Friday 30 September 2011

இணைய உலகில் கோப்புகளை சேமிப்பதற்கு


வன்தட்டு, சீடி, டிவிடி, ப்ளாஷ் ட்ரைவ் என எந்த மீடியாவில் நாம் பைல்களைப் பதிந்து சேமித்து வைத்தாலும் என்றாவது ஒரு நாள் அந்த கோப்புகள் நமக்குக் கிடைக்காமல் போகலாம்.
நம் வன்தட்டு கெட்டுப் போகாது என்ற எண்ணத்தில் கோப்புகளை கணணியிலேயே பதிந்து வைக்கிறோம். ஆனால் நகர்ந்து செயல்படும் வகையில் அது இயங்குவதால் நாம் எதிர்பாராத ஒரு நாளில் அதன் இயக்கம் முடங்கிப் போய் கோப்புகளை நம்மால் பெற இயலாமல் போய்விடுகிறது.
என்ன செய்தாலும் கோப்புகள் கிடைப்பது இரண்டாம் பட்சம் தான் என்று சொல்லும் அளவிற்கு நிலைமை மோசமாகிறது. மற்ற மீடியாக்களின் வாழ்நாளும் அதே போல் தான்.
இதற்கான பல தீர்வுகளில் ஒன்றாக கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில் ஒரு தீர்வு கிடைக்கிறது. பல இணைய தளங்கள், நம் கோப்புகளை பதிந்து சேவ் செய்து வைத்திட வசதிகளை நமக்குத் தருகின்றன. ஓரளவில் கோப்புகளை சேமித்து வைத்திட இந்த வசதி இலவசமாகவே தரப்படுகிறது.
இந்த வகையில் சி.எக்ஸ்(cx) என்னும் இணைய தளம் இயங்குகிறது. இந்த தளத்தின் இணைய முகவரி: http://www.cx.com/ . இந்த தளம் சென்று நம் மின்னஞ்சல் முகவரி, பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சீட்டு கொடுத்துப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் 10 ஜிபி இடம் தரப்படுகிறது. பதிந்தபின் இந்த தளத்தில் லொகின் செய்து நாம் பதிந்து சேவ் செய்திட விரும்பும் கோப்புகளை நம் கணணியிலிருந்து பதிவேற்றம் செய்திடலாம். மிக எளிதாக இதனை மேற்கொள்ளலாம். நாம் எத்தனை கோப்புகளை பதிவேற்றம் செய்துள்ளோம் என்ற கணக்கும் காட்டப்படுகிறது.
இந்த தளத்தில் எந்த ஒரு வகை கணணியிலிருந்தும் கோப்புகளை பதிவேற்றம் செய்திடலாம். விண்டோஸ், மேக் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். மேலும் இணைய இணைப்பு வசதி கொண்ட மொபைல் போன்களிலிருந்தும் பதிவேற்றம் மற்றும் தரவிறக்க பணிகளை மேற்கொள்ளலாம்.
இதனால் நாடு விட்டு நாடு சென்றாலும், ஓரிடத்தில் இணைய இணைப்பே கிடைக்கவில்லை என்றாலும் கிடைக்கும் இடத்தில் இருந்து கோப்புகளை கையாளலாம்.
பின்னர் இதனை மீண்டும் நம் கணணிக்கு தரவிறக்கம் செய்வதும் எளிதாகவும், வேகமாகவும் நடைபெறுகிறது. ஒவ்வொரு பெயர் பதிவிற்கும் 10 ஜிபி இடம் தரப்படுவதால் தனி நபர் பயன்பாட்டிற்கு இது மிகவும் உகந்தது.
எந்த இடத்திலிருந்தும், எந்த கணணியிலிருந்தும் இந்த கோப்புகளை தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்பதால், அடிக்கடி பயணம் மேற்கொள்வோர், தங்கள் கோப்புகளை பாதுகாப்பாக வைத்திட இது ஒரு சிறந்த வசதி ஆகும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை தெரியப்படுத்துங்கள்