில சிந்திக்க வைத்தன. சில அரிய ஆலோசனையாக இருந்தன, எல்லாமே அனுபவத்தின் பதிவாக அமைந்திருந்தன. இவற்றை படித்து நெகிழ்ந்து போன நிறுவனர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு அவற்றை தொகுத்து புத்தகமாக்கி திருமண பரிசாக அளித்தனர்.
யாராலோ எழுதப்பட்ட வழிகாட்டி புத்தகங்களை விட இந்த புத்தகம் பயன் மிக்கதாகவும் உயிரோட்டம் மிக்கதாகவும் இருந்தது. அதோடு நண்பர்களின் பிரத்யேக பரிசாகவும் அமைந்தது.
இந்த அனுபவத்தால் நெகிழ்ந்து போன நிறுவனர்கள் தாங்கள் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற உணர்வில் இதே போன்ற வழிகாட்டி புத்தகத்தை அனைவருமே உருவாக்கி பரிசளிப்பதற்கான வாய்ப்பாக இந்த இணையதளத்தை அமைத்தனர்.
நண்பர்கள் மற்றும் உறவினர்களின் அனுபவ பங்களிப்போடு புத்தகத்தை உருவாக்க விரும்புகிறவர்கள் இந்த தளத்தின் மூலம் அதை சுலபமாக நிறைவேற்றி கொள்ளலாம். அதற்கான வழிமுறையும் அளிமையானது.
முதலில் உறுப்பினராக சேர வேண்டும். அதன் பிறகு எந்த கேள்வியின் அடிப்படையில் புத்தகம் அமைய வேண்டும் என குறிப்பிட்டு அந்த கேல்வியை பேஸ்புக், டிவிட்டர் மூலம் நண்பர்களுக்கு அனுப்பி வைத்து பதில்களை திரட்டி புத்தகத்தை உருவாக்கி கொள்ளலாம்.
புத்தகத்தின் வடிவமைப்பு மற்றும் பிழை திருத்தம் போன்றவற்றை எல்லாம் இந்த தளமே பார்த்து கொள்கிறது. அதன் பிறகு தேவையான பிரதிகளை கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். அச்சிட்ட புத்தகமாகவும் தருவித்து கொள்ளலாம். இபுத்தக வடிவிலும் பெற்று கொள்ளலாம்.
விழாக்களுக்கு பரிசளிக்க, இப்படி நாமே நண்பர்களோடு சேர்ந்து உருவாக்கும் வாழ்க்கை வழிகாட்டி புத்தகங்கள் மிகச்சிறந்த வழி தான். குழந்தை வளர்ப்பில் துவங்கி பட்டப்படிப்பு, திருமண வாழ்க்கை என எல்லா வகையான நிகழ்வுகளுக்கும் இப்படி அனுபவத்தை திரட்டி அன்போடு பரிசளிக்கலாம்.
புத்தக வடிவில் பரிசளிக்க உதவுவது தான் இந்த தளத்தின் நோக்கம் என்ற போதும் அனுபவ புத்தக்த்தை உருவாகி இணையத்திலேயே பகிர்ந்து கொள்ளும் கட்டண இல்லா வசதியும் இருந்தால் நன்றாக இருக்கும்.

கணணியின் செயல் வேகத்தை அதிகரிப்பதற்கு


கணணியை நிறுவியதும் சில மாதங்கள் நன்றாக, வேகமாக வேலை செய்தது. இப்போது என்ன செய்தாலும் கொஞ்ச நேரம் எடுத்த பின்னரே வேலையைத் தொடங்குகிறது என்ற குற்றச்சாட்டை பலரும் சொல்வதுண்டு.
உங்கள் கணணிக்கு உரமூட்ட அதனைத் தொடர்ந்து வேகமாக இயங்க வைத்திட சில எளிய வழிகளைக் காணலாம். அதற்கு இலவசமாய் உதவிடும் சில சாதனங்களையும் பார்க்கலாம்.
1. கெடுதல் புரோகிராம்களை நீக்குக: புதிய கணணிகளில் மால்வேர்(Malware) எனப்படும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் இருப்பதில்லை.
ஆனால் பயன்படுத்தத் தொடங்கிய சில மாதங்களில் இவை உங்கள் கணணியை அடைந்திருக்கும். சில நாட்களாக கணணி இயங்குவது தாமதமாகிறது என்ற குற்றச்சாட்டு இருந்தால் அதில் மால்வேர் இடம் பிடித்துள்ளது என்று சொல்லலாம்.
ஒரு மால்வேர் கணணி ஒன்றில் திருட்டுத் தனமாக நுழைந்திட பல்லாயிரம் வழிகள் உள்ளன. அனைத்தையும் அடைத்து வைப்பது அவ்வளவு எளிதல்ல. கணணி இயக்கத்தின் பின்னணியில் அமர்ந்து இயங்கிக் கொண்டு ஸ்பேம் எனப்படும் மின்னஞ்சல்களை உங்கள் கணணியிலிருந்து அனுப்பலாம்.
உங்கள் கணணியில் இருந்தவாறே தொடர்ந்து பரவ அடுத்த கணணிகளைத் தேடலாம், நாம் அமைத்துள்ள தந்திர சுருக்கு வழிகளைக் கண்டறியலாம் மற்றும் ஹேக்கர்கள் விரும்பும் பல கெடுக்கும் செயல்களில் ஈடுபடலாம்.
தான் மட்டும் தனியாக இடம் பிடிக்காமல் தன்னுடன் சில வைரஸ்களையும் அழைத்து வந்து இடம் பிடிக்கும் மால்வேர் புரோகிராம்களும் உண்டு.
இதனைக் கண்டறிய நீங்கள் உடனடியாகப் பயன்படுத்த வேண்டியது வைரஸ் ஸ்கேன் புரோகிராம் ஆகும். கண்டறிந்து நீக்கக் கூடிய ஸ்கேனர்களைப் பயன்படுத்தவும்.
2. வீடியோ கார்டை மேம்படுத்துக: உங்கள் கணணியில் உள்ள வீடியோ கார்ட் தன்னிடம் வரும் சுமையை ஏற்றுச் செயல்படும் அளவிற்குத் திறன் குறைந்த தாக இருந்தால் நிச்சயம் கணணி செயல்பாட்டின் வேகம் குறையும்.
குறிப்பாக கேம்ஸ் விளையாடுபவர்கள், கிராபிக்ஸ் புரோகிராம் இயக்குபவர்களுக்கு இது நேரலாம். இவர்கள் தங்கள் கணணியில் உள்ள வீடியோ கார்டினைக் கூடுதல் திறனுக்கு உயர்த்த வேண்டும் அல்லது இரண்டாவதாக ஒன்றை இணைக்க வேண்டும்.
3. வேகமாக இயங்கும் ட்ரைவ் தேவை: பல வேலைகளில் கணணி மெதுவாக இயங்குவதற்குக் காரணம் அதில் இணைக்கப்பட்டுள்ள ஹார்ட் டிஸ்க்குகளே.
ஒரு ட்ரைவின் சில அம்சங்கள் – RPMs, cache size, seek speed, and transfer rate– அதன் செயல் வேகத்தைக் காட்டும். இவற்றின் மூலம் வேகமாக இயங்கக் கூடிய ஹார்ட் டிஸ்க் கினை வாங்கி இணைக்கலாம் அல்லது ஹார்ட் டிஸ்க்கின் செயல் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் செட்டிங்ஸ் அமைத்திருந்தால் அவற்றை மாற்றலாம்.
4. பிரச்னைகளுக்குத் தீர்வு காணல்: ஒரு சிஸ்டம் மெதுவாக இயங்குகிறது என்பது அதன் ஹார்ட்வேர் பிரச்னையாகும். எடுத்துக்காட்டாக கணணியின் சி.பி.யு.விலிருந்து உண்டாகும் வெப்பம் தணிக்கப்பட்டு குளிர்வாக இல்லை என்றால் சிஸ்டம் செயல்படும் வேகம் குறையலாம்.
அதே போல டிஸ்க்குகளில் ஏற்படும் தீர்க்கப்படக் கூடிய பிழைகள்(Recoverable errors) அந்த டிஸ்க் பயனற்றது எனக் காட்டாமல் இருக்கும்.
அதே போல ஹார்ட் டிஸ்க்குகளில் பதியப்படும் பல்வேறு ட்ரைவர் புரோகிராம்கள், குறிப்பாக வீடியோ ட்ரைவர் புரோகிராம்கள், கணணியின் செயல்பாடு வேகத்தைக் குறைக்கும்.
சிபியு வேக சோதனை, பல்வேறு துணை சாதனங்களில் ஏற்படும் வெப்ப சோதனை, ஹார்ட் ட்ரைவர் பிழைகள் சோதனை, ட்ரைவர் புரோகிராம்களை மேம்படுத்துதல் ஆகிய செயல் முறைகள், கணணி மெதுவாக இயங்கும் பிரச்னையைத் தீர்க்கும்.
5. பிரவுசரை மாற்றுக: பிரவுசர் இயக்கத்தில் ஒன்றும் ரகசியம் இல்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையிலும், வேகத்திலும் இயங்கக் கூடியவையே. பழக்கம் காரணமாக, நீங்கள் ஒரே பிரவுசரை இயக்கிக் கொண்டிருந்தால் இன்னொரு பிரவுசரை இயக்கி அப்போது கணணி எப்படி இயங்குகிறது என்று கவனிக்கவும். பலரின் கணிப்பில் குரோம் பிரவுசர் வேகமாக இயங்குகிறது. இதனை இதுவரை பயன்படுத்தாதவர்கள் பயன்படுத்திப் பார்க்கலாம்.
6. குப்பையை அகற்றுக: கணணியில் குப்பை போல புரோகிராம்களையும் கோப்புகளையும் குவித்து வைப்பது, கணணியின் செயல் வேகத்தினைக் குறைக்கும்.
உதவிடும் புரோகிராம்கள், டூல்பார்கள், ஆட் ஆன் தொகுப்புகள் எனப் பல புரோகிராம்களை நாம் நம் கணணியில் தேக்கி வைக்கிறோம். இவற்றில் சில கணணி இயங்கும் போதே, இயக்கப்பட்டு பின்னணியில் தொடர்ந்து நாம் அறியாமலேயே இயங்கிக் கொண்டிருக்கும். இவற்றை நீக்க வேண்டும்.
விண்டோஸ் சிஸ்டம் வழங்கும் தேவைப்படாத பயன்பாட்டு புரோகிராம்கள், கணணி தயாரித்த நிறுவனம் வழங்கிய புரோகிராம்கள், பிரவுசர் ப்ளக் இன் புரோகிராம்கள், நீக்கிய புரோகிராம்களின் தொடர்பு கோப்புகள் என இவற்றைக் கண்டறிந்து நீக்க வேண்டும்.
7. டிபிராக் செய்தல்: கணணியின் ஹார்ட் ட்ரைவினை டிபிராக்(Defrag) செய்தல்(சிதறிய நிலையில் பதியப்பட்டுள்ள கோப்புகளை, ஓரிடத்திலேயே இணைந்து இருக்கும்படி அமைத்தல்), கணணியின் செயல் வேகத்தினை நிச்சயம் அதிகப்படுத்தும்.
குறிப்பிட்ட கால இடைவெளியில் இதனை அவசியம் மேற்கொள்ள வேண்டும். இதற்கு உதவிட விண்டோஸ் சிஸ்டம் தரும் வசதி மட்டுமின்றி அதிகமான அளவில் தர்ட் பார்ட்டி புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன.
மேலே தரப்பட்டுள்ள காரணங்களுடன் இன்னும் பல காரணங்களினால் கணணி செயல்படும் வேகம் குறையலாம். இருப்பினும் மேலே பரிந்துரைக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டால் நிச்சயம் கணணியின் வேகம் அதிகமாகும்.

Sunday 25 September 2011

வன்தட்டில் உள்ள கோப்புகளை அழிப்பதற்கு


தற்பொழுது வன்தட்டுகள் எல்லாம் மிக அதிகமான கொள்ளளவில் வருகின்றன. விலையும் மிகக் குறைவாகவே உள்ளது.
எக்கச்சக்கம் என்று எண்ணி நாம் 320 மற்றும் 520 ஜிபி அளவில் வன்தட்டு வாங்கி இணைக்கிறோம். ஆனால் சில மாதங்களிலேயே நமக்கு "low disk space" என்ற செய்தி கிடைத்து ஆச்சரியப்படுகிறோம்.

நம் டிஸ்க்கில் கோப்புகைள உருவாக்குவதும், மற்றவற்றிலிருந்து கொப்பி செய்து வைப்பதும் மிக எளிதாக உள்ளது. ஆனால் அவற்றில் ஒன்றுக்கு இரண்டாக கொப்பி செய்யப்பட்டவற்றை நீக்குவதும், தேவையற்றவற்றை அழிப்பதும் சற்று சிரமமான நேரம் எடுக்கும் வேலையாகவே உள்ளது.
எனவே தான் வன்தட்டில் சேரும் கோப்புகளின் எண்ணிக்கை குறித்தோ, அது எடுத்துக் கொள்ளும் இடம் குறித்தோ கவலை கொள்வது இல்லை. மேலே சுட்டிக் காட்டியது போல செய்தி வரும்போதுதான் கவலை கொண்டு அதற்கான வழிகளைத் தேடுகிறோம்.
குவிந்திருக்கும் கோப்புகளில் எது அதிக இடம் எடுத்துக் கொண்டுள்ளது எதனை நீக்கலாம் என்று குறுகிய நேரத்தில் அறிய முடிவதில்லை. இந்த தகவல்கள் நமக்குக் கிடைத்தால் அவற்றின் அடிப்படையில் கோப்புகளை நம்மால் நிர்வகிக்க முடியும். இதற்கு நமக்கு உதவும் வகையில் இலவச புரோகிராம் ஒன்று இணையத்தில் கிடைக்கிறது. இதன் பெயர் WinDirStat.

இதனைத் தரவிறக்கம் செய்து இயக்கினால் அது கணணியில் உள்ள ஹார்ட் ட்ரைவ் அனைத்தையும் ஸ்கேன் செய்கிறது. பின்னர் நம் டிஸ்க்கில் எத்தகைய கோப்புகள், எவ்வளவு இடம் எடுத்துக் கொள்கின்றன என்று வண்ண வரைபடத்தில் காட்டுகிறது. ஒவ்வொரு வகை (MP3, ZIP, EXE, JPEG, etc.) பைலுக்கும் ஒரு வண்ணம் தரப்பட்டு அவை கலந்த சதுரங்களால் காட்டப்படுகின்றன.
இந்த வண்ண சதுரங்களும் கோப்பின் அளவிற்கேற்ப சிறியதாகவும், பெரியதாகவும் காட்டப்படுகின்றன. இதன் அடிப்படையில் நாம் எந்த கோப்புகளை அழிக்கலாம் என முடிவு செய்து நீக்கலாம் அல்லது மொத்தமாக ஒரு வகை கோப்பை நீக்கலாம்.
எடுத்துக்காட்டாக ஸிப் செய்யப்பட்ட கோப்புகளிலிருந்து கோப்புகளைப் பெற்ற பின்னரும் ஸிப் கோப்புகளை நாம் கணணியில் வைத்திருப்போம். இவற்றை மொத்தமாக நீக்கலாம்.
இதே போல நாம் அவ்வப்போது தற்காலிகமாக சில வகை கோப்புகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்திய பின்னர் நீக்காமல் வைத்திருப்போம். இவற்றையும் மொத்தமாக நீக்கலாம். குறிப்பிட்ட அளவிற்கு மேல் இருக்கும் சில கோப்புகளை நீக்கலாம்.
இதனை எப்படி மேற்கொள்வது எனப் பார்க்கலாம்.
WinDirStat புரோகிராமினை இன்ஸ்டால் செய்து இயக்கவும். பின்னர் எந்த ட்ரைவ் குறித்த கோப்பு தகவல்களைக் காண விரும்புகிறீர்களோ அதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். அந்த ட்ரைவினை ஸ்கேன் செய்து தகவல்களைத் தர புரோகிராம் 5 முதல் 10 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். ஸ்கேன் முடிந்தவுடன் ட்ரைவ் குறித்த தொகுப்பு தகவல்களுடன் ஒரு திரை காட்டப்படும்.
இதன் முதல் பாதியில் கோப்புகளும், கோப்பறைகளும் அவற்றின் அளவிற்கேற்ப வரிசைப்படுத்தப்பட்டு காட்டப்படும். இதில் ஏதேனும் ஒரு போல்டர் அல்லது கோப்பைக் கிளிக் செய்தால் அதன் கலர் தொகுதி கீழாகக் காட்டப்படும். அல்லது மிகப் பெரிய கோப்புகளை அதாவது டிஸ்க்கில் அதிக இடம் எடுக்கும் கோப்புகளை அதன் அளவின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கலாம்.
அடுத்து எதனை நீக்க வேண்டும் என முடிவெடுக்கிறீர்களோ அதன் மீது ரைட் கிளிக் செய்து டெலீட் செய்திட கட்டளை கொடுக்கலாம். இதில் இரண்டு வகை ஆப்ஷன் தரப்படுகிறது.
முதலாவதாக (“Delete (to Recycle Bin”) அழித்து ரீசைக்கிள் பின்னுக்குக் கொண்டு சென்று பின்னர் அதனை ரீசைக்கிள் பின்னிலிருந்து நீக்குவது. இரண்டாவதாக நேரடியாக “Delete (no way to undelete)” அதனைக் கணணியிலிருந்து அடியோடு நீக்குவது.
இந்த முறையில் தேவையற்ற அதிக இடத்தை எடுத்துக் கொண்டிருக்கும் கோப்புகளை நீக்கலாம். இப்படியே வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை இந்த புரோகிராமினை இயக்கி டிஸ்க் இடத்தை மீட்கலாம். எப்போதும் முதல் முயற்சியிலேயே ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லாமல் அழிக்கப்படுவதனையே தேர்ந்தெடுக்கவும்.

ஏனென்றால் ரீசைக்கிள் பின்னிலிருந்து பின்னாளில் அழித்தாலும் அந்த கோப்பின் சில அம்சங்கள் நம் கணணியில் எங்காவது வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.

மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த



சில வேளைகளில் மவுஸ் மயக்க மருந்து சாப்பிட்டது போல என்ன செய்தாலும் நகராது. கர்சர் ஒரே இடத்தில் அப்படியே இருக்கும். வெகுநாட்கள் மவுஸைச் சுத்தம் செய்யாமல் விட்டாலோ அல்லது வேறு ஏதேனும் சிறிய பாகங்கள் மவுஸினுள் மோசமாகிப் போனாலோ அல்லது மவுஸ் சார்ந்த சாப்ட்வேரில் பிரச்னை ஏற்பட்டாலோ இந்த நிலை ஏற்படலாம். அப்போது மவுஸ் கர்சரின் நகர்த்தலை கீ போர்டு மூலம் மேற்கொள்ளலாம். இந்த கீ போர்டு மவுஸ் மூலம் அனைத்து வேலைகளையும் மேற்கொள்ளலாம். கீ போர்டு மவுஸை இயக்கத்திற்குக் கொண்டு வரக் கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும்.

முதலில் இந்த மாற்றங்களை மேற்கொள்ள அட்மினிஸ்ட்ரேட்டராக நீங்கள் கம்ப்யூட்டருக்குள் நுழைய வேண்டும். அதன்பின் கீ போர்டு மவுஸ் செட் செய்வதற்கு Alt+Shift+NumLock கீகளை ஒரு சேர அழுத்தவும். உடன் ஒரு சிறிய மவுஸ்கீஸ் என்ற பெட்டி கிடைக்கும். இதில் மவுஸ் கீகளை செயல்படுத்த ஓகே பட்டன் அழுத்தவும். கீகளை மவுஸ் கர்சர் இயக்கத்திலிருந்து விடுவிக்க கேன்சல் பட்டன் அழுத்த வேண்டும். செட் செய்வதற்கு செட்டிங்ஸ் பட்டன் அழுத்தவும். செட்டிங்ஸ் கட்டத்தின் மூலம் மவுஸ் கர்சரை இன்னும் கொஞ்சம் விரிவாக செட் செய்திடலாம். எடுத்துக் காட்டாக மவுஸ் கர்சரின் வேகம், துடிப்பு, இப்போது செட்டிங்ஸ் பார் மவுஸ் கீஸ் என்ற கட்டம் கிடைக்கும். இதில் தேவையான மாற்றங்களை மேற்கொண்ட பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இப்போது நம்லாக் கீ பேட் மூலம் மவுஸ் கர்சரை நகர்த்தலாம். 1,2,3,4,5,6,7,8,9 ஆகிய கீகள் மவுஸ் கர்சரை பல்வேறு திசைகளில் நகர்த்த உதவும். 5 என்ற கீ மவுஸ் இடது கிளிக் செயல்பாட்டிற்குப் பயன்படும். இன்ஸெர்ட் கீ மவுஸ் கர்சரை அழுத்திப் பிடிப்பதற்கான செயலை மேற்கொள்ளும். + கீ எந்த பொருளின் மீதும் டபுள் கிளிக்கிற்கு உதவிடும். டெலீட் பட்டனை அழுத்தினால் மவுஸ் அதன் இடத்திலிருந்து ரிலீஸ் ஆகும். நம் லாக் பட்டனில் கிளிக் செய்தால் கீ போர்டு மவுஸ் அமைப்பு விலகிடும்.

பைல் பிரிவியூ



அவசரமாக ஒரு பைலை தேடுகிறீர்கள். அது வேர்ட் டாகுமெண்ட் அல்லது பிரசன்டேஷன் பைலாக இருக்கலாம். ஆனால் என்ன பெயரில் பைலை சேவ் செய்தோம் என்று நினைவில் இல்லை. நாளும் நினைவில் இல்லை. என்ன செய்யலாம்? விண்டோஸ் எக்ஸ்புளோரரில் டைரக்டரியைத் திறந்து வைத்து சந்தேகப்படும் பைல்கள் ஒவ்வொன்றையும் திறந்து மூடி பின் அடுத்த பைலை திறந்து மூடி செயல்களை மேற்கொள்ள முடியுமா? எவ்வளவு சுற்றும் வேலை இது.

பைல் அருகில் கர்சரைக் கொண்டு சென்றாலே அதன் உள்ளே இருக்கும் விஷயங்களை சிறு போட்டோ போல காட்டும் வசதி இருந்தால் எவ்வளவு நல்லது. இருக்கிறது அந்த வசதி. பைல் பிரிவியூ என்று இதனை அழைக்கின்றனர். அதனை செட் செய்திடும் வழியைப் பார்ப்போம். முதலில் File மெனு சென்று அதில் Open விண்டோவினைத் திறக்கவும். இந்த விண்டோ கிடைத்தவுடன் நீங்கள் அதில் காட்டப்படும் பைல்களின் பட்டியலைத்தானே பார்க்கிறீர்கள். இப்போது அந்த விண்டோவின் வலது பக்க ஓரத்தில் பாருங்கள். அதில் Views என்று ஒரு பட்டன் இருக்கும். இதில் கிளிக் செய்து திறந்தால் நிறைய ஆப்ஷன்ஸ் கிடைக்கும். இதில் Preview என்பதில் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவைப் பெறவும். இப்போது விண்டோ இரு பகுதியாகப் பிரிந்து காட்டப்படுவதனைப் பார்க்கலாம். ஒரு பக்கம் பைல் பட்டியலுடன் நீங்கள் தேர்ந்தெடுத்த பைலின் பெயர் தேர்ந்தெடுத்த நிலையில் இருக்கும்.

வலது பக்கம் உள்ள கட்டத்தில் அந்த பைலின் உள்ளே என்ன இருக்கிறது என்பது காட்டப்படும். இதன் முதல் பக்கம் தெரிந்தாலும் அருகே உள்ள அம்புக் குறியை அழுத்தி கீழே சென்று பைலில் உள்ளதைப் பார்க்கலாம். இதுதான் நீங்கள் தேடும் பைல் என்றால் உடனே அதனைக் கிளிக் செய்து திறந்து எடிட் செய்திடலாம். இல்லை என்றால் கர்சரை பைல் பட்டியலில் அடுத்த பைலுக்கு எடுத்துச் செல்லுங்கள். அந்த பைலின் பிரிவியூ கிடைக்கும். இந்த தேடல் எளிதாகத் தெரிகிறதா? நேரம் மிச்சமாகிறதா! அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.

வேர்ட் அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள்





நம் வாசகர்களிடமிருந்து வரும் கேள்விகளில் பெரும்பாலும் வேர்ட் தொகுப்பு குறித்த கேள்விகளே அதிகம். பல கேள்விகள் கட்டுரையில் தர வேண்டிய அளவிற்கு தகவல்களைப் பதிலாகத் தர வேண்டியதிருக்கும். அவ்வப்போது வெளியாகும் கட்டுரைகள் இது போன்ற கேள்விகளின் அடிப்படையிலேயே தரப்படுகின்றன. சில கேள்விகள் தனிப்பட்ட முறையில் ஒரு சில குறிப்புகளில் பதில் தரப்படும் வகையில் இருக்கும். அவற்றின் தொகுப்பு இங்கு பதிலுடன் வெளியிடப்படுகின்றன.

வேர்ட் தொகுப்பு இயங்கும் விதம் சில நேரங்களில் எனக்குப் பிடிக்க வில்லை. தேவையற்ற வகையில் குறுக்கீடுகளாக இவை எனக்குத் தோன்றுகின்றன. பொதுவாக இந்த குறுக்கீடுகளை நிறுத்திட என்ன செய்யலாம்?

பலவகையான செட்டிங்குகள் Tools மெனுவில் தான் உள்ளன. Options கிளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில் பல டேப்கள் தரப்பட்டு ஒவ்வொன்றும் ஒருவகையான செயல்பாட்டிற்கென இருக்கும். நீங்கள் மாற்ற விரும்பும் செயல்பாடு எந்த டேபில் இருக்கிறது என்பதனைத் தேடி அறிந்து அதனை மாற்றலாம். பெரும்பாலும் அந்த செயல்பாடுகள் குறித்த சொல் தொடரும் அதன் எதிரே சிறு கட்டமும் இருக்கும். கட்டத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தினால் அந்த செயல்பாடு மேற்கொள்ளப்படும். எடுத்துவிட்டால் அந்த செயல் நடைபெறாது. Customize என்னும் கட்டளை வேர்டின் மெனுக்களையும் டூல் பார்களையும் மாற்றி அமைக்க உதவும். View மெனு வேர்ட் எப்படி தோற்றமளிக்க வேண்டும் என்பதனை முடிவு செய்திடும்.

தேவையற்ற வகையில் புல்லட் பாய்ண்ட் அல்லது எண்களைத் தரும் வேர்டை எப்படி அது இல்லாதவாறு நிறுத்தலாம்?

வேர்ட் தரும் முக்கிய வசதி நாம் டைப் செய்திடுகையில் அது தரும் உதவிதான். பிழையான சொற்களைத் திருத்த வழி தருகிறது. நாம் டைப் செய்கையில் தானாகவே பார்மட் செய்கிறது. 1,2,3 என அடிக்கத் தொடங்கினால் புல்லட் பாய்ண்ட்டினைக் கொடுத்து பார்மட் செய்கிறது. இது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் நிறுத்திவிடலாம். Tools மெனு சென்று Auto Correct டேப் கிளிக் செய்து நமக்குத் தேவயற்ற சொல் திருத்தத்தினை நிறுத்தலாம். அல்லது எந்த திருத்தங்கள் நமக்கு தேவையில்லை என எண்ணுகிறோமோ அவற்றை நீக்கலாம். பின் மீண்டும் தேவை என முடிவு செய்கையில் டிக் அடையாளம் ஏற்படுத்தி செயல்படுத்தலாம். நான் அதிகம் தமிழ் டெக்ஸ்ட் டைப் செய்கிறேன். எப்போதும் சொற்களின் கீழே சிகப்பு கோடுகள் போடப்படுகின்றன. தமிழ் என்றால் ஏன் இவ்வாறு கோடுகள் வருகின்றன? இவற்றை நிறுத்துவது எப்படி?

வேர்ட் தமிழ்ச் சொற்களை ஆங்கிலம் என்று உணர்ந்து உங்கள் கீ அழுத்தத்திற்கு நேரான எழுத்துக்களையும் சொற்களையும் எடுத்துக் கொண்டு அவை தவறான ஸ்பெல்லிங் மற்றும் இலக்கணம் உடையவை என்ற அடிப்படையில் சிகப்பு கோட்டினைத் தருகிறது. இந்த செயல்பாட்டினை நீக்க எளிதான வழி எழுத்துப் பிழை மற்றும் இலக்கணப் பிழை காணும் செயல்பாட்டினைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதுதான். Check spelling as you type மற்றும் Check grammar as you type என இரு வசதிகளை Edit டேபின் கீழே பார்க்கலாம். இவற்றின் முன் உள்ள டிக் அடையாளங்களை எடுத்துவிட்டால் சிகப்பு கோடுகள் வராது.

அடிக்கடி ஆபீஸ் அசிஸ் டன்ட் என்ற பெயரில் ஒரு சிறிய உருவம் திரையில் வந்து நம் கவனத்தை ஈர்க்கிறது. சில வேளைகளில் அந்த இடத்தில் டைப் செய்கையில் எழுத் துக்களை மறைக்கிறது. இதனை எப்படி இல்லாமல் செய்வது?

Office Assistant மேலேயே ரைட் கிளிக் செய்திடுங்கள். அதன் பின் Options என்பதில் கிளிக் செய்திடுங்கள். Use Office Assistant என்ற வரியின் முன் உள்ள சிறிய பெட்டியைல் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடுங்கள்.

ஸ்கிரீனின் வலது பக்கம் ஒரு பகுதி வருகிறது. இதனை டாஸ்க் பேன் என்கின்றனர். எனக்கு இது தேவையில்லை. எப்படி நிறுத்துவது?

நாம் உருவாக்கும் டாகுமெண்ட்களின் வலது பக்கம் இந்த டாஸ்க் பேன்கள் கிடைக்கின்றன. இதற்கான கட்டளைகளின் அடிப்படையில் அதில் ஆப்ஷன்ஸ் மாறும். இந்த டாஸ்க் பேன் தேவையில்லை என்றால் அதில் உள்ள பெருக்கல் அடையாளத்தில் கிளிக் செய்தால் மறைந்துவிடும். வியூ மெனுவில் கிடைக்கும் ஆப்ஷன்கள் மூலமாக இதனை மூடிவிடலாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட டாகுமெண்ட் பைல்களைத் திறக்கையில் முந்தைய டாகுமெண்ட்களின் விண்டோ எங்கு செல்கிறது? எப்படி அனைத்தையும் திறந்து பார்ப்பது?

ஒவ்வொரு புதிய டாகுமெண்ட்டும் தனியான விண்டோவில் திறக்கப்படும். அப்போது ஏற்கனவே உள்ள பைலின் விண்டோ பின்னால் இருக்கும். விண்டோ மெனு சென்றால் பைல்களின் பெயர்களைப் பார்த்து கிளிக் செய்து பெறலாம். இவை டாஸ்க் பாரிலும் காட்டப்படும். அங்கிருந்தும் கிளிக் செய்து பெறலாம். அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்க வேண் டும் என்றால் Window மெனு சென்று Arrange All என்பதைக் கிளிக் செய்திடுங்கள். மேலும் மாற்றி மாற்றி டாகுமெண்ட்களைக் காண Alt +Tab அழுத்துங்கள்.

டூல்பாரில் பல பட்டன்கள் உள்ளன? எது எதற்கு என்று அறிய அதன் பெயரை எப்படித் தெரிந்து கொள்வது?

மவுஸைக் கொண்டு போய் அந்த டூல்பாரின் அருகே கொண்டு செல்லுங்கள். உடனே அந்த பட்டனின் பெயர் காட்டப்படும்.

ரூலரைப் பெற என்ன செய்திட வேண்டும்?

View மெனு சென்று Ruler என்பதில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும். இதில் உங்கள் வியூ பிரிண்ட் லே அவுட் வியூவில் இருந்தால் தான் மேலே உள்ள ரூலர் தெரியும்.

டூல் பாரில் பட்டன்களைச் சேர்க்கவும் நீக்கவும் என்ன செய்திட வேண்டும்?

1.View மெனுவில் இருந்து Toolbars தேர்ந்தெடுக்கவும்.

2. Customize என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3. கிடைக்கும் விண்டோவில் Commands என்னும் டேபினைக் கிளிக் செய்திடவும்.
4. Categories என்னும் பிரிவில் ஏதாவதொன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
5. அங்கு காட்டப்படும் Commands பிரிவில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
6. இந்தக் கட்டளையை Toolbar ஒன்றுக்கு இழுத்து வரவும். “I” பீம் ஒன்று காட்டப்படும். இது புதிய தேர்ந்தெடுத்ததனை இன்ஸ்டால் செய்திட உங்களுக்கு வழி காட்டும். புதிய பட்டனில் டெக்ஸ்ட் லேபில் மட்டுமே இருக்கும்.
7. புதிய Toolbar பட்டனில் ரைட் கிளிக் செய்திடவும்.
8. Default Style என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். (இப்போது பட்டன் சிறிய சதுரமாக மாறும்)
9. மீண்டும் புதிய Toolbar பட்டனில் ரைட் கிளிக் செய்திடவும்.
10. Change பட்டன் இமேஜைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பின் ஒரு பட்டன் இமேஜைத் தேர்ந்தெடுக்கவும்.
11. பின் Customize டயலாக் பாக்ஸை மூடவும்.

பட்டனை நீக்க:

View மெனுவில் இருந்து Toolbars தேர்ந்தெடுக்கவும். Customize என்பதை அடுத்து தேர்ந் தெடுக்கவும். எந்த பட்டனை நீக்க வேண்டுமோ அதனை டூல் பாரிலிருந்து இழுத்துவிடவும்.

நார்மல் டெம்ப்ளேட் என்பது என்ன?

வேர்ட் தொகுப்பைத் தொடங்கும் போது புதிய டாகுமெண்ட் ஒன்று திறக்கப்பட்டு நம் பயன்பாட்டிற்கு தயாராக இருக்கிறது அல்லவா? இந்த செட் அப் தான் நார்மல் டெம்ப்ளேட் அன அழைக்கப்படுகிறது. இதுதான் அனைத்து டாகுமெண்ட்களின் அடிப்படை ஸ்லேட்டாக இருக்கும். இதனை மாற்றினால் அடுத்து தயாராகும் புதிய டாகுமெண்ட்கள் அனைத்தும் மாற்றங்களுடன் கூடிய டெம்ப்ளேட்டையே புதிய நார்மல் டெம்ப்ளேட்டாக வைத்துக் கொள்ளும். இந்த நார்மல் டெம்ப்ளேட் பைல் நீங்கள் வேர்ட் தொகுப்பை இன்ஸ்டால் செய்த டைரக்டரியில் இருக்கும். இதனை நீங்கள் தெரியாமல் அழித்துவிட்டால் வேர்ட் தொகுப்பு புதிய நார்மல் டெம்ப்ளேட் பைல் ஒன்றை உருவாக்கிக் கொள்ளும்.



உங்கள் டெக்ஸ்ட் புல்லட் பாய்ண்ட்டாக

வேர்ட் டெக்ஸ்ட்டில் அடுத்தவர் கவனம் ஈர்க்க அல்லது முக்கிய விஷயங்களைக் காட்டிட புல்லட் அமைப்பது வழக்கம். அல்லது எண்களை அமைப்பது பழக்கம். புல்லட் பட்டன்கள் பலவகைப்படும். அவற்றில் எது உங்களுக்கு பிடித்திருக்கிறதோ அதனைத் தேர்ந்தெடுத்து அமைக்க வேர்ட் உங்களுக்கு வழி தருகிறது. இதற்குப் பதிலாக நீங்கள் விரும்பும் டெக்ஸ்ட்டினை புல்லட் பாய்ண்ட்டிற்குப் பதிலாக அமைக்கலாம். இதற்கு ஏற்கனவே மாறா நிலையில் உள்ள புல்லட் பாய்ண்ட்களை மாற்றி அமைத்திட வேண்டும். இதற்குக் கீழ்க்கண்டபடி செட் செய்திடவும். முதலில் வேர்ட் தொகுப்பினைத் திறந்து ஏதேனும் ஒரு டாகுமென்டைத் திறக்கவும். இனி பார்மட் மெனு செல்லவும். அதில் உள்ள பிரிவுகளில் புல்லட்ஸ் அண்ட் நம்பரிங் என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு “Bullets and Numbering” என்ற தலைப்பில் சிறிய டயலாக் பாக்ஸ் ஒன்று திறக்கப்படும்.

இங்கு நீங்கள் பயன்படுத்தாத ஏதாவது ஒரு வகை நம்பர் பார்மட்டில் கிளிக் செய்திடவும். அதன் பின் Customize என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். நீங்கள் கிளிக் செய்து தேர்ந்தெடுத்த நம்பர் பார்மட் பாக்ஸில் உங்களுக்குப் பிடித்த சொல் ஒன்றை டைப் செய்திடவும். Internet, College, Friend என எதனை வேண்டுமென்றாலும் டைப் செய்திடலாம். இதில் உங்களுக்குப் பிடித்த எழுத்து வகையினையும் பயன்படுத்தலாம். இதில் 30 கேரக்டர்களை என்டர் செய்திடலாம். அதன்பின் ஓகே செய்து வெளியேறினால் பின் டெக்ஸ்ட் அமைக்கும்போது அதில் புல்லட்டுக்குப் பதிலாக இந்த சொல்லை புல்லட் போல பயன்படுத்தலாம்.



பான்ட் பிடிக்கவில்லை... என்ன செய்வது....

வேர்ட் டாகுமெண்ட் அமைக்க ஒரு பைலைத் திறந்தவுடன் வரும் பாண்ட் எனக்குப் பிடிக்க வில்லை. இதனை மாற்றி எனக்குப் பிடித்த பாண்ட்டை அமைக்க என்ன செய்திட வேண்டும்?
Format மெனு சென்று அதில் Font என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் உங்களுக்குப் பிடித்த எழுத்து வகையினைத் தேர்ந்தெடுத்து அதற்கான மற்ற அட்ரிபியூட்டுகளை (பண்புகளை–போல்ட், அளவு, சாய்வெழுத்து போன்றவை) அமைக்கவும். பின்னர் கீழாக உள்ள Default என்பதில் கிளிக் செய்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் அமைத்த எழுத்து அனைத்து புதிய பைல் களுக்கும் தயாராக இருக்கும். இந்த பாண்ட் தமிழ் பாண்ட் ஆகவும் இருக்கலாம். எப்போதும் கிடைக்கும் மார்ஜின் அளவு நான் தயாரிக்கும் டாகுமெண்ட்களுக்கு சரியாக இல்லை. ஒவ்வொருமுறையும் மாற்ற வேண்டியதுள்ளது. இதற்குப் பதிலாக நான் விரும்பும் வகையில் மார்ஜின் அமைக்க என்ன செய்திட வேண்டும்?

File மெனு சென்று அதில் Page Setup தேர்ந்தெடுக்க வேண்டும். கிடைக்கும் விண்டோவில் Margins டேபினைக் கிளிக் செய்திடவும். அதில் நீங்கள் விரும்பும் மார்ஜின் அளவினை அமைக்கவும். அதன் பின் Default என்பதில் கிளிக் செய்து ஓகே கொடுத்து வெளியேறவும். இனி நீங்கள் செட் செய்த அளவிலேயே மார்ஜின் உங்கள் டாகுமெண்ட் களுக்குக் கிடைக்கும்.

வேர்ட் தொகுப்பில் எல்லோரும் ரூலரை அமைத்து பயன்படுத்தி வருவீர்கள். இது ஒரு வரியின் நீளத்தையும் அதில் குறிப்பிட்ட இரு புள்ளிகளின் இடையே இருக்கும் அகலத்தையும் மற்றும் நெட்டு வாக்கில் இதே அளவையும் தெரிந்து கொள்ள தரப்பட்டிருக்கும் வசதி என்று மட்டும் எண்ணிவிடாதீர்கள். இதில் இன்னும் பல கூடுதல் வசதிகளும் உள்ளன. அவற்றை இங்கு பார்க்கலாம்.

இந்த ரூலரில் தலைகீழாக சிறிய முக்கோணங்கள் இடம் பெற்றுள்ளன என்பதை எப்போதாவது பார்த்திருக் கிறீர்களா? இப்போது பாருங்கள். சரி, இவை எதற்காகத் தரப்பட்டுள்ளன? ஏன் சில நேரங்களில் இவை சிறிது தள்ளியும், சில இடங்களில் ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்தும் அமைந்துள்ளன என்றும் இவற்றை நாமாக இழுத்துப் பிரித்தால் என்ன நடக்கும் என்று சற்று பார்த்திருக்கிறீர்களா? இல்லையா! இதோ இப்போது பார்க்கலாம். இந்த முக்கோணங்கள் எல்லாம் டெக்ஸ்ட்டில் உள்ள பாராக்களின் இன்டென்ட் எனப்படும் பத்தி இடைவெளியைக் குறிப்பனவாகும். இவற்றைப் பயன்படுத்தி பாரா இடை வெளியினை அமைக்கலாம். இதற்கென பார்மட் மற்றும் பாராகிராப் விண்டோ சென்று குறிப்பிட்ட பாரா மார்ஜின் அமைத்திடாமல் இந்த முக்கோணங்களைப் பயன்படுத்தியே அவற்றை ஏற்படுத்தலாம். இதனை எப்படி செயல்படுத்துவது என்று பார்ப்போம். ரூலர் கோட்டின் இடது புறம் ஓரத்தில் ஹவர் கிளாஸ் தோற்றத்தில் இரு முக்கோணங் களைக் காணலாம். சரியாகப் பார்த்தால் இதில் மூன்று வித பாரா அடையாள கருவிகள் உள்ளன. இவற்றை பிரித்துப் பயன்படுத்தலாம். மேலாக உள்ள முக்கோண அடையாளம் முதல் வரி மார்ஜினிலிருந்து எவ்வளவு தள்ளி உள்ளது என்பதைக் காட்டுகிறது.

இந்த முக்கோணத்தை எங்கு இழுத்துவிடுகிறீர்களோ அந்த இடத்திலிருந்து (Firstline Indent) ஒரு பாராவின் முதல் வரி தொடங்கும். கீழாக முக்கோணம் இழுத்துவிடப்படுவதால் ஏற்படும் இடத்தில் அந்த பாராவின் மற்ற வரிகள் தொடங்கும். இதற்கு ஆங்கிலத்தில் ஹேங்கிங் இன்டென்ட் (Hanging Indent) என்று பெயர். இந்த இரு முக்கோணங் களின் கீழாக ஒரு சிறிய செவ்வகம் தெரிகிறதா? பாராவின் இடது மார்ஜினைக் குறிக்கிறது.

இதனை லெப்ட் இன்டென்ட் (Left Indent) என்று அழைப்பார்கள். இதனை இழுத்தால் முதல் இரு முக்கோணங்களும் ஒன்றாக இழுக்கப்படும். இதனால் ஒரே இடத்தில் அனைத்து வரிகளுக்கும் பாரா மார்ஜின் ஏற்படும். நமக்கு இரு வேலைகளை ஒவ்வொன்றாகப் பார்க்கும் நேரம் மிச்சமாகிறது. இந்த ரூலரிலேயே வலது பக்கம் ஒரு முக்கோணத்தைப் பார்க்கலாம். இதனை இழுத்து அமைப்பதன் மூலம் பாரா ஒன்றின் வலது மார்ஜினை அமைக்கலாம்.

இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று எண்ணுகிறீர்களா? நீங்கள் எந்த பாராவின் மார்ஜினை மாற்றி அமைக்க வேண்டும் என முடிவெடுக்கிறீர்களோ அந்த பாராவில் ஏதாவது ஒரு வரியில் கர்சரைக் கொண்டு செல்லவும். பின் எந்த மார்க்கரை நகர்த்த வேண்டும் என்பதை முடிவெடுக்கவும். அதன் மீது மவுஸ் பாய்ண்ட்டரைக் கொண்டு செல்லவும். பின் மவுஸின் இடது பக்கத்தைக் கிளிக் செய்து அழுத்திப் பிடித்து ரூலர் கோட்டின் மீது இழுக்கவும்.

இழுத்துச் சென்று எங்கு மார்ஜின் இருக்க வேண்டும் என எண்ணுகிறீர்களோ அங்கு விட்டு விடவும். இவ்வாறு இழுக்கையில் புள்ளிகள் நிறைந்த கோடு ஒன்று உருவாகி நகர்ந்து நீங்கள் இழுக்கும் திசையில் உங்கள் கர்சருடன் நகர்ந்து செல்வதனைப் பார்க்கலாம். இந்த கோடு உங்கள் பாராவினை ஒழுங்காக அமைத்திட உதவுகிறது. இப்போது இந்த முக்கோணங்களும் செவ்வகமும் எதற்காகத் தரப்பட்டுள்ளன என்றும் இவற்றை இழுத்து வந்து சில ஒழுங்குகளைப் பாராவில் அமைக்கலாம் என்பதனையும் உணர்ந்திருப்பீர்கள். இனி இவற்றைப் பயன்படுத்துகையில் எங்கு மாற்றங்கள் ஏற்படும் என்பதனைப் பார்க்கலாம். பாரா ஒன்று டைப் செய்யப் படுமுன் இந்த பாரா மார்க்கர்களில் மாற்றங்களை ஏற்படுத்தினால் அந்த மாற்றம் இதன் பின் ஏற்படுத்தப்படும் பாராக்கள் அனைத்திலும் கடைப் பிடிக்கப்படும். இதற்கு முன் ஏற்படுத்திய பாராக்களில் மாற்றங்கள் ஏற்படாது.

ஏற்கனவே டைப் செய்த பாராவில் நீங்கள் மார்ஜின் வெளியில் மாற்றங்களை ஏற்படுத்த விரும்பினால் அந்த பாராவில் கர்சரைக் கொண்டு சென்று பின் மார்க்கர்களை நகர்த்தவும். நகர்த்தும் மார்க்கரின் தன்மைக்கேற்ப பாராவில் மாற்றம் ஏற்படும். இது அந்த பாராவில் மட்டும் மாற்றத்தினை ஏற்படுத்தும். ஏற்கனவே டைப் செய்த பல பாராக்களில் நீங்கள் விரும்பும் மார்ஜின் இடைவெளியை ஏற்படுத்த விரும்பினால் இந்த மார்க்கர்களை நகர்த்தும் முன் மாற்ற விரும்பும் பாராக்களை முதலில் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அதன்பின் பாரா மார்க்கர்களை நகர்த்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரா வெங்கும் இந்த மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்.

என்ன! பாரா இடைவெளி களையும் மார்ஜின்களையும் எப்படி அமைப்பது என்று தெரிந்து கொண்டீர்களா! மார்ஜினுக்கு பொங்கல் காப்பு கட்டியது போலத் தோற்றமளித்த முக்கோணங்கள் எதற்காக உள்ளன என்று தெரிந்து கொண்டீர்களா! இனி உங்கள் விருப்பத்திற்கேற்ப மார்ஜின்களுடன் பாராக் களை அமைத்து பாருங்கள்.

வேர்ட் டிப்ஸ்

வேர்டில் பாரா இன்டென்ட்வேர்ட் தொகுப்பைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாம் அனைவருமே பாராவில் இன்டென்ட் என்று சொல்லப்படும் முதல் வரி ஸ்பேஸ் இடைவெளிவிட்டு டெக்ஸ்ட்டை அமைப்போம்.

இதில் இன்டென்ட் மற்றும் ஹேங்கிங் இன்டென்ட் என்று வகைகள் உண்டு. இன்டென்ட் என்பது நாம் வழக்கமாக பாராவின் முதல் வரியில் முன் இடைவெளி விட்டு அமைப்பது. ஹேங்கிங் இன்டென்ட் என்பது முதல் வரி தவிர்த்து மற்ற வரிகளை இன்டென்ட் செய்து ஸ்பேஸ் விட்டு அமைப்பது. இதற்கு கீ போர்டில் இருந்து கைகளை எடுத்து பின் மவுஸ் தேர்ந்தெடுத்து சரியான இடத்தில் கர்சரை வைத்து பின் மீண்டும் கீ போர்டு பயன்படுத்தி இன்டென்ட் அமைக்கிறோம். மவுஸ் இல்லாமல் கீ போர்டு மூலம் இன்டென்ட் அமைக்க கீழ்க் குறிப்பிட்டுள்ள கீகளைப் பயன்படுத்தவும்.

Ctrl + M கொடுத்தால் மொத்த பாராவும் அரை அங்குலம் நகர்ந்து கொடுக்கும். மேலும் அதிகம் நகர்ந்து செல்ல அடுத்தடுத்து கொடுக்கவும்.

Ctrl + Shift + M : கொடுத்தால் அரை அங்குலம் இன்டென்ட் இருப்பதைக் குறைக்கும். அதாவது ஏற்கனவே கொடுத்த இடைவெளியை முழு பாராவிற்கும் குறைக்கும்.

Ctrl + T : இந்த கீகள் ஹேங்கிங் இன்டென்ட் இடைவெளியை ஒரு டேப் ஸ்பேஸ் அளவிற்கு வலது புறமாக நகர்த்தும்.


Ctrl + Shift + T : ஹேங்கிங் இன்டென்ட் இடைவெளியை ஒரு டேப் ஸ்பேஸ் அளவிற்குக் குறைக்கும். கீ போர்டு மூலமாகவே இன்டென்ட் அமைப்பது எளிதாக உள்ளதா!


எனக்கு வேண்டாம் டிராயிங் கேன்வாஸ்


வேர்ட் தொகுப்பில் படம் ஒன்றினை இன்ஸெர்ட் செய்திட முயற்சிக்கையில் ஒரு டிராயிங் கேன்வாஸ் நமக்குக் காட்டப்படுகிறது. இந்த கேன்வாஸில் Create your drawing here என்று கிரே கலரில்ஒரு செய்தி காட்டப்படுகிறது. நாம் இங்கு படத்தை ஒட்டுகையில் அல்லது வரைய முற்படுகையில் பல வேளைகளில் இந்த கேன்வாஸுக்கு வெளியே படங்கள் செல்கின்றன. நாம் அவற்றை மீண்டும் இழுத்து அமைக்க வேண்டியுள்ளது. இது போன்ற கேன்வாஸ் இல்லை என்றால் நாம் நினைத்தபடி படத்தினை வரையலாம்; அல்லது ஒட்டலாம். ஆனால் இந்த கேன்வாஸ்வந்துவிடுகிறதே. என்ன செய்யலாம்? ஒன்றுமில்லை வேர்ட் தொகுப்பிடம் இந்த கேன்வாஸ் எல்லம் எனக்கு வேண்டாம். நானே பார்த்துக் கொள்கிறேன் என்கிறபடி செட் செய்திட்டால் போதும். இதற்கு Tools மெனு சென்று Options பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இதில் General என்னும் டேபைத் திறந்து கிடைக்கும் கட்டத்தில் “Automatically create drawing canvas when inserting AutoShapes” என்று இருக்கும் வரியின் முன்னால் டிக் செய்யபட்டிருந்தால் எடுத்துவிடவும். இனி மேல் நீங்களாக இதனை மாற்றும் வரை டிராயிங் கேன்வாஸ் வராது, வராது, வராது.

வேர்ட் தொகுப்பிற்கென பல ஷார்ட் கட் கீ தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் நமக்கு அடிக்கடி பயன்படுத்தக் கூடியதாக ஒரு சில உள்ளன. வாசகர்கள் அவற்றை அவ்வப்போது வெளியிடுங்கள் என்று கேட்டு கடிதங்கள் எழுதுகின்றனர். எனவே கீழே தரப்பட்டுள்ளவற்றை நீங்கள் முன்பு இம்மலரில் படித்திருந்தாலும் இதனையும் மனதில் கொள்ள படித்து வையுங்கள்; பயன்படுத்துங்கள்.

Alt + F10 – விண்டோவினை அதன் முழு அளவிற்கு மாற்றுகிறது

Alt + F5 – விண்டோவினை பழைய வழக்கமான நிலைக்குக் கொண்டு வரும்.

Ctrl + Shift + A தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் முழுவதையும் கேப்பிடல் எழுத்துக் களாக மாற்றுகிறது. இதனை Shift+F3 என்ற கீகளூம் மேற் கொள்ளும்.

Shift + F2– தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டை கிளிப் போர்டுக்குக் கொண்டு செல்லாமல் காப்பி செய்கிறது. காப்பி செய்ததனை பேஸ்ட் செய்திட என்டர் அழுத்தினால் போதும்.

Ctrl+ Backspace பின்புறமாக ஒரு சொல்லை அழித்திடும். ஆனால் இது காப்பி செய்யப்பட மாட்டாது.

Ctrl+W, Ctrl+F4 – இந்த இரண்டு கீ இணைப்புகளும் அப்போது பணியாற்றிக் கொண் டிருக்கும் பைலை சேவ் செய்திடவா என்று ஒரு டயலாக் பாக்ஸ் மூலம் கேட்டுவிட்டு பின் அழுத்தும் கட்டத்திற்கேற்றபடி பைலை மூடும்.

Alt + Ctrl + S பணியாற்றிக் கொண்டிருக்கும் விண்டோவினை படுக்கை வாக்கில் பிரிக்கும் கோடு கிடைக்கும். பின் அந்த கோட்டினை நகர்த்தி விண்டோவைப் பிரித்துப் பயன்படுத்தலாம்.

Ctrl + Shift + D தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டின் கீழாக இரு கோடுகள் இடப்படும். இதனை நீக்குவதற்கு மீண்டும் இதே கீகளைப் பயன்படுத்தலாம்.

F5 அல்லது Ctrl+G செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆவணத்தில் குறிப்பிட்ட பக்கத்திற்குச் சென்று சொற்களைத் தேடி அவற்றிற்குப் பதிலாக வேறு சொற்களை அமைத்திட இந்த கீகளைப் பயன்படுத்தலாம்.

Ctrl+H ஒரு குறிப்பிட்ட டெக்ஸ்ட்டைக் கண்டுபிடித்து அதற்குப் பதிலாக நாம் தேர்ந்தெடுக்கும் அல்லது அமைக்கும் டெக்ஸ்ட்டை ஒட்டும்.

Ctrl+F2 அனைத்து பக்கங்களின் அச்சு தோற்றத்தைக் காட்டும்.

Alt F, I பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆவணத்தின் பிராபர்ட்டீஸ் பார்க்க இந்த கீகளை வரிசையாக அழுத்தவும்.

Shift + F5 ஆவணத்தில் முன்பு டெக்ஸ்ட்டை செருகிய இடத்திற்கு உங்கள் கர்சரை எடுத்துச் செல்லும். இது போல மூன்று முந்தைய இடத்திற்கு எடுத்துச் செல்லும். அதன்பின் மீண்டும் பழைய இடத்திற்கு வந்துவிடும். இது மிகவும் பயனுள்ள ஒரு ஷார்ட் கட். இதனால் ஒரு ஆவணத்தைத் திறந்திடுகையில் அதனை முன்பு பயன் படுத்துகையில் எந்த இடத்தில் எடிட் செய்து கொண்டிருந்தீர்களோ அந்த இடத்திற்கு இந்த கீகளைப் பயன்படுத்திச் சென்று விடலாம்.

Ctrl + >
தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டின் எழுத்து அளவை அதிகரிக்கச் செய்திடும். அளவு 12க்குப் பின் மெனுவில் இருப்பது போல இரண்டு இரண்டாகக் கூட்டும். (கவனம் கொள்ள வேண்டியது என்னவென்றால் இரண்டாவது கீயை அமைக்க ஷிப்ட் கீயை அழுத்த வேண்டியதிருக்கும்.)

Ctrl + ]
இது முந்தைய கீ அழுத்துதலில் இருந்து சற்று வேறுபட்டது. இந்த கீகள் தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டின் எழுத்து அளவை ஒவ்வொரு பாயிண்ட்டாக அதிகரிக்கச் செய்திடும்.

Ctrl + Shift + H தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டினை மறைத் திடும். மீண்டும் அழுத்த அவை கிடைத்திடும்.

Alt + Shift + D நீங்கள் உருவாக்கிடும் ஆவணத்தில் ஒரு இடத்தில் அன்றைய தேதியை டைப் செய்திட விரும்புகிறீர்கள். அதற்காக அந்த தேதியை டைப் செய்திட வேண்டியதில்லை. பலருக்கு தேதி நினைவிலும் இருக்காதே. இதற்காக இந்த கீகளைப் பயன்படுத்துங்கள். அன்றைய தேதி அழகாக வந்து உட்கார்ந்துவிடும்.

Alt + Shift + T மேலே சொன்னது போல ஓர் ஆவணத்தில் அப்போதைய நேரத்தை அமைத்திட இந்த கீகளை அழுத்துங்கள். நேரம் அழகாக டைப் செய்யப்பட்டுவிடும்.

Ctrl + Shift + W வேர்ட் டாகுமெண்ட்டில் அடிக் கோடிட கீயை அழுத்தினால் அது சொற்களுக்கு இடையே உள்ள இடைவெளியிலும் கோடிடுகிறது. அது போல அல்லாமல் சொற்களுக்கு அடியில் மட்டும் கோடு போட இந்த கீகளைப் பயன்படுத்தவும்.

Alt + F11 வேர்ட் தொகுப்பில் பணியாற்று கையில் விசுவல் பேசிக் எடிட்டிங் என்விரோன்மெண்ட்டுக்கு மாற வேண்டுமா? இந்த கீகளைப் பயன்படுத்தவும்.

Alt V, H ஆவணத்தின் ஹெடர் பகுதியில் உள்ள தலைப்பை எடிட் செய்திட அந்த இடத்திற்குச் செல்ல இந்த கீகளைப் பயன்படுத்தவும்.

Shift + F7 ஒரு சொல் சார்ந்த பிற சொற்களைக் காட்டும் நூலுக்கு தெசாரஸ் என்று ஆங்கிலத்தில் பெயர். ஆங்கில சொல் ஒன்றுக்கு சார்ந்த சொல் வேண்டும் என்றால் இந்த கீகளை அழுத்தவும்.

வேர்ட்.! வேர்ட்.!

வேர்டில் புட் நோட் அமைக்கும் செயல்பாடு புட்நோட் என்பது டெக்ஸ்ட் ஒன்றில் சிறிய விளக்கத்தினைத் தனியாகத் தருவதற்காக பக்கத்தின் அடிப்பகுதியில் தனியே அமைக்கும் டெக்ஸ்ட் ஆகும். இந்த செயல்பாட்டில் என்ன பிரச்னை இருக்கப் போகிறது என எண்ணுகிறீர்களா! சரி அமைக்கலாம். உங்கள் டெக்ஸ்ட்டின் கடைசி பக்கம் எப்படி உள்ளது? அங்கு புட் நோட்டினை பக்கத்தின் அடிப்பாகத்தில் அமைத்தால் டெக்ஸ்ட்டிற்கும் நோட்டிற்கும் இடையே காலி இடைவெளி அமையும். அல்லது டெக்ஸ்ட் முடிந்த உடனேயே அது பக்கத்தின் முன்பகுதியாக இருந்தாலும் அங்கு புட் நோட்டை அமைக்கலாம்.

உங்களுடைய விருப்பம் என்ன? இதற்கு வேர்ட் துணைபுரிகிறது. வேர்ட் தொகுப்பில் Insert மெனு சென்று அங்கு Reference சப்மெனு தேர்ந்தெடுக்கவும். பின் அதில் Footnote என்னும் பகுதியைக் கிளிக் செய்திடவும்.

இப்போது Footnote and Endnote என்று ஒரு சிறிய விண்டோ கிடைக்கும். இதில் நீங்கள் புட்நோட் எங்கு அமைய வேண்டும். அது என்ன வடிவத்தில் இருக்க வேண்டும்; தேர்ந்தெடுக்கப்பட்ட வடிவம் டெக்ஸ்ட் முழுவதும் இருக்க வேண்டுமா அல்லது குறிப்பிட்ட வரியில் இருந்து இருக்க வேண்டுமா என்பதனை முடிவு செய்து தேர்ந்தெடுத்து அமைக்கலாம். இந்த மெனுக்கள் நாம் விரும்பியபடி புட் நோட்களை அமைக்க உதவுகின்றன.

வேர்டில் ஜம்ப் செய்தால் 

பெரிய வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில் டெக்ஸ்ட்டை ஓரிடத்தில் குறுக்கே இணைக்கிறோம். இணைத்துவிட்டு பின் கர்சரை பல பக்கங்கள் தள்ளி கொண்டு செல்கிறோம். அங்கு சில எடிட்டிங் வேலைகளை மேற்கொள்கிறோம். இப்போது முதலில் எந்த இடத்தில் டெக்ஸ்ட்டை இணைத்தோம் என்று அறிய ஆசைப்படுகிறீர்கள். ஆனால் எந்த இடம் என்று தான் தெரியவில்லை. கவலைப்பட வேண்டாம். ஷிப்ட் + எப் 5 கீயை அழுத்துங்கள். கடைசியாக நீங்கள் எங்கு எடிட்டிங் செய்தீர்களோ அங்கு கர்சர் செல்லும். மீண்டும் மீண்டும் இந்த கீகளை அழுத்த முன்பு கர்சர் இருந்த இடத்திற்குக் கூட்டிச் செல்லும். இப்படியே பின் வழியாக முன்பு எடிட்டிங் செய்த ஐந்து நிகழ்வுகளுக்குச் செல்லும். ஆனால் எந்த இடத்திலும் நீங்கள் டெக்ஸ்ட் எதனையும் இடைச் செருகல் செய்திடவில்லை என்றால் இந்த கீகள் செயல்பாடு ஒரு விளைவையும் ஏற்படுத்தாது.

அனைத்தும் செலக்ட் செய்திட

வேர்ட் தொகுப்பில் சில கீகளின் செயல்பாடுகள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்று நாம் நினைக்கும் வேளையில் ஒரு சிலர் அது குறித்து அறியாமலேயே இருக்கின்றனர். சொன்னால் அப்படியா! என்கின்றனர். வேர்டில் டெக்ஸ்ட் முழுவதும் செலக்ட் செய்திட, அது ஒரு பக்கமாக இருந்தாலும் இருபது பக்கமாக இருந்தாலும், என்ன செய்கிறோம். மவுஸ் கர்சரை முதல் வரியில் பிடித்து அப்படியே இழுத்து இறுதி வரை கொண்டு சென்று செலக்ட் செய்கிறோம்; பின்னர் காப்பி செய்கிறோம்; அல்லது அழிக்கிறோம். ஆனால் பெரும்பாலான வேளைகளில் மவுஸைப் பிடித்து இழுக்கையில் அழுத்தத்தை விட்டுவிட்டு மீண்டும் முதல் வரியிலிருந்து தொடங்க வேண்டியுள்ளது. இதற்கான பிற வழிகளைப் பார்ப்போம். இரண்டு வழிகள் உள்ளன. Edit மெனு சென்று பின் Select AllIz தேர்ந்தெடுப்பது.

இது முழு டெக்ஸ்ட்டையும், படங்கள் உட்பட, தேர்ந்தெடுத்துக் கொடுக்கும். இவ்வாறு தேர்ந்தெடுத்தனை பின் எங்கு வேண்டுமென்றா லும் ஒட்டலாம். இன்னும் வேகமாகச் செயல்பட ஒரு குறுக்கு வழி உள்ளது. அது கண்ட்ரோல் மற்றும் ஏ (Ctrl + A) கீகளை அழுத்துவதுதான். இதுவரை அறிந்திராவதர்களுக்கு இது ஒரு புதிய வழி. தெரிந்தவர்களுக்கு ஒரு நினைவூட்டல்.

டெக்ஸ்ட் ஒன்றை செலக்ட் செய்கிறீர்கள். பின் அதனை இன்னொரு இடத்தில் கொண்டு அமைக்க விரும்புகிறீர்கள். எப்படி இந்த செயலை மேற்கொள்கிறீர்கள்?

டெக்ஸ்ட்டை செலக்ட் செய்த பின்னர் மவுஸின் கர்சரை அதில் கொண்டு சென்று பின் மவுஸால் இழுத்து குறிப்பிட்ட இடம் வந்தவுடன் கர்சரை விடுவித்து அமைக்கிறீர்கள். வேறு வழியாக கட் அல்லது காப்பி செய்து தேவையான இடத்தில் பேஸ்ட் செய்கிறீர்கள். எப்படிப் பார்த்தாலும் இது பல நிலைகளில் மேற்கொள்கிற சமாச்சாரமாக இருக்கிறது. இதற்கு ஓர் எளிய வழியை எப்2 கீ தருகிறது. இங்கும் முதலில் நகர்த்த வேண்டிய டெக்ஸ்ட்டை செலக்ட் செய்து கொள்ளுங்கள். இங்கும் மவுஸ் வேண்டாம் என்றால் ஷிப்ட் கீயுடன் ஆரோ கீயைச் சேர்த்து இயக்கி டெக்ஸ்ட்டை செலக்ட் செய்திடலாம். செலக்ட் ஆனவுடன் எப்2 கீயை அழுத்துங்கள். அதன் பின் ஆரோ கீ அல்லது பேஜ் அப் அல்லது டவுண் அழுத்தி தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டை எங்கு அமைக்க வேண்டுமோ அங்கு செல்லுங்கள். (இப்படிச் செல்லும்போது டெக்ஸ்ட் நகர்த்தும் வேலை வேண்டாம் என்று நினைத்தால் எஸ்கேப் கீயை அழுத்துங்கள்; எல்லாம் ரத்தாகிவிடும்.) இனி எந்த இடத்தில் டெக்ஸ்ட் அமைக்க வேண்டுமோ அந்த இடம் வந்தவுடன் ஜஸ்ட் என்டர் கீயைத் தட்டுங்கள். டெக்ஸ்ட் அந்த இடத்தில் வந்தமர்ந்துவிடும். இது கட் அண்ட் பேஸ்ட் வழிக்கு இன்னொரு செயல்வழியாகும். காப்பி அல்ல.

நீங்களே உங்கள் மெனுவை தயாரிக்கலாம்!

வேர்ட் தொகுப்பில் உள்ள மெனுவினை உங்கள் விருப்பப்படி அமைத்துக் கொள்ள இந்த பகுதியில் பல டிப்ஸ்கள் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றைப் படித்து பலரும் தங்கள் விருப்பத்திற்கேற்ப அமைத்து தாங்கள் பயன்படுத்துவதோடு தங்கள் நண்பர்களிடமும் காட்டி மகிழ்கின்றனர். எடுத்துக் காட்டாக ஒருவர் என்னிடம் உங்களுக்கு வேர்டில் பைல் மெனுவைத் திறந்தால் எத்தனை பைல்கள் கீழாகப் பட்டியலிடப்படும் என்று கேட்டார்.

நான் வழக்கம்போல அவரையும் அவர் கம்ப்யூட்டரையும் அப்பாவியாகப் பார்த்தேன். என் கம்ப்யூட்டரில் 9 பைல்கள் கிடைக்கும் என்றார். அப்படியா! காட்டு என்றவுடன் வேர்டைத் திறந்து பைல் மெனுவினைக் காட்டினார். பின் ஒரு வெற்றி சிரிப்புடன் கம்ப்யூட்டர் மலரில் போட்டிருந்தார்கள் என்றார். இப்படி மெனுக்களை நமக்கேற்றபடி வளைக்காமல் நாமே நம் வசதிக்கேற்ப மெனுக்களை உருவாக்கினால் என்ன! உருவாக்கலாமா! அதற்கேற்ற வழிகளை இங்கு பார்ப்போம்.

இதற்கு Customize windowI ஐ முதலில் பெற வேண்டும். இதனைப் பெற Tools மெனு சென்று Customize ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது எந்த டூல்பாரிலாவது ரைட் கிளிக் செய்து அதில் Customize என்பதைத் தேர்ந்தெடுக்கலாம். Customize விண்டோ திறக்கையில் Commands டேப் செல்லவும். இடது பக்கமாக Categories list பட்டியல் கிடைக்கும். இந்த பட்டியலில் கீழாகச் சென்று New Menu என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். நியூமெனு தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் மவுஸ் பாய்ண்ட்டரை கமாண்ட்ஸ் லிஸ்ட்டில் வலது பக்கமாகக் கொண்டு செல்லவும். இப்போது New Menu கட்டளையை அப்படியே கஸ்டமைஸ் விண்டோவிலிருந்து இழுத்துச் சென்று புரோகிராம் விண்டோவின் மேலாக விடவும். அல்லது இங்கே இருக்கின்ற மெனுக்களில் ஏதாவது ஒரு இடத்தில் விட்டுவிடவும். இப்போது மெனு பட்டியலில் New Menu என ஒரு மெனு இருப்பதனைக் காணலாம். கஸ்டமைஸ் விண்டோ இன்னும் திறந்திருக்கும் நிலையில் New Menu பெயரின் மீது ரைட் கிளிக் செய்திடவும். அங்கு எழும் பாப் அப் மெனுவில் “Name” என்று ஒரு பீல்டு இருக்கும். அதில் கிளிக் செய்து ஒரு புது பெயர் தரவும். உங்களுக்குப் பிடித்த நீங்கள் அதிகம் பயன்படுத்த விரும்பும் ஒரு பெயராக இருக்கலாம். இனி என்டர் கீயைத் தட்டுங்கள். ஆஹா! பாராட்டுக்கள். உங்களுக்காய் நீங்களே ஒரு மெனுவினை பில்கேட்ஸின் விண்டோஸுக்குள் உருவாக்கிவிட்டீர்களே. இனி கஸ்டமைஸ் விண்டோவில் உள்ள கமாண்ட் டேபைப் பயன்படுத்தி என்னவெல்லாம் உங்கள் நியூ மெனுவில் இருக்க வேண்டும் என திட்டமிடுகிறீர்களோ அவை அனைத்தையும் தேடிப் பிடித்து இழுத்து போடவும். ஆசையில் நிறைய கமாண்ட்ஸைப் போட்டுவிட்டீர்களா! அப்படியானால் அவற்றை இரண்டாகப் பட்டியலிடலாமே! மெனுவில் உள்ள கமாண்ட் ஒன்றில் ரைட் கிளிக் செய்து அதில் Begin A Group என்பதில் கிளிக் செய்திடவும். இந்த மெனுவில் உள்ளவற்றில் அதில் கர்சரைக் கொண்டு சென்று இழுத்து எப்படி வேண்டுமானாலும் வரிசையை அமைத்துக் கொள்ளலாம். எனவே பொறுமையாக எப்படி அமைத்தால் நன்றாக இருக்குமோ அப்படி அவற்றை வகைப் படுத்தவும். இதில் எப்போது மாற்றங்கள் ஏற்படுத்த விரும் புகிறீர்களோ அப்போதெல்லாம் மேலே கூறியபடி மெனுவிற்குள் சென்று மாற்றங்களை ஏற்படுத்தி சேவ் செய்து கொள்ளலாம். நிச் சயம் இது போல புதிய மெனுவினை நீங்கள் எல்லாரும் ஏற்படுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கலாமா!

வட்டமும் சதுரமும் சரியாக வரையலாமா!

வேர்டில் சில தகவல்களை விளக்க நாமே சிறிய படங்களை டெக்ஸ்ட்டுடன் உருவாக்கு வோம். இவற்றிற்கான வட்டங்களையும் சதுரங்களையும் வரைய வேர்ட் தொகுப்பில் சாதனங்கள் தரப்பட்டுள்ளன. ஆனால் பலரும் இதில் சற்று மனம் தளர்கின்றனர். எவ்வளவுதான் சரியாக மவுஸ் கொண்டு இழுத்தாலும் வட்டமும் சதுரமும் சரியாக அமையவில்லையே என குறைபட்டுக் கொள்கின்றனர். தேவையே இல்லை. இதற்கான சரியான கீகளைப் பயன்படுத்தினால் நாம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சரியாக வட்டமும் சதுரமும் அமையும். அது எப்படி என்று பார்க்கலாம்.

இந்த சூட்சுமம் ஷிப்ட் மற்றும் கண்ட்ரோல் கீகளைப் பயன்படுத்துவதில் தான் இருக்கிறது. முதலில் டிராயிங் டூல் பாரில் சரியான டூலைத் தேர்ந்தெடுங்கள். உடன் உங்கள் கர்சர் ஒரு கூட்டல் அடையாளம் ஆக மாறும். இப்போது நீங்கள் வரைய தயாராகிவிட்டீர்கள். வரையத் தொடங்கும்முன் ஷிப்ட் கீயினை அழுத்திக் கொள்ளுங்கள். கீ அழுத்துவது அப்படியே தொடரட்டும். இப்போது வரையத் தொடங்குங்கள். வித்தியாசம் தெரிகிறதா. ஆம். இதுவரை சரியாக வராத வட்டம், சதுரம் மற்றும் பிற உருவங்கள் நன்றாக வருகின்றனவா? ஓகே. ஏதேனும் ஒரு முறை ஷிப்ட் கீயை அழுத்தாமல் வரையத் தொடங்கிவிட்டு பின் அடடா! ஷிப்ட் கீயை அழுத்த மறந்துவிட்டோமே என்று அங்கலாய்க்கிறீர்களா? கவலையே வேண்டாம். வரைவது பாதியில் இருக்கையில் ஷிப்ட் கீயை அழுத்துங்கள். வரைந்த பகுதி மற்றும் இனி வரையப் போகும் பகுதி அனைத்தும் சரியாக மாறிவிடுவதனைப் பார்க்கலாம். இன்னொன்றை கவனித்தீர்களா! நீங்கள் எந்த உருவம் வரைந்தாலும் அது இடது மூலையிலிருந்தேதான் தொடங்கும். அதாவது நீங்கள் எந்த பாய்ண்ட்டில் கிளிக் செய்கிறீர்களோ அந்த புள்ளி வரையப் போகும் உருவத்தின் இடது மூலையாக அமைகிறது. அடடா! நடுவில் இருந்து வரைய வேண்டும் என்றால் என்ன செய்வது? கவலையே வேண்டாம்.இங்கு தான் கண்ட்ரோல் கீ உதவுகிறது. கண்ட்ரோல் கீயை ஷிப்ட் கீக்குப் பதிலாக அழுத்திக் கொண்டு வரையத் தொடங்கினால் உருவத்தின் நடுப் பகுதியிலிருந்து நீங்கள் விரும்பும் டிசைன் கிடைக்கும். சில வேளைகளில் நாம் படத்தை வரைந்து விட்டு பின் குறிப்பிட்ட இடத்தில் அமைக்க அதனை நகர்த்த சிரமப்படுவோம். அது போன்ற இடங்களில் இந்த கண்ட்ரோல் கீ நமக்கு உதவி செய்கிறது. தேவையான இடத்தில் கர்சரை நடுநாயகமாக வைத்து வரைவதனைத் தொடங்கலாம். இந்த இரண்டு கீகளையும் இவ்வாறு படம் வரையும் சாதனத்துடன் இணைத்துப் பயன்படுத்தி சரியான முறையில் படங்களைப் பெறலாம். கிளிப் ஆர்ட் படங்களில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு அதனை உங்கள் விருப்பப்படி மாற்றுகையில் இந்த இரண்டு கீகள் தரும் உதவி உங்களுக்குப் புரிய வைக்கும்.

வேர்ட் டாகுமெண்ட்டில் அல்லது பிரசன்டேஷன் ஸ்லைட்களில் வரிசையாக 1,2,3 அல்லது a, b, c என அமைக்கும்போது தானாக இந்த வரிசை எண்கள் அல்லது வரிசையான எழுத்துக்கள் அமைக்கப்படும். ஏதாவது ஒரு இடத்தில் நீங்கள் ஒரு பிரேக் கொடுத்து புதிய வரிசையிலோ அல்லது லைன் ஸ்பேஸ் பிரேக் கொடுத்து அதே வரிசையைத் தொடரவோ திட்டமிடலாம்.

எடுத்துக் காட்டாக

1. Item A
2. Item B
3. Item C
4. Item D
5. Item E

என அமைக்கலாம்.

இந்த பிரேக் அமைத்திட என்ன செய்கிறீர்கள்? புல்லட் அல்லது நம்பரிங் வசதியை எடுத்துவிட்டு பின் நோக்கிச் சென்று ஒரு லைன் ஸ்பேஸை உருவாக்கிப் பின் மீண்டும் அமைக்கிறீர்கள். எண்கள் தொடர்ந்து வர வேண்டும் என்றால் மீண்டும் அந்த எண்ணுக்கு புல்லட் லிஸ்ட்டைத் தயார் செய்கிறீர்கள். தலைவலி தரும் வேலை தானே! இந்த சுற்று வழி தேவையில்லை. இன்னொரு வேகமான வழி உள்ளது. ஷிப்ட் கீயைப் பயன்படுத்துவதுதான். எங்கு இடைவெளி லைன் ஸ்பேஸ் தேவைப்படுகிறதோ அங்கு ஷிப்ட் + என்டர் கீகளை அழுத்தவும். அது அடுத்த வரியை தொடர் எண் அல்லது புல்லட் இல்லாமல் டேட்டாவினை அமைத்திட உதவும். இப்போது மீண்டும் என்டர் கீயை அழுத்துங்கள். ஒரு லைன் ஸ்பேஸ் கொடுத்து மீண்டும் அதே புல்லட் அல்லது தொடர் எண்ணோடு பட்டியல் அமைத்திட வழி கிடைக்கும். எவ்வளவு எளிது என்பதை நீங்கள் வேகமாக இது போன்ற பணிகளில் ஈடுபடும் போதுதான் தெரியும்.

வேர்டில் பார் டேப்

வேர்ட் தொகுப்பில் டேப் பயன்படுத்துகையில் பெரும்பாலும் இடது, வலது, சென்டர் மற்றும் டெசிமல் டேப் நிறுத்தங்களைக் கையாண்டிருக்கிறோம். எப்படிப்பட்ட டேப் வரவேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்க வேர்ட் பிரேமில் இடது மேல் மூலையில் டேப் அடையாளம் இருக்கும். இதன் அருகே கர்சரைக் கொண்டு சென்றால் என்ன வகையான டேப் தற்போது பயன்பாட்டில் இருக்கிறது என்று காட்டப்படும். அதனைப் பயன்படுத்தலாம்; அல்லது வேறு வகையான டேப்பிற்கு அதன் மீது கர்சரைக் கிளிக் செய்து தேவையான டேப் கிடைத்தவுடன் அதனைப் பயன்படுத்தலாம்.

டேப்பின் உருவைக் கொண்டு அது இடதா, வலதா அல்லது சென்டரா என்று கவனிக்கலாம். ஆனால் பலர் இவை எதுவும் இல்லாத பார் டேப் என்று ஒன்று இருப்பதனைக் கண்டிருக்க மாட்டார்கள். அது இப்படி காட்சி அளிக்கும்.
இதன் பயன் என்ன? என்ற கேள்வி எழுகிறதா? நானும் உங்களைப் போலத்தான் கேள்வியைக் கேட்டுக் கொண்டு அதனை இயக்கிப் பார்த்தேன். இந்த படம் காட்டும் செயலைத்தான் இந்த வகை டேப் மேற்கொள்கிறது. இந்த டேப்பை எங்கு செட் செய்கிறீர்களோ அந்த இடத்தில் ஒரு நெட்டுக் கோட்டினை இந்த டேப் உருவாக்குகிறது. எடுத்துக்காட்டாக பார் டேப்பினைத் தேர்ந்தெடுத்து ரூலரில் இரண்டு அங்குல அளவில் இதனை செட் செய்தால் கர்சர் இருக்கும் இடத்தில் ஒரு நெட்டுக் கோடு ஒன்று அமைக்கப்படும். டாகுமெண்ட்டில் இருக்கும் டெக்ஸ்ட் இந்த நெட்டுக் கோடு உருவாவதில் எந்த பிரச்னையையும் ஏற்படுத்துவதில்லை. டெக்ஸ்ட் இந்த கோட்டின் ஊடாகவும் அமைக்கப்படும். இவ்வாறு நெட்டுக் கோடு அமைப்பதனால் நாம் டெக்ஸ்ட்டை அட்டவணை ஏற்படுத்தாமலேயே ஓர் ஒழுங்குக்குக் கொண்டு வரலாம். டேப்களை இடம் மாற்றுவது போல இதனையும் மாற்றலாம். இந்த கோடுகளைக் கொண்டு டெக்ஸ்ட் அமைத்தபின் அல்லது இந்த கோடுகள் தேவையில்லை என்று உணர்ந்த பின் இவற்றை நீக்கிவிடலாம். இந்த கோட்டினைக் கொண்டு பல்வேறு செயல்பாடுகளை டெக்ஸ்ட் அமைப்பதில் மேற்கொள்ளலாம். செயல்படுத்திப் பாருங்கள். இதன் பல்வேறு பயன்பாடுகள் புரிய வரும்..

ஒரிஜினல் அதே இடத்தில் அப்படியே

எம்.எஸ். வேர்ட், எக்ஸெல் அல்லது பவர்பாய்ண்ட் பைல்களைக் கையாள்கையில் சில வேளைகளில் பைல் ஒன்றில் மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். உங்கள் நோக்கம் பழைய பைலை அப்படியே வைத்துக் கொண்டு மாற்றங்களுடனான புதிய பைல் வடிவத்தினை புதிய பெயரில் வைத்திட வேண்டும் என்பது. ஆனால் ஏதோ எண்ணத்தில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கையில் சேவ் அஸ் செல்லாமல் கண்ட்ரோல் + எஸ் கீகளை அழுத்தி ஒரிஜினல் பைலை மாற்றங்களுடன் சேவ் செய்து ஒரிஜினல் பைலை கோட்டைவிட்டுவிடுவீர்கள். இதற்கு தவறே ஏற்படுத்த முடியாத ஒரு வழி ஒன்று உள்ளது. File மெனு திறந்து Open பிரிவு செல்லுங்கள். இந்த விண்டோவில் நீங்கள் பயன்படுத்த விரும்பும் பைலைத் தேடுங்கள். பைலைக் கண்டுபிடித்தவுடன் Open பட்டனை அழுத்தும் முன் சற்று தாமதப்படுத்துங்கள். எப்போதாவது அந்த பட்டனில் கீழ் நோக்கி ஒரு அம்புக் குறி இருப்பதனைப் பார்த்திருக்கிறீர்களா? நிச்சயம் பார்த்திருக்க மாட்டீர்கள். இப்போது பாருங்கள். இது போன்ற அம்புக் குறி இருப்பது எதனைக் குறிக்கிறது? சம்பந்தப்பட்ட பட்டனுக்கு இன்னும் சில சாய்ஸ் இருப்பதனைக் காட்டுகிறது. இப்போது அந்த அம்புக் குறியினை கிளிக் செய்திடுங்கள்.

ஒரு சிறிய மெனு விரியும். அதில் “Open as Copy” என்ற பிரிவைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் புரோகிராம் நீங்கள் தேர்ந்தெடுத்த பைலின் காப்பி ஒன்றைத் தேர்ந்தெடுக்கும். இந்த பைலில் நீங்கள் மேற்கொள்ள விரும்பும் எடிட் வேலைகளை மேற்கொள்ளுங்கள். உங்கள் ஒரிஜினல் பைல் அப்படியே இந்த மாற்றங்கள் இன்றி இருக்கும்.

நீங்கள் வேர்ட் தொகுப்பில் செயல்படுகையில் அடிக்கடி ஆட்டோ மேடிக் எண்கள் அமைக்கும் வசதியினைப் பயன் படுத்துகிறீர்களா? எப்போதாவது இந்த எண்களின் ஸ்டைலை மாற்ற வேண்டும் என்று முயற்சித் திருக்கிறீர்களா? அல்லது இந்த இடத்தில் இவை இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஆசைப்பட்டிருக்கிறீர்களா? எண்களின் ஸ்டைல், அமையும் இடம், விதம் எல்லாவற்றையும் நம்மால் நம் விருப்பப்படி மாற்றி அமைக்க முடியும்.

அதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம். முதலில் Format மெனு செல்லவும். அதன் பின் Bullets and Numbering என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இந்த விண்டோ திறக்கப்பட்டவுடன் அதில் காட்டப்படும் பலவகை எண் வகைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனென்றால் இந்த எண்களுக்கான ஸ்டைலை மாற்ற கஸ்டமைஸ் விண்டோவினைத் திறக்க வேண்டும். அதற்கு ஏதேனும் ஒரு நம்பர் விண்டோவினைத் திறக்க வேண்டும்.

இவ்வாறு தேர்ந்தெடுத்தவுடன் Customize பட்டனைக் கிளிக் செய்திடுங்கள். இந்த விண்டோவில் உங்கள் விருப்பத்திற்கான அனைத்து செட்டிங் வசதிகளையும் காணலாம். மேலே இருக்கும் Number format என்ற பிரிவின் மூலம் உங்கள் பாண்ட், நம்பர் ஸ்டைல், எங்கு இந்த எண்கள் அமைய வேண்டும் என்பதனை செட் செய்திடலாம். Number position என்ற பிரிவில் எப்படி எண்கள் டாகுமெண்ட் டெக்ஸ்ட்டுடன் அலைன் (இடது, வலது அல்லது நடுப்புறமாக) செய்யப்பட வேண்டும் என்பதனை முடிவு செய்திடலாம். Text position பிரிவு நம்பர் பட்டியலுடன் டெக்ஸ்ட் எங்கு அமைய வேண்டும் என்பதனை செட் செய்திடலாம். டேப் ஸ்பேஸ் எவ்வளவு தூரத்தில் எண்கள் அ அடுத்து டெக்ஸ்ட் அமைய வேண்டும் என்பதனை அமைக்கிறது. அனைத்தும் உங்கள் விருப்பப்படி செட் செய்த பிறகு OK கிளிக் செய்து பின் மீண்டும் Bullets and Numbering விண்டோவிற்குச் செல்லுங்கள். இங்கு நீங்கள் செட் செய்த அமைப்பு நீங்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவான ஒரு விண்டோவாக அமைக்கப்பட்டிருக்கும். இங்கு மீண்டும் ஓகே கிளிக் செய்து உங்கள் டாகுமெண்ட்டிற்குத் திரும்புங்கள். இனி நீங்கள் விரும்பிய படி ஆட்டோமேடிக் எண்கள் அமையும்.

வேர்ட் டாகுமெண்ட்டில் படத்தை ஒட்டுவது குறித்த பல தகவல்கள் முந்தைய இதழ்களில் வெளியாகியுள்ளன. இருப்பினும் பல வாசகர்கள் இன்னும் டெக்ஸ்ட்டுடன் இணைந்து படம் அமைப்பதில் தடுமாறுகின்றனர். படத்தை நன்றாக அமைத்த பின்னரும் இன்னும் சரியாக அமைக்கலாமே என்று முயற்சிக்கின்றனர். நீட்டிப் பார்க்கின்றனர்; குறுக்கிப் பார்க்கின்றனர். ஒன்றும் சரியாக அமையவில்லை. வந்த மாதிரியே இருந்தால் தேவலாம் என்று பார்க்கிறார்கள்.

கண்ட்ரோல் + இஸட் அழுத்தலாம் என்றால் எத்தனை முறை அழுத்தி பின்னால் செல்வது என்ற தயக்கம். இருந்த நல்ல நிலையும் போய் சரியாக படம் அமர்ந்திருக்காது. எனவே நாங்கள் அமைத்து பார்த்துவிட்டோம். ஆனால் சரியாக வரவில்லை. எனவே மீண்டும் படத்தை பழைய நிலைக்குக் கொண்டு வர என்ன செய்திட வேண்டும் என கடிதம் எழுதுகின்றனர். இவர்களுக்கான குறிப்புகளை இங்கு தருகிறேன்.

நீங்கள் வேர்ட் 2007 தொகுப்பு பயன்படுத்துபவராக இருந்தால் Picture Tools, Format ஆகிய மெனுக்களுக்குச் செல்லவும். இவை உள்ள ரிப்பன் நீங்கள் படத்தை அல்லது கிளிப் ஆர்ட்டை செலக்ட் செய்தவுடன் தோன்றும். இடது ஓரத்தில் Adjust section என்ற பிரிவு இருப்பதனைப் பார்க்கலாம்.

அங்குதான் Reset Picture button என்ற பட்டன் இருக்கிறது. அதில் கிளிக் செய்தால் படம் பழைய ஒரிஜினல் நிலைக்குத் திரும்பிவிடும். நீங்கள் வேர்ட் 2003 அல்லது அதற்கும் முந்தைய பதிப்பைப் பயன்படுத்துபவராக இருந்தால் படத்தை தேர்ந்தெடுத்தவுடன் ஒரு Picture toolbar தென்படும். அப்படி ஒரு பிக்சர் டூல் பார் கிடைக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம்.

படத்தின் மீது ரைட் கிளிக் செய்துவிடவும். பின் கிடைக்கும் மெனுவில் Show Picture Toolbar என்பதில் கிளிக் செய்தால் Picture Toolbar கிடைக்கும். அல்லது View மெனு சென்று அதில் Toolbars என்னும் துணை மெனு பெற்று அதில் கடிஞிtதணூஞு என்ற இடத்தில் கிளிக் செய்திடவும். எப்படி கிடைத்தாலும் டூல்பார் திறக்கப்பட்டுவிட்டால் மீண்டும் படத்தை பழையபடி அமைத்திட ஒரே ஒரு பட்டன் தான் பாக்கி. அது வலது கோடியில் Reset Picture button என்ற பெயரில் இருக்கும். அதில் கிளிக் செய்துவிட்டால் முதல் முதலில் படம் எப்படி இருந்ததோ அந்த தோற்றத்தில் இருக்கும்.


* வேர்டில் ஒரு டாகுமெண்ட் பைலில் ஒரு சொல் எங்கிருக்கிறது என்று தேடிக் கொண்டிருக் கிறீர்களா? தொடர்ந்து அதே சொல்லைத் தேட Find and Replace விண்டோவினை திறந்தே வைத்திருக்க வேண்டியதில்லை. ஜஸ்ட் ShiftF4 அழுத்தினால் போதும். தொடர்ந்து அந்த சொல் தேடப்பட்டு முடிவுகள் உங்களுக்குக் கிடைக்கும்.

* டாகுமெண்ட் ஒன்ற எடிட் செய்கையில் Format | Change Case பயன்படுத்தி எழுத்துக்களின் தன்மையை மாற்றுகிறீர்களா! இந்த டயலாக் பாக்ஸில் உங்களுக்கு ஐந்து ஆப்ஷன்ஸ் கிடைக்கும். இருந்தும் உங்களுக்குப் பயன்படுவது uppercase, lowercase மற்றும் title case என்ற மூன்று தான். இதனை ShiftF3 என்ற கீகளை அழுத்துவதன் மூலம் பெறலாம்.

* வேர்ட் டாகுமென்ட் ஒன்றில் எத்தனை சொற்களை நீங்கள் அமைத்திருக்கிறீர்கள் என்று தெரியவேண்டுமா? தொடர்ந்து அவ்வப் போது இதனை செக் செய் திட வேண்டுமா? இதற்கு View | Toolbars என்று சென்று அதில் Word Count என்ப தனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த டூல்பாரை அப்படியே மவுஸால் அழுத்திப் பிடித்து ஏற் கனவே இருக்கும் டூல்பாரின் வலது பக்கத் திற்குக் கொண்டு சென்று உங்கள் திரையின் மேலாக விட்டுவிடவும். வேர்ட் கவுண்ட் டூல் பார் அங்கேயே இருக்கும்.

எத்தனை சொற்களை நீங்கள் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று காட்டும் விண்டோவினை யும் நீங்கள் உங்களுக்குத் தேவையான அளவிற்கு மாற்றலாம். இதற்கு Tools | Customize | Toolbars என்று சென்று கிடைக்கும் விண்டோவை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். கஸ்டமைஸ் டயலாக் பாக்ஸில் இருக்கும் போது அளவை மாற்றும் பணியை மேற் கொள்ளலாம். இனி எப்போது சொற்களின் எண்ணிக்கை தெரியவேண்டும் என்றாலும் டூல்பாரில் உள்ள Recount பட்டனில் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் தெரிந்து கொள்ளலாம்.

* வேர்டில் டேஷ் கோடு மூன்றை டைப் செய்தால் வேர்ட் உடனே அதனை பெரிய திக்கான கோடாக மாற்றி விடும். இதனை நீக்கும் வழியும் உடனே கிடைக்காது. இந்த செயல்பாடு வேர்ட் புரோகிராமில் பதியப்படும் போதே அமைக்கப்பட்டு விடுகிறது. இதனை நீக்க Format | Borders and Shading என்று செல்லவும். பின் Borders டேப்பில் கிளிக் செய்து None என்பதைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியே வரவும்.

* வேர்ட் சில பார்மட்டிங் பணிகளைத் தானாக மேற் கொள்ளும். இவற்றில் மிகவும் பயனுள்ள பணி + மற்றும் –– (ப்ளஸ் மற்றும் ஹைபன்) அடையாளங் களை பயன்படுத்தி டேபிள் களை உருவாக்குவதுதான். ஒரு + அடையாளத்தை டைப் செய்து பின் சில ஹைபன் அடையாளத்தை டைப் செய்திடுங்கள்.

மீண்டும் + அடையாளம் டைப் செய்து மீண்டும் ஹைபன் அடை யாளங்களை அமைத்திடுங்கள். பின் என்டர் தட்டினால் டேபிள் ரெடி. பின் இதனை வழக்கம்போல் டேபிளில் என்ன மாற்றங்கள் மற்றும் டேட்டாவை அமைப்பீர் களோ அதே போல் அமைத்துக் கொள்ளலம்.

* வேர்ட் ஸ்ப்ரட் ஷீட் அல்ல. ஆனாலும் சில எளிய கணக்குகளை உங்களுக்காக மேற்கொண்டு விடைகளைத் தரும். அவை என்னவென்று பார்ப்போமா!
முதலில் டேபிளில் தேவையான செல்களை அமைத்துக் கொள்ளுங்கள். ஒரு படுக்கை வரிசையில் உள்ள எண்களை கூட்டித் தெரிய வேண்டும் என வைத்துக் கொள்வோம். வரிசையாக எண்களை அமைத்துக் கொள் ளுங்கள். வலது பக்கம் உள்ள செல்லைக் காலியாக விடுங்கள். இப்போது அந்த காலியாக உள்ள செல்லில் கிளிக் செய்திடுங்கள். பின் Table | Formula தேர்ந்தெடுக்கவும். வேர்ட் உங்களுக்குத் தரும் ஆப்ஷன்களில் =SUM(LEFT) என்று இருக்கும். இதனைத் தேர்ந்தெடுத்தால் கூட்டல் ரெடி.

சரி, நெட்டு வரிசையில் உள்ள எண்களைக் கூட்ட வேண்டுமா? வரிசையாக எண்களை அமைத்து பின் கீழாக உள்ள செல்லைக் காலியாக வைத்துக் கொண்டு அதில் கிளிக் செய்து பின் Table | Formula தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் ஆப்ஷன்களில் =SUM(ABOVE) என்பதனைத் தேர்ந்தெடுத்தால் விடை ரெடி. சில வேளைகளில் மேலே உள்ள எண்களை மாற்றலாம். அப்போது மீண்டும் விடை உள்ள செல்லில் கர்சரைக் கொண்டு சென்று F9. அழுத்தவும். அப்டேட்டட் டோட்டல் கிடைக்கும்.

இதோ சில நினைவில் வைக்க வேண்டிய ஷார்ட் கட் கீகள்


ShiftF3: இந்த கீகளை அழுத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களில் lowercase, initial capitals, and uppercase என மாற்றங்களை மேற்கொள்ள முடியும்.


F4: நீங்கள் மேற்கொண்ட கடைசி வேலையை மீண்டும் ஏற்படுத்தும். இது எதுவாக வேண்டுமானலும் இருக்கலாம். தேடுதல், டைப் செய்தல், பார்மட் செய்தல் என எந்த பணியாக இருந்தாலும் அது மீண்டும் மேற்கொள்ளப்படும்.


ShiftF4: இறுதியாக மேற்கொண்ட (Find) சொல் தேடும் பணி மீண்டும் மேற்கொள்ளப்படும்.


ShiftF5: கடைசியாக மாற்றங்கள் ஏற்படுத்திய இடத்திற்கு நீங்கள் எடுத்துச் செல்லப்படுவீர்கள். இது பைலை மூடித் திறந்தாலும் மேற்கொள்ளப்படும். எடுத்துக் காட்டாக ஒரு டாகுமென்ட் பைலின் 73 ஆவது பக்கத்தில் சிறிய மாற்றம் ஒன்றை மேற்கொண்டு பின் பைலை மூடிவிடுகிறீர்கள். பின் சில நாட்கள் கழித்து அதனைத் திறக்கிறீர்கள். எதுவரை திருத்தங்கள் மேற்கொண்டோம் என்று தெரியவில்லை. கவலையே வேண்டாம். ShiftF5 கீகளை அழுத்தினால் போதும். கர்சர் நீங்கள் பைலை மூடிய இடத்தில் நிற்கும்.


CtrlF6: திறந்திருக்கும் டாகுமெண்ட்களிடையே செல்ல இந்த கீகள் பயன்படும்.


F7: ஸ்பெல் செக்கர் திறக்கப்படும்.


F12: Save அண் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்

வேர்ட் வீட்டில் பர்னிச்சர் மாற்றலாமா!


வேர்ட் தொகுப்பில் மேலாக மெனு பட்டன்கள் பைல் என்பதில் தொடங்கி வரிசையாக அதற்கான ஐகான்களுடன் அமைந்திருப்பதனை நாள்தோறும் பார்த்து பழகி பயன்படுத்தி வருகிறீர்கள். சில வேளைகளில் இந்த குறிப்பிட்ட டூல் பார் பட்டன் இதன் பக்கத்திலேயே இருந்தால் நன்றாக இருக்குமே ! என்று எண்ணியிருக்கலாம்.

குறிப்பாக நீங்கள் அடிக்கடி எழுத்துவகையை மாற்றி அமைப்பவர் என்றால் பாண்ட், அளவு ஆகிய விண்டோக்களை வேறு ஒரு மெனுவிற்கு அருகில் அமைத்திருக்கலாமே என்று எண்ணுகிறீர்களா! அல்லது இன்ஸெர்ட் பக்கத்தில் பார்மட் இருந்தால் நன்றாக இருக்குமே என்று விரும்புகிறீர்களா! இவ்வாறு வேர்ட் வீட்டில் உங்கள் பர்னிச்சர்களை இடம் மாற்ற திட்டமிடுகிறீர்களா! நீங்கள் விரும்பும்படி செய்திடத்தானே கம்ப்யூட்டர் இருக்கிறது.

முதலில் Alt கீயை அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள். இனி நீங்கள் இடம் மாற்ற விரும்பும் மெனு பட்டனை உங்கள் மவுஸால் கிளிக் செய்து அப்படியே இழுத்து நீங்கள் விரும்பும் புதிய இடத்திற்குச் செல்லுங்கள். அப்போது பாய்ண்ட்டர் ஒரு செங்குத்து பாராக மாறி இருப்பதனைப் பார்ப்பீர்கள். புதிய இடத்திற்குச் சென்றவுடன் மவுஸை விட்டுவிடுங்கள். நீங்கள் விரும்பிய வகையில் வேர்ட் வீட்டில் பர்னிச்சர் மாறி இருப்பதனைப் பார்ப்பீர்கள்.

பிரிண்ட் லே அவுட்டில் டெக்ஸ்ட் ஓட்டம்


வேர்ட் தொகுப்பு பயன்படுத்துபவர்கள் வேர்ட் தரும் வியூவில் தங்களுக்கென ஒரு வியூவினைத் தங்கள் பேவரிட் வியூவாகக் கொண்டு செயல்படுவார்கள். மற்ற வியூ குறித்து என்ன சொன்னாலும் இதுதான் எனக்கேற்றது என்று அதனையே பயன்படுத் துவார்கள். நார்மல்வியூ, பிரிண்ட் லே அவுட் வியூ, வெப் லே அவுட் வியூ என இந்த வியூக்களில் நீங்கள் பிரிண்ட் லே அவுட் வியூ பயன்படுத்துகிறீர்களா! உங்களுக்கும் மற்றவர் களுக்கும் இந்த குறிப்பு பயன்படும். பிரிண்ட் லே அவுட் வியூவைப் பொறுத்த வரை நீங்கள் என்ன பார்க்கிறீர்களோ அந்த வியூதான் பிரிண்ட் எடுக்கையில் கிடைக்கும்.

இதையே ஆங்கிலத்தில் ”What you see is what you get,” என்று கூறுவார்கள். இந்த தன்மைக் காகவே இந்த வியூவினைப் பெரும்பான்மை யானவர்கள் பயன்படுத்து கின்றனர். எந்த காரணத்திற்காக நீங்கள் இதனை விரும்பினாலும் இந்த வியூ சில சிறப்பம் சங்களைக் கொண்டுள்ளது. இதன் மூலம் நம் டெக்ஸ்ட் எப்படி டாகுமெண்ட் வழியே சென்று அமைகிறது என்று இதன் மூலம் கண்காணிக்கலாம். டேபிள்கள் உடைகின் றனவா? ஒரே கருத்தைக் கூறும் பாராக்கள் பிரிகின்றனவா? என்று பார்த்து நாம் அதற்கேற்ப டாகுமெண்ட்டை அமைத்திட முடியும். இன்னொரு வகை வியூவிற்குச் செல்ல வேண்டும் என எண்ணினால் என்ன செய்கிறீர்கள். ஒரு வகை வியூவிலிருந்து இன்னொன்றுக்கு மாறுவது என்பதுவும் எளிதுதான். திரையின் கீழாக இடது ஓரத்தில் உள்ள வியூ கட்டங்களில் தேவையான கட்டத்தின் மீது கிளிக் செய்தால் போதும்.

ஆனால் பிரிண்ட் லே அவுட் வியூவிலேயே இந்த வசதி உள்ளது. மேலே மற்றும் கீழே உள்ள மார்ஜின் இடத்தை திருத்தி அமைத்து பிற வியூவகையிலும் காணலாம். இதற்கு உங் களுடைய கர்சரை மெதுவாக இரு பக்கங் களைப் பிரிக்கும் கோட்டின் அருகே கொண்டு செல்லவும். ஒரு இடத்தில் கர்சர் இரு புறம் காட்டும் அம்புக் குறியாக மாறும். அப்போது சிறிய செய்தி ஒன்று கிடைக்கும். அதில் “Hide White Space” எனத் தரப்பட் டிருக்கும். வேர்ட் 2007ல் “Double Click to Hide White Space” என்று கிடைக்கும். இந்த இரண்டு அம்பு கர்சர் இருக்கையில் கிளிக் செய்திடவும். மந்திரம் போட்டது மாதிரி பக்கங்களுக் கிடையே ஒரு கெட்டியான கோடு ஒன்று கிடைக்கும். இப்போது மேலே கீழே பார்த்தால் அங்கு உள்ள மார்ஜின் ஸ்பேஸ் நீக்கப்பட்டிருக் கும். மீண்டும் மார்ஜின் வேண்டுமா? கவலைப் படாதீர்கள். கருப்பாகச் செல்லும் கோட்டில் மீண்டும் கர்சரைக் கொண்டு செல்லுங்கள்.

அப்போது “Show White Space” என்று செய்தி கிடைக்கும். இப்போது கிடைக்கும் இரண்டு அம்புக்குறியைக் கவனித்தீர்கள் என்றால் அவை வெளிப்புறமாக திசை காட்டும் வகையில் இருக்கும். இங்கு ஒரு கிளிக் செய்தால் மீண்டும் உங்கள் டாகுமெண்ட் பிரிண்ட் லே அவுட் வியூவிற்குச் செல்லும்.



வேர்டில் டாகுமெண்ட் ஒன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு முறை பிரேக் கொடுத்து நீங்கள் தொடர்ந்து அடித்த டெக்ஸ்ட் அனைத்தையும் மீண்டும் அமைக்க வேண்டியுள்ளது. என்ன செய்வீர்கள்? வேர்டுக்குப் புதிது என்றால் மீண்டும் அனைத்தையும் டைப் செய்வீர்கள்.

சிறிது பழக்கப்பட்டவர் என்றால் தேவைப்பட்ட டெக்ஸ்ட்டை செலக்ட் செய்து பின் காப்பி செய்து அதன்பின் குறிப்பிட்ட இடத்தில் பேஸ்ட் செய்வீர்கள். அதற்குப் பதிலாக நீங்கள் இறுதியாக டைப் செய்த டெக்ஸ்ட் தொடரை அப்படியே பேஸ்ட் செய்திட ஷார்ட் கட் கீ தொகுப்பு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

இருக்கிறது. ஜஸ்ட், Ctrl + Y அழுத்துங்கள். எந்த இடத்தில் டெக்ஸ்ட்டை இடைச் செருகல் செய்திட வேண்டுமோ அந்த இடத்தில் வைத்து இந்த இரு கீகளையும் அழுத்தினால் உடனே அந்த டெக்ஸ்ட் பேஸ்ட் ஆகும்.

ஒரிஜினல் அதே இடத்தில் அப்படியே: எம்.எஸ். வேர்ட், எக்ஸெல் அல்லது பவர்பாய்ண்ட் பைல்களைக் கையாள்கையில் சில வேளைகளில் பைல் ஒன்றில் மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். உங்கள் நோக்கம் பழைய பைலை அப்படியே வைத்துக் கொண்டு மாற்றங்களுடனான புதிய பைல் வடிவத்தினை புதிய பெயரில் வைத்திட வேண்டும் என்பது. ஆனால் ஏதோ எண்ணத்தில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கையில் சேவ் அஸ் செல்லாமல் கண்ட்ரோல் + எஸ் கீகளை அழுத்தி ஒரிஜினல் பைலை மாற்றங்களுடன் சேவ் செய்து ஒரிஜினல் பைலை கோட்டை விட்டுவிடுவீர்கள்.

இதற்கு தவறே ஏற்படுத்த முடியாத ஒரு வழி ஒன்று உள்ளது. File மெனு திறந்து Open பிரிவு செல்லுங்கள். இந்த விண்டோவில் நீங்கள் பயன்படுத்த விரும்பும் பைலைத் தேடுங்கள். பைலைக் கண்டுபிடித்தவுடன் Open பட்டனை அழுத்தும் முன் சற்று தாமதப்படுத்துங்கள். எப்போதாவது அந்த பட்டனில் கீழ் நோக்கி ஒரு அம்புக் குறி இருப்பதனைப் பார்த்திருக்கிறீர்களா? நிச்சயம் பார்த்திருக்க மாட்டீர்கள்.

இப்போது பாருங்கள். இது போன்ற அம்புக் குறி இருப்பது எதனைக் குறிக்கிறது? சம்பந்தப்பட்ட பட்டனுக்கு இன்னும் சில சாய்ஸ் இருப்பதனைக் காட்டுகிறது. இப்போது அந்த அம்புக் குறியினை கிளிக் செய்திடுங்கள். ஒரு சிறிய மெனு விரியும். அதில் “Open as Copy” என்ற பிரிவைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் புரோகிராம் நீங்கள் தேர்ந்தெடுத்த பைலின் காப்பி ஒன்றைத் தேர்ந்தெடுக்கும். இந்த பைலில் நீங்கள் மேற்கொள்ள விரும்பும் எடிட் வேலைகளை மேற்கொள்ளுங்கள். உங்கள் ஒரிஜினல் பைல் அப்படியே இந்த மாற்றங்கள் இன்றி இருக்கும்.


வேர்டில் சொற்களை மட்டுமின்றி படங்களையும் கிராபிக்ஸ் உருவங்களையும் கையாளலாம். டெக்ஸ்ட் மட்டுமே உள்ள டாகுமெண்ட் அல்லாமல் படங்கள் நிறைந்த டாகுமெண்டரியும் உருவாக்கலாம். எளிதாக நிறைவேற்ற வேர்ட் தொகுப்பு பல வசதிகளைத் தந்துள்ளது.


இந்த தொகுப்பில் படங்களையும் அழகாக அமைத்து டாகுமெண்ட்டுகளை உருவாக்கலாம். அது குறித்து இங்கு காண்போம். வேர்டில் சொற்களை மட்டுமின்றி படங்களையும் கிராபிக்ஸ் உருவங்களையும் கையாளலாம். டெக்ஸ்ட் மட்டுமே உள்ள டாகுமெண்ட் அல்லாமல் படங்கள் நிறைந்த டாகுமெண்டரியும் உருவாக்கலாம். இதனை எளிதாக நிறைவேற்ற வேர்ட் தொகுப்பு பல வசதிகளைத் தந்துள்ளது. இதனை மிகவும் எளிதாக மாற்றுவது நீங்கள் இந்த வசதிகளைப் புரிந்து கொண்டு உங்கள் கைப் பழக்கத்தில் கொண்டு வருவதில்தான் உள்ளது. இவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்


கிளிப் ஆர்ட் (Clipart) : டாகுமெண்ட்களில் பயன்படுத்துவதற்காக இமேஜஸ் என்னும் படங்கள் கொண்ட லைப்ரேரி இது. வேர்டில் Insert மெனு சென்று அதில் கிடைக்கும் Picture மெனுவில் Clipart ஐப் பெறலாம். நீங்கள் வேர்ட் 2000 மற்றும் அதற்கு முந்தைய பதிப்புகளைப் பயன்படுத்துபவராயிருந்தால் கிளிப் ஆர்ட் டயலாக் பாக்ஸ் பெறலாம். அதற்குப் பிந்தைய பதிப்புகளில் வலது பக்கம் கிளிப் ஆர்ட் சைட் பார் கிடைக்கும். கிளிப் ஆர்ட் லைப்ரேரியில் உள்ள படங்கள் அனைத்தும் கேடகிரி என்னும் வகையில் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. இது படங்களைத் தேடி எடுக்க உதவுகிறது.

இதில் உள்ள டெக்ஸ்ட் பாக்ஸில் நீங்கள் விரும்பும் படத்தின் தீம் அல்லது அது குறித்த ஒரு சொல்லை டைப் செய்து என்டர் செய்தால் உடன் நீங்கள் குறிப்பிட்ட பொருள் குறித்த அனைத்து படங்களும் காட்டப்படும். வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில் இந்த படங்களைப் பயன்படுத்த எந்த படத்தை தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களோ அந்த கட்டத்தில் வலது ஓரத்தில் காணப்படும் அம்புக் குறியில் கிளிக் செய்தால் சிறிய மெனு ஒன்று விரியும். இதில் படத்தைக் காப்பி செய்வதற்கும் அப்படியே டாகுமெண்ட்டில் இடைச்செருகலாக அமைப்பதற்கும் இன்னும் பல செயல்பாடுகளுக்குமான கட்டளைச் சொற்கள் இருக்கும். தேவையானதைக் கிளிக் செய்திடலாம்.

இங்கு நீங்கள் எதிர்பார்த்த படம் கிடைக்கவில்லை என்றால் ‘Clip art on Office Online’ என்பதில் கிளிக் செய்தால் மைக்ரோசாப்ட் நிறுவனத் தளத்தில் உள்ள படங்களை இலவசமாகப் பெறலாம். இந்த படங்களைப் பெற இணையத் தொடர்பில் நீங்கள் இருக்க வேண்டும். அங்கு படங்களைத் தேர்ந்தெடுத்தால் அவை தானாகவே உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள கிளிப் ஆர்ட் பிரிவில் சேர்க்கப்படும்.

படத்தைத் தேர்ந்தெடுத்து அதனை வேர்ட் டாகுமெண்ட்டில் கொண்டு சென்றால் அந்த படத்தினை எடிட் செய்திட வேர்ட் பல வசதிகளைத் தருகிறது. படத்தின் நடுவே கிளிக் செய்து அதனை வேர்ட் டாகுமெண்ட்டின் எந்த இடத்திற்கும் இழுத்துச் செல்லலாம். நான்கு பக்கமும் கிடைக்கும் ஹேண்டில்களை மவுஸ் கர்சரால் இழுத்து படத்தின் அளவை குறைக்கவும் அதிகப்படுத்தவும் செய்திடலாம். படத்தில் இருமுறை கிளிக் செய்திடுகையில் வேர்ட் பிக்சர் டூல் பார் என்னும் வசதியையும் தருகிறது. இதன் மூலமும் நாம் படத்தை ஒழுங்கு செய்து அமைக்கலாம். படத்தின் ஒரு பகுதி வேண்டும் என்று திட்டமிட்டால் அப்படியே அதனை மட்டும் கட் செய்து அமைக்கலாம்.
போட்டோ மற்றும் படம்: கிளிப் ஆர்ட் படங்களே வேண்டாம் என்று எண்ணினால் நீங்கள் வரைந்த படம், ஸ்கேன் செய்த படம் அல்லது போட்டோ என எந்த பிக்சர் பைலையும் வேர்ட் டாகுமெண்ட்டில் இணைக்கலாம். ஏற்கனவே சொல்லப்பட்ட பிக்சர் மெனுவில் From File என்ற பிரிவில் கிளிக் செய்து பட பைல்களைக் கொண்டு வரலாம். இதனைக் கிளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில் பிரவுசிங் ஆப்ஷன் பெற்று கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கில் எங்கு நீங்கள் விரும்பும் படம் அல்லது போட்டோ பைல் உள்ளதோ அதனை செலக்ட் செய்து இணைக்கலாம்.

இவ்வாறு இணைக்கப்பட்ட படங்களுக்கு தலைப்புகள் கொடுக்க வேண்டுமா? இன்ஸெர்ட் மெனுவில் டெக்ஸ்ட் பாக்ஸ் ஆப்ஷனைப் பயன்படுத்தி தலைப்பை டைப் செய்திடலாம். டெக்ஸ்ட் பாக்ஸ் ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தவுடன் கர்சர் சிறிய கிராஸ் ஹேர் ஐகானாக மாறும். அதைக் கொண்டு டெக்ஸ்ட் பாக்ஸ் கட்டத்தை அமைத்து பின் உள்ளே டைப் செய்திடலாம். இந்த டெக்ஸ்ட் பாக்ஸை எந்த இடத்திற்கும் நகர்த்தி அமைக்கலாம். இந்த டெக்ஸ்ட் பாக்ஸையும் மிகவும் கவர்ச்சிகரமாக வண்ணத்திலும் பல வகை எபெக்டிலும் அமைக்கலாம்.
ஷேப்கள் என்னும் படங்கள்: இன்ஸெர்ட் கொடுத்து பிக்சர் மெனு செல்கையில் கிடைக்கும் இன்னொரு பிரிவு Autoshapes ஆகும். நட்சத்திரம், இதயம், சதுரம், நீள் சதுரம், வட்டம், பலவகையான அம்புக்குறி என பல ஷேப்களை வேர்ட் டாகுமெண்ட்டில் இணைக்கலாம். Insert, Picture, Autoshapes என வரிசையாகத் தேர்ந்தெடுத்த பின் ஆட்டோ ஷேப் டூல் பார் திரையில் காட்டப்படும். இந்த ஷேப்கள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதைப் பார்க்கலாம். ஏதேனும் ஒரு பட்டனில் கிளிக் செய்து ஒரு ஷேப்பைத் தேர்ந்தெடுக்கலாம். இதன் மீது மவுஸ் கர்சரால் அழுத்திப் பிடித்தவாறே இழுத்து வேர்ட் டாகுமெண்ட்டில் விட்டு விடலாம்.

பின் முன்பு கூறியபடி இதன் மீது கிளிக் செய்து பிக்சர் டூல் பார் மூலம் இதன் அகலம், உயரத்தை மாற்றலாம். ஷேப்பையும் மாற்றலாம். ஷேப் மீது ரைட் கிளிக் செய்தால் Format Autoshape என்ற டூல் பார் கிடைக்கும். இதன் மூலம் ஷேப்பினை எடிட் செய்திடலாம். இந்த டூல் பாரின் இடது ஓரத்தில் பிடித்து இழுத்து இதனை டாகுமெண்ட்டில் எந்த இடத்தில் வேண்டும் என்றாலும் நமக்கு வசதியாக இருக்க வைக்கலாம்.
வேர்ட் ஆர்ட்: படங்களைக் கையாள்வதில் நான்காவதாக நமக்குக் கிடைக்கும் பிரிவு வேர்ட் ஆர்ட் ஆகும். Insert, Picture சென்று Wordart Gallery ஐப் பெறலாம். இதில் பல்வேறு வகையிலான டெக்ஸ்ட் ஸ்டைல் கிடைக்கும். உங்களுக்குப் பிடித்த டெக்ஸ்ட் ஸ்டைல் தேர்ந்தெடுத்து பின் கிடைக்கும் கட்டத்தில் டெக்ஸ்ட் அமைக்கலாம். தேர்ந்தெடுத்த ஸ்டைலில் டெக்ஸ்ட் உருவாகும். பின் இதனையும் அளவு மற்றும் பிற பரிமாணங்களை மாற்றி இழுத்துச் சென்று நீங்கள் விரும்பும் இடத்தில் அமைக்கலாம்.

மேலே குறிப்பிட்டவை தவிர மேலும் சில வழிகளில் படங்களை வேர்ட் தொகுப்பிற்குள் கொண்டு வரலாம். டிஜிட்டல் கேமராவினை இணைத்து அதில் எடுத்த படங்களைக் கொண்டு வரலாம். அல்லது ஸ்கேனரில் ஸ்கேன் செய்த படங்களையும் இணைக்கலாம். பல வெப் சைட்டுகளில் கிளிப் ஆர்ட் படங்கள் ஆயிரக்கணக்கில் கிடைக்கின்றன. இவற்றில் இருந்தும் தேடி எடுத்து கம்ப்யூட்டரில் பதிந்து வைத்தும் பயன்படுத்தலாம். இனி நீங்கள் உருவாக்கும் வேர்ட் டாகுமெண்ட்களில் நிறைய படங்களை எதிர்பார்க்கலாமா? முதலில் உங்கள் படத்தை அமைத்துப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளுங்கள்.


வேர்டில் உள்ள ஒரு டேபிளை அழிக்க முயற்சிக்கையில் அதில் உள்ள தகவல்கள் அழியும்; டேபிள் அப்படியே இருக்கும்; அல்லது டேபிள் பார்மட்டிங் அழியும்; தகவல்கள் அப்படியே இருக்கும்.

வேர்ட் டெக்ஸ்ட் டாகுமெண்ட்டில் சில தகவல்களைக் கோர்வை யாகவும் வகைப் படுத்தியும் தெரிவிக்க டேபிள்கள் என்னும் அட்டவணைகள் பயன்படுகின்றன. இந்த அட்டவணைகளை எப்படி எல்லாம் கையாளலாம் என்று பார்ப்போம். டாகுமெண்ட்டில் டேபிள் ஒன்றை உருவாக்க சில வழிகள் உள்ளன.




1. Table மெனுவில் Insert என்பதைத் தேர்ந்தெடுத்து பின் கிடைக்கும் துணை மெனுவில் Table என்பதைத் தேர்ந்தெடுக்கலாம். அதன்பின் கிடைக்கும் மெனுக் கட்டத்தில் அந்த டேபிளில் எத்தனை நெட்டு வரிசைகளும் (column) படுக்கை வரிசைகளும் (row) இருக்க வேண்டும் என்பதனைத் தெரியப்படுத்த வேண்டும். இதன் பின் ஓகே கிளிக் செய்திடவும்.


2. Standard டூல் பாரில் Insert Table பட்டனில் கிளிக் செய்து பின் முன்பு குறிப்பிட்டது போல எத்தனை வரிசைகள் என்பதனைக் கொடுத்தால் டேபிள் கிடைக்கும்.


3. Tables and Borders என்ற டூல் பாரில் Draw Table என்ற பட்டனில் கிளிக் செய்தால் கிடைக்கும் கை போன்ற அடையாளத்தை வைத்துக் கொண்டு டேபிளை வரையலாம்.


இன்னொரு வழியும் உள்ளது. வேர்ட் தானாக டேபிளை வரையும் வழி அது. + அடையாளத்தை ஏற்படுத்தி பின் எந்த அளவிற்கு நெட்டு வரிசையின் அகலம் இருக்க வேண்டுமோ அந்த அளவிற்கு ஹைபன் அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும். இதன் பின் என்டர் அழுத்த வேர்ட் இந்த அடையாளங்களின் அடிப்படையில் டேபிள் ஒன்றை ஏற்படுத்தும். பின் வழக்கம்போல டேபிளின் வரிசைகளை சரிப்படுத்தலாம்.


டேபிளை முற்றிலுமாக அழிக்க: வேர்டில் உள்ள ஒரு டேபிளை அழிக்க முயற்சிக்கையில் அதில் உள்ள தகவல்கள் அழியும்; டேபிள் அப்படியே இருக்கும். அல்லது டேபிள் பார்மட்டிங் அழியும்; தகவல்கள் அப்படியே இருக்கும். இரண்டையும் அழித்திட என்ன செய்திட வேண்டும்? முதலில் டேபிளை செலக்ட் செய்திடுங்கள். இதற்கு Table மெனுவிலிருந்து Select Table கிளிக் செய்திடுங்கள். இந்த டேபிள் மெனுவில் Delete Rows என்பதில் கிளிக் செய்திடவும்.


டேபிளை மட்டும் வைத்துக் கொண்டு தகவல்களைக் காலி செய்திட டேபிளை செலக்ட் செய்து டெலீட் பட்டனை அழுத்தவும்.டேபிளை அழித்து அதன் தகவல்களை டேப்களில் அமைந்த டெக்ஸ்ட்டாக அமைத்துக் கொள்ள டேபிளை செலக்ட் செய்திடுங்கள். பின் டேபிள் மெனுவிலிருந்து Convert Table to Text என்பதில் கிளிக் செய்திடுங்கள். தேவைப்பட்டால் Tabs என்பதைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்திடவும்.


டெக்ஸ்ட் பாக்ஸில் டேபிளை வைத்திட:
ஒரு டேபிள் எப்போதும் வலது இடது மார்ஜின்களை அடைத்துக் கொண்டு அமையும். டெக்ஸ்ட் எப்போதும் அதனைச் சுற்றி அமையாது. எனவே அதனை ஒரு டெக்ஸ்ட் பாக்ஸில் அமைப்பது தேவையாகிறது. அதற்கு Insert மெனுவிலிருந்து Text Box தேர்ந்தெடுக்கவும். அந்த பக்கத்தில் எங்கு வேண்டுமானாலும் இழுத்து டெக்ஸ்ட் பாக்ஸ் ஒன்றை அமைக்கவும்.



இப்போது கர்சர் டெக்ஸ்ட் பாக்ஸிற்குள் இருக்கும். இனி ஸ்டாண்டர்ட் டூல் பாரில் இன்ஸெர்ட் டேபிள் பட்டனில் கிளிக் செய்திடவும். கிரிட் வழியாகச் சென்று உங்கள் டேபிளில் எத்தனை நெட்டு வரிசை மற்றும் படுக்கை வரிசை என அமைத்திடவும். மவுஸ் பட்டனை ரிலீஸ் செய்தபின் வேர்ட் நீங்கள் கொடுத்த அளவுகளுக்கேற்ப டேபிள் ஒன்றை அமைத்துக் கொள்ளும்.


டேபிளைத் தேர்ந்தெடுக்க: ஒருடேபிளைத் தேர்ந்தெடுக்க கர்சரை டேபிளின் உள்ளே வைத்து பின் Alt கீயை அழுத்திக் கொண்டு numeric keypad ல் 5 என்ற கீயை அழுத்தவும். இவ்வாறு அழுத்தும்போது Num Lock கீ அழுத்தப்பட்டு அணைக்கப்பட்டிருக்க வேண்டும். மவுஸால் டேபிளை செலக்ட் செய்திட விரும்பினால் ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு டேபிளில் எங்காவது கர்சரை வைத்து இருமுறை கிளிக் செய்திடவும்.


டேபிளைப் பிரிக்க: ஒரு டேபிளை இரண்டாகப் பிரிக்க எந்த படுக்கை வரிசை புதியதாய் அமைய இருக்கும் டேபிளின் முதல் வரிசையாக இருக்க வேண்டும் என எண்ணுகிறீர்களோ அந்த வரிசையில் முதல் காலத்தில் கர்சரை வைத்து பின் Table மெனுவில் Split Table என்பதில் கிளிக் செய்திடவும்.


டேபிள் செல்களைப் பிரிக்க : Tables and Borders என்ற டூல்பாரில் Draw Table பட்டனை டேபிள் செல்களைப் பிரிக்கப் பயன்படுத் தலாம். தேவை என்றால் என்ற Tables and Borders டூல்பாரினை திரையில் கொண்டு வரவும். இதில் Draw Table பட்டனைக் கிளிக் செய்திடவும். (ஒரு பென்சிலோடு இருக்கும் பட்டன்) எந்த செல் அல்லது செல்களைப் பிரிக்க வேண்டுமோ அந்த செல்களில் இந்த பென்சில் பட்டனை எடுத்துச் சென்று இழுக்கவும். வேர்ட் பார்டர் லைன் ஒன்றை உருவாக்கி செல்களைப் பிரித்து அமைக்கும்.


செல்களில் டேப் பயன்பாடு:


ஒரு செல்லில் இருந்து இன்னொரு செல்லுக்குச் செல்ல கூச்ஞ கீயை அழுத்திச் செல்லலாம். டேப் கீ மட்டும் அழுத்தினால் கர்சர் இடது புறத்திலிருந்து வலது புறமாகச் செல்லும். ஷிப்ட் கீயுடன் டேப் கீயை அழுத்தினால் கர்சர் வலது புறத்திலிருந்து இடது புறமாகச் செல்லும்.


பார்டர் இல்லாத டேபிள்:


ஒவ்வொரு டேபிளிலும் கிரிட் லைன்கள் இருக்கும். இவை திரையில் காட்டப்படும். ஆனால் பிரிண்ட் ஆகாது. பழைய வேர்ட் தொகுப்பில் டேபிளை உருவாக்கு கையில் இந்த பார்டர்கள் தாமாக உருவாகும். இவை கிரிட் லைனை மறைக்கும் கெட்டியான கோடு களாக இருக்கும். இந்த கெட்டியான பார்டர் லைன்களை நீக்க வேண்டும் என விரும்பினால் செட்டிங்ஸ் மாற்ற வேண்டும். டேபிளை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.



Formatting டூல் பாரில் Borders பட்டனுக்குக் கொண்டு செல்லவும். அங்கு கிடைக்கும் பேலட்டில் No Border பட்டனை செலக்ட் செய்திடவும். இனி கெட்டியான பார்டர் கோடுகள் நீக்கப்பட்டு திரையில் மட்டுமே காட்டப்படும் கிரிட் லைன்கள் காட்டப்படும். இந்த கிரிட் லைன்களையும் மறைக்கலாம். கூச்ஞடூஞு மெனுவிலிருந்து Hide Gridlines என்பதனைத் தேர்ந்தெடுக்க வேண்டியது தான். மீண்டும் அவை வேண்டும் என்றால் Show Gridlines என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.


விரும்பிய வகையில் கலரில் பார்டர் அமைக்க:வேர்ட் டேபிளில் விரும்பிய கலரிலும் வகையிலும் பார்டர்களை அமைக்கலாம். Tables and Borders மெனுவினைத் திரையில் பெறவும். இதற்கு View மெனுவிலிருந்து Toolbars என்பதனைத் தேர்ந் தெடுக்கவும். கிடைக்கும் துணை மெனுவில் Tables and Borders என்பதைத் தேர்ந்தெடுத்தால் இந்த மெனு திரைக்கு வரும்.



லைன் ஸ்டைல் என்ற பீல்டில் கிடைக்கும் ட்ராப் டவுண் லிஸ்ட்டில் உங்களுக்குப் பிடித்த பார்டர் Line Style ஐத் தேர்ந்தெடுக்கவும். பார்டருக்கான கலர் தேர்ந்தெடுக்க Border Color என்பதில் கிளிக் செய்திடவும். இனி Draw Table என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் பென்சில் போன்ற கர்சரின் துணை கொண்டு நீங்கள் விரும்பிய பார்டர் லைனை தேர்ந்தெடுத்த வண்ணத்தில் அமைக்கலாம். மேலே கூறிய வழிகளை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுத்து டேபிளில் பார்டர்களை அமைக்கலாம்.


செல் பார்டர்களை அழித்து செல்களை இணைக்க:

செல்கள் இரண்டை இணைக்க இடையே உள்ள கோடினை அழிப்பதுவும் ஒரு வழியாகும். இதற்கு Tables and Borders மெனுவினைத் திரையில் பெறவும். இதில் Eraser என்று ஒரு பட்டன் இருக்கும். இதன் மீது மவுஸின் கர்சரைக் கிளிக் செய்து செலக்ட் செய்திடவும். ஒரு அழி ரப்பர் போன்ற படம் கிடைக்கும். இதனை எடுத்துக் கொண்டு இணைக்கப்பட வேண்டிய செல்களின் நடுவே உள்ள கோட்டில் வைத்து அழுத்தினால் கோடு உடனே மறைந்து இரண்டு செல்களும் ஒரு செல்லாகக் காட்சி அளிக்கும்.


குறிப்பிட்ட டேபிள் செல்களை தனியே காட்ட:

டேபிள் செல்களில் சிலவற்றில் நாம் தனித்துக் காட்ட விரும்பும் தகவல்களைத் தந்திருப்போம். இந்த செல்களுக்கு மட்டும் ஷேடிங் கொடுத்து தனியாகக் காட்டலாம். எந்த செல்லிலாவது மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் ஷார்ட் கட் மெனுவில் Borders and Shading என்பதனைத் தேர்ந்தெடுக்க வும்.பின் கிடைக்கும் விண்டோவில் என்ற டேபில் கிளிக் செய்திடவும். அடுத்து Fill என்பதில் கிரே ஷேடிங் எத்தனை சதவிகிதம் இருக்க வேண்டும் எனத் தேர்ந்தெடுக்கவும். பின் Apply To என்பதில் கிடைக்கும் மெனுவில் டேபிள் முழுவதுமாகவா அல்லது செல்களில் மட்டுமா என்று கேட்கப்படும். உங்கள் விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால் அந்த செல் மட்டும் அல்லது டேபிள் முழுவதும் என தேர்ந்தெடுத்தபடி ஷேட் செய்யப்பட்டு காட்டப்படும்.


டேபிளின் நெட்டு வரிசை அகலத்தை மாற்ற:டேபிளில் நெட்டு வரிசையின் அகலத்தை அதிகப்படுத்தவும் குறைக்கவும் செய்யலாம். டேபிளில் ஏதாவது ஒரு செல்லில் கர்சரை வைத்தால் டேபிளின் செல் கோட்டிற்கு நேராக ரூலரில் சிறிய கிரிட் கட்டம் கொண்ட அடையாளம் இருக்கும். இதன் அருகில் கர்சரைக் கொண்டு சென்றால் Move Table Column என்று காட்டப்படும். இதனை இழுத்து செல்லின் அகலத்தை குறைக்கவும் அதிகப்படுத்தவும் செய்திடலாம். இதற்குப் பதிலாக டேபிளில் உள்ள செல் பார்டர் லைனில் கர்சரை வைத்தால் அது இருபுற அம்புக்குறிகள் கொண்ட கர்சராக மாறும்.



இதனையும் இரு வழிகளில் இழுத்து அகலத்தை மாற்றலாம். இதே போல படுக்கை வரிசையின் அகலத்தையும் இடது புறம் உள்ள ரூலரில் உள்ள கோடுகளின் பாரில் கர்சரை வைத்து இழுத்து அதிகப்படுத்தலாம். இவ்வாறு இழுக்கையில் ஆல்ட் கீயை அழுத்தினால் ஒவ்வொரு செல்லுக்கும் இடையே உள்ள நீள அகலம் எவ்வளவு என்று காட்டப்படும். இதனைத் தெரிந்து கொண்டு எல்லாம் ஒரே மாதிரியாகவோ அல்லது தேவைப்படும் அளவிலோ வைக்கலாம்.


டேபிளின் நெட்டு வரிசையில் வரிசை எண்களை அமைக்க:ஒரு டேபிளில் உள்ள நெட்டு வரிசைகளில் வரிசையாக சீரியல் எண்களை 1,2,3 என்று அமைக்கலாம். இதற்கு எந்த நெட்டு வரிசையில் அமைக்க விரும்புகிறீர்களோ அந்த வரிசையின் முதல் செல்லைத் தேர்ந்தெடுக்கவும். அந்த செல்லுக்கு மேலாக பார்டர் அருகே கர்சரைக் கொண்டு செல்லவும். கர்சர் சிறிய கருப்பு அம்புக் குறியாக மாறுகையில் கிளிக் செய்திடவும். இப்போது அந்த செல் வரிசை முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிடும். இப்போது Formatting டூல் பாரினைத் தேர்ந்தெடுத்து அதில் Numbering என்பதில் கிளிக் செய்திடவும். அனைத்து செல்களும் 1,2,3 என எண்களிடப் பட்டிருக்கும்.

வேர்ட் டேபிளில் விரும்பிய கலரிலும் வகையிலும் பார்டர்களை அமைக்கலாம். Tables and Borders மெனுவினைத் திரையில் பெறவும். ஒரு டேபிளில் உள்ள நெட்டு வரிசைகளில் வரிசையாக சீரியல் எண்களை 1,2,3 என்று அமைக்கலாம். இதற்கு எந்த நெட்டு வரிசையில் அமைக்க விரும்புகிறீர்களோ அந்த வரிசையின் முதல் செல்லைத் தேர்ந்தெடுக்கவும்.