Saturday 22 October 2011

JetClean: கணணியில் உள்ள தேவையில்லாத கோப்புகளை நீக்குவதற்கு


நமது கணணியில் உள்ள தேவையில்லாத கோப்புகளை நீக்கி வேகம் குறையாமல் செயல்பட CCleaner என்ற மென்பொருள் உதவி புரிகிறது.
மேலும் கணணியின் Registry கிளீன்(Clean) செய்யவும் உதவுகிறது. CCleaner உள்ள வசதிகளையும் மேலும் பல வசதிகளையும் கொண்ட மென்பொருள் JetClean. CCleaner போலவே பயன்படுத்த எளிதாகவும், செயலில் அருமையாகவும் உள்ளது.
மேலும் இதில் மென்பொருள்களை நீக்கும்(Uninstall) வசதியும் உள்ளது. அதிக நினைவகத்தை(Memory) பிடித்துள்ள மென்பொருள்களை தனியே காணும் வசதியும் நீக்கும்(Uninstall) வசதியோடு உள்ளது.
மேலும் தேவையில்லாத டூல்பார்(Tool Bar) இருந்தால் அவற்றை நீக்க எளிதாக டூல்பார்களை மட்டும் தனியே காணும் வசதி உள்ளது.
இணையவேகத்தை கூட்ட Internet Booster என்ற வசதியும், உங்கள் RAM வேகத்தை கூட்ட RAMClean என்ற வசதியும் உள்ளது. செயல்படும் போது குறைந்த நினைவகத்தில் வேகமாக செயல்படுகிறது.

யூடியுப் வீடியோக்களில் ஓடியோவை மட்டும் பிரித்தெடுப்பதற்கு


இணையத்தை பயன்படுத்தும் அனைவருக்கும் தெரிந்த ஒரு வீடியோ பகிரும் தளம் யூடியுப். இந்த தளத்தில் அனைத்து வகையான வீடியோக்களையும் நாம் பார்க்கலாம்.
அதுமட்டுமல்ல நாமும் நம் வீடியோவை நம் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். இந்த தளத்தில் இருந்து வீடியோவை பதிவிறக்க பல வகையான மென்பொருள்கள் உள்ளது. அது மட்டுமல்ல பல வகையான இணையதளங்கள் மூலமாகவும் நாம் இந்த தளத்தில் இருந்து பதிவிறக்கி கொள்ளலாம்.
இதில் நீங்கள் எந்த வகையான வீடியோவையும் பார்க்கலாம். இதில் இல்லாத வீடியோவே கிடையாது என்று கூறலாம். அந்த அளவுக்கு இதில் வீடியோக்கள் நிறைந்துள்ளது.
இதில் உள்ள வீடியோ சிலவற்றிற்கு ஓடியோவை தேடினாலும் கிடைக்காது. சில தளங்கள் மூலம் நாம் யூடியுப்பின் வீடியோவை ஓடியோவாக மாற்றலாம்.
அதைப்போல தான் இந்த தளமும் ஆனால் இந்த தளம் சற்றுவேகமாகவே செயல்படுகிறது. யூடியுப் வீடியோக்களை மிக எளிதாக இந்த தளம் மூலம் ஓடியோவாக மாற்றிவிடலாம்.
வீடியோவை ஓடியோவாக மாற்ற: இந்த தளத்திற்கு சென்றவுடன் பின்னர் உங்கள் யூடியுப் வீடியோவின் சுட்டியை(LINK) கொப்பி செய்து கொள்ளுங்கள்.
அந்த தளத்தில் உள்ள பெட்டியில் அதை பேஸ்ட் செய்யுங்கள். பின்னர் CONVERT VIDEO என்ற பொத்தானை அழுத்தினால் போதும், உங்கள் வீடியோ ஓடியோவாக மாற்றப்படும்.

ஓபரா இணைய உலாவியை தரவிறக்கம் செய்வதற்கு


ஓபரா இணைய உலாவியானது மிக வேகமாக செயல்படும் இணைய உலாவியாக உள்ளது.
தற்போது இந்த உலாவியில் பல புதிய சிறப்பம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது.
43 மொழிகளில் வரும் ஓபரா இணைய உலாவி விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் ஓபரேடிங் சிஸ்டங்களில் வேலை செய்யும் விதமாக வடிவமைக்கபட்டு உள்ளது.
இந்த உலாவியில் நாம் தேட வேண்டிய தகவல்களை மிக விரைவாக பெறலாம்.

BIOS பற்றிய சில தகவல்கள்


கணணியின் அடிப்படை உள்ளீடு/வெளியீடு கட்டமைப்பினையே BIOS (basic input/output system) என்கிறோம்.
இந்த கட்டமைப்பினைக் கொண்டுள்ள மென்பொருள் புரோகிராம், கணணி ஒன்று இயங்கத் தொடங்குகையில், அதில் இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள்(ஹார்ட்வேர், சவுண்ட்கார்ட், கீ போர்ட், மவுஸ் போன்றவை) அனைத்தும் சரியாக உள்ளனவா என்று சோதனை செய்து ஓபரேட்டிங் சிஸ்டத்தினை இயக்க அனுமதிக்கிறது.
இந்த வன்பொருள் சாதனங்களுக்கான சோதனையை POST– poweron selftest என அழைக்கிறோம். இந்த சோதனை முடிவு சரியாக இருந்தால் தான் இந்த சாப்ட்வேர் புரோகிராம், கணணி கட்டுப்பாட்டினை ஓபரேட்டிங் சிஸ்டத்திடம் ஒப்படைக்கும்.
ஒவ்வொரு பெர்சனல் கணணியிலும் ஒரு பயாஸ் சிஸ்டம் இருக்கும். சில வேளைகளில் இந்த சிஸ்டத்தினையும் நாம் திறந்து பார்த்து அதில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.
இந்த பயாஸ் உள்ளாக ஒரு கடவுச்சொல்லை செட் செய்திடலாம். வன்பொருள் சாதன நிர்வாகத்தினை அமைத்திடலாம், கணணியை எந்த சாதனங்கள் வழியாக பூட் செய்யப்பட வேண்டும் என்பதனை நிர்ணயம் செய்திடலாம்.
பயாஸ் புரோகிராமிற்கான இன்டர்பேஸ் விண்டோவினை எளிதாக நாம் அணுகி அதில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.
ஆனால் மிக எச்சரிக்கையுடன் மட்டுமே பயாஸ் அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். எனவே மாற்றங்களை ஏற்படுத்துகையில், அதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியவில்லை என்றால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தக் கூடாது.
பயாஸ் அமைப்பில் நுழைந்திட என்ன செய்திட வேண்டும் என்பதனை இங்கு காணலாம். கணணி இயக்கத் தொடங்கியவுடனேயே பயாஸ் தன் சோதனையை மேற்கொண்டு விண்டோஸ் சிஸ்டத்திடம் பொறுப்பை ஒப்படைக்க சில விநாடிகள் தான் எடுத்துக் கொள்ளும்.
எனவே பயாஸ் அமைப்புக்குள் நுழைய விரும்பினால் விரைவாக அதனை நிறுத்தி நுழைய வேண்டும். இதற்கு கணணி இயங்கத் தொடங்கியவுடன் முதல் திரை காட்டப்படும்.
அதில் எந்த கீயை அழுத்தினால் பயாஸ் அமைப்பிற்குள் நுழையலாம் என்று காட்டப்படும். அது F1, F2, or F3 ஆகியவற்றுள் ஒன்றாக இருக்கலாம். Esc அல்லது Delete அல்லது கீயாக இருக்கலாம்.
சில கணணிகளில் இந்த கீகளுடன் இன்னொரு கீயினைச் சேர்த்து அழுத்த வேண்டியதிருக்கலாம். எனவே முதலில் காட்டப்படும் பக்க செய்தியைக் கவனமாகக் காணவும். அந்த செய்திகள் கீழ்க்குறிப்பிட்டவற்றுள் ஒன்றாக இருக்கலாம்.
‘Press F1 to enter setup’
‘BIOS settings: Esc’
‘Setup = Del’
‘System configuration: F2'
இதனை முதல் முயற்சியிலேயே பார்க்க இயலாவிட்டால் மீண்டும் கணணியை பூட் செய்து காணவும். பயாஸ் அமைப்பில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு முன் ஏற்கனவே உள்ள செட்டிங்ஸ் குறித்து ஒரு தாளில் குறித்துக் கொள்ளவும் அல்லது பயாஸ் விண்டோவின் ஸ்கிரீன் ஷாட் ஒன்றை எடுத்துவைத்துக் கொள்ளவும். அதன் பின் மாற்றங்களை மேற்கொள்ளலாம்.
பொதுவாக கணணி எந்த சாதனங்கள் வழியாக பூட் செய்வது என்று அமைப்பதுதான் இதில் பலரும் மேற்கொள்ளும் வேலையாக இருக்கும். ஓபரேட்டிங் சிஸ்டம் ஹார்ட் டிஸ்க்கில் அமைக்கப்படுவதால் முதலில் ஹார்ட் டிஸ்க் வழியாகப் பூட் செய்திடும்படி அமைப்போம்.
இதில் பிரச்னை ஏற்பட்டால் சீடியில் ஓபரேட்டிங் சிஸ்டத்தினை வைத்துக் கொண்டு, முதலில் சீடி வழியாக ஓபரேட்டிங் சிஸ்டத்தினைத் தேடும் வகையில் அமைக்கலாம். எந்த மாற்றங்களை ஏற்படுத்தினாலும் பயாஸ் விண்டோவினை விட்டு வெளியேறுகையில் மாற்றங்களை சேவ் செய்திட வேண்டும்.
இதற்கெனக் காட்டப்படும் மெசேஜ் விண்டோவினைப் பார்த்துச் சரியான கீகளை அழுத்தி சேவ் செய்திட வேண்டும். சேவ் செய்த பின்னர் இந்த மாற்றங்களை இயக்க மீண்டும் ஒரு முறை கணணியை பூட் செய்திட வேண்டும்.

Friday 21 October 2011

கூகுள் லோகோக்களை மாற்றி அமைப்பதற்கு


உலகளவில் சில பிரபலமான நபர்களின் பிறந்த நாள் மற்றும் சில முக்கியமான நாட்களில் அந்த அறிஞர்களுக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக கூகுள் தனது லோகோவை மாற்றி அமைக்கும்.
இந்த சேவையானது Google Doodles  என்று அழைக்கப்படுகிறது. இந்த Google Doodles சேவையை 1998 ஆகஸ்ட் முதல் தொடர்ந்து வருகிறது.
அறிஞர்களை தனது லோகோ மூலம் கவுரவிக்கிறது. இப்படி உருவாக்கப்படும் Google Doodles வாசகர்களை ரசிக்கவும் வைக்கிறது. ஒரு சில லோகோ அனைவரின் மனதையும் கவரும் அனைவரும் இந்த லோகோவே தொடர்ந்து இருக்காதா என நினைப்பார்கள்.
ஆனால் மறுநாளே அந்த லோகோ மறைந்து பழைய படி Google லோகோ வந்திருக்கும். இப்பொழுது கூகுள் வாசகர்களுக்கு ஒரு புதிய வசதியை வெளியிட்டுள்ளது. நீங்கள் நினைக்கும் Google Doodle உங்கள் தேப்பல்ட் லோகோவாக வைத்து கொள்ளலாம்.
இதற்கு எந்த நீட்சியையும் நிருவ வேண்டியதில்லை, எந்த மென்பொருளும் தேவையில்லை. இந்த Google Doodles  லிங்கில் செல்லுங்கள் அங்கு கூகுள் இதுவரை வெளியிட்ட அனைத்து Google doodles வரிசைப்படி அமைக்கப்பட்டிருக்கும்.
அதில் உங்களுக்கு பிடித்த google doodle அருகில் உள்ள Make this my favorite doodle என்ற பட்டனை அழுத்தினால் போதும். அடுத்த கணம் அந்த google Doodle உங்களின் கூகுள் டிபால்ட் கூகுள் லோகோவாக மாறிவிடும்.
இந்த தளத்தில் அனைத்து நாடுகளின் google Doodles இருக்கும். இதில் உங்களுக்கு எது பிடித்து உள்ளதோ அதை உங்களின் கூகுள் டீபால்ட் லோகோவாக வைத்து கொள்ளலாம்.

Monday 17 October 2011

இணையத்தில் வேகமாக தரவிறக்கம் செய்வதற்கு


நாம் இணையத்தில் பொதுவாக தரவிறக்கம் செய்யும் வேகத்தை விட Internet Download Manager வழியாக தரவிறக்கம் செய்யும் போது 5 மடங்கு வேகமாக தரவிறக்கம் நடைபெறுகிறது.
இது ஒரு கட்டண மென்பொருள். இதன் சந்தை மதிப்பு $25 ஆகும். இதன் புதிய பதிப்பை கிராக் செய்து Full Version-க தரவிறக்கலாம். இதன் IDM ஜ தரவிறக்கம் செய்து நிறுவியதும் உங்கள் கணணியை Restart செய்யவும்.
Internet Download Manager தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இப்போது கீழே உள்ள லிங்கில் சென்று கிராக் தரவிறக்கம் செய்து Copy செய்து வைத்துக்கொள்ளவும்.
IDM Crack தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
முதலில் C கோலன் ஓபன் செய்து Program File ஓபன் பண்ணவும். அதில் Internet Download Manager ஓபன் செய்யவும். இப்போது முதலில் Copy செய்து வைத்து இருந்த கிராக்கை இந்த இடத்தில் Paste பண்ணவும். Copy and Replace கொடுக்கவும்.
கீழே 32 bit, 64 bit இரண்டுக்கும் தனித்தனியாக RegKay உள்ளது. உங்கள் கணணிக்கு தேவையானதை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
இப்போது தரவிறக்கம் செய்த RegKeyயை டபுள் கிளிக் செய்து ஓபன் செய்தால் வரும் விண்டோவிற்கு yas கொடுக்கவும். அடுத்து உங்கள் IDM Successfully added என்று வந்துவிடும் OK கொடுங்கள்.

வீடியோக்களை மாற்றம் செய்வதற்கு


இணையத்தில் எவ்வளவோ வீடியோ  மாற்றம் செய்யும் மென்பொருள்கள் கிடைக்கின்றன. சிலவற்றை காசு கொடுத்து வாங்க வேண்டும். சில குறிப்பிட்ட நாட்களுக்கு இலவச சேவை அளிக்கும்.
ஆனால் இந்த மென்பொருளானது வீடியோக்களை மாற்றம் செய்யும் இலவச சேவையை முழுமையாக அளிப்பதுடன் அதிக வசதிகளை கொண்டுள்ளது.
இதனை பதிவிறக்கம் செய்து நிறுவியதும் உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள Add Video பட்டனை கிளிக் செய்வதன் மூலம் நம்மிடம் உள்ள வீடியோ படங்களை தேர்வு செய்யலாம். இதன் கீழேயே எண்ணற்ற போர்மட்டுக்கள் உள்ளது.
எந்த தரத்தில் படம் வேண்டுமோ அதனையும் நாம் தேர்வு செய்து கொள்ளலாம். ஓடியோ கோப்புகளுக்கான ஸ்கிறீன்சேவரையும் நாம் எளிதில் தேர்வு செய்து கொள்ளலாம்.
இதிலிருந்து நாம் You tube தளத்திற்கு நேரடியாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம். மேலும் நமது வீடியோவினை flv மற்றும் swf கோப்புகளாக மாற்றம் செய்து கொள்ளலாம்.
மேலும் நாம் பார்க்கும் வீடியோவினை வலது இடமாகவும் - மேலும் கீழாகவும் மாற்றிக் கொள்ளலாம். வழக்கமாக புகைப்படத்தில் தான் நாம் இவ்வாறு மாற்ற முடியும். இப்போது வீடியோவிலும் நாம் இதில் எளிதில் மாற்றிக் கொள்ளலாம்.

Saturday 15 October 2011

பென்டிரைவ்களின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்கு


நாம் பயன்படுத்தும் USB  பென்டிரைவ்களின் தகவல்களை பாதுகாக்கவும், பென்டிரைவ்களின் ஆயுளை அதிகரிக்கவும் ஒரு மென்பொருள் உதவிபுரிகிறது.
நல்ல நிறுவனத்தின் பென்டிரைவ் தான் பயன்படுத்துகிறேன், ஆனால் சில நேரங்களில் இந்த பென்டிரைவில் சேமிக்கப்படும் தகவல்கள் எடுக்க முடியாதபடி பிழை செய்தி வருகிறது என்று சொல்லும் அனைவருக்கும் உதவும் வகையில் இந்த மென்பொருள் அமைந்துள்ளது.
இத்தளத்திற்கு சென்று Setup(install wizard) என்பதை சொடுக்கி மென்பொருளை இலவசமாக தரவிறக்கலாம். Portable ஆக வேண்டும் என்றால் Portable என்பதை சொடுக்கி மென்பொருளை தரவிறக்கவும். தரவிறக்கிய மென்பொருளை இயக்கியதும் நம் டாஸ்க் பாரில் USB Alert ஐகான் வரும்.
நம் கணணியில் பென்டிரைவ் செருகியதும் நமக்கு Alert Message வரும். அடுத்து பென்டிரைவில் தகவல்களை சேமித்து முடித்தபின் இந்த USB alert ஐகானை சொடுக்கி Eject என்ற பொத்தானை அழுத்தி பென்டிரைவை வெளியே எடுக்கலாம். இப்படி எடுப்பதால் பென்டிரைவின் ஆயுட்காலமும் தகவலும் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டிருக்கும்.

Excel Videos Training Web Address (by : Rifaideen)

கீழே காணப்படும் இணையத்தளத்தில் கிளிக் பண்ணவும் 

http://www.free-training-tutorial.com

மரணத்திற்கு பின்னும் உங்களது கடவுச்சொற்களை பாதுகாப்பதற்கு


நாம் பார்க்க போகும் தளம் ஒரு அருமையான ஓன்லைன் சேவையாகும். இந்த தளமானது மிக சிறப்பு வாய்ந்தது என்றே கூறலாம்.
நாம் இந்த தளத்தில் பதிந்து வைக்கும் கடவுச்சொல்லை யாருக்கும் கொடுக்காமல் ரகசியமாக யாருக்கும் தெரியாமல் நம் மரணம் வரை பாதுகாத்து வைத்து இருக்கும்.
நீங்கள் உங்கள் ஜிமெயிலின் கடவுச்சொல், பேஸ்புக்கின் கடவுச்சொல், டுவிட்டர் கடவுச்சொல் ஆகிய கடவுச்சொற்களை பதிந்து வைத்து விட்டீர்கள்கள் என்றால் உங்கள் மரணத்தின் பின் உங்கள் உறவினரோ அல்லது உங்கள் நண்பரின் மின்னஞ்சல் ஐடி கொடுத்து பதிந்து விட்டால் நீங்கள் இறந்த பின்னும் உங்கள் கணக்கு அவர்களால் திறக்கப்படும்.

கணணியில் உங்களது தகவல்களை பாதுகாப்பதற்கு


எந்த ஒரு மென்பொருளின் துணையும் இல்லாமலேயே உங்கள் ரகசிய கோப்புகள் அடங்கிய கோப்பறைகளை மறைக்கலாம்.
இதற்கான எளிய வழி ஒன்று உள்ளது.
முதல் வழி: Start==>RUN==>cmd
அதாவது Start பட்டனை அழுத்தி அதில் ரன் என்பதை தேர்ந்தெடுக்கவும். தோன்றும் ரன் விண்டோவில் cmd என்று தட்டச்சிடுங்கள்.
Command Prompt விண்டோ ஓப்பன் ஆகும். அதில் D: என தட்டச்சிடுங்கள். மறைக்க வேண்டிய கோப்பறை உள்ள டிரைவின்(D,E,F) பெயரை உள்ளிடவும்.
E டிரைவில் வைத்திருந்தால் E: என உள்ளிட்டு என்டர் தட்டுங்கள். D என்றால் D: என தட்டச்சிட்டு என்டர் பட்டன் தட்டுங்கள்.
இப்போது D:/> இவ்வாறு தோன்றும். அதனருகில் இடைவெளி இல்லாமல் attrib +h +s foldername என தட்டச்சு செய்யுங்கள்.
உதாரணத்திற்கு D:/>attrib +h +s foldername.
இங்கு folder name என்பதற்கு பதில் நீங்கள் மறைக்க விரும்பும் கோப்பறையின் பெயரைக் கொடுக்கவும். உதாரணத்திற்கு கோப்பறையின் பெயர் songs என இருந்தால் songs என டைப் செய்யுங்கள். D:/>attrib +h +s songs இவ்வாறு உள்ளிட்டு என்டர் தட்டுங்கள். இப்போது நீங்கள் மறைக்க விரும்பும் கோப்பறை காணாமல் போய் இருக்கும்.
மீண்டும் பெற விரும்பினால் முன்னது போலவே செய்து + குறிக்கு பதில் - குறி இட்டால் போதும்.
அதாவது D:/>attrib -h -s songs என்பதை டைப் செய்து என்டர் தட்டினால் மறைந்திருந்த கோப்பறை உடனே கண்ணுக்குத் தெரியும்.

Thursday 13 October 2011

புகைப்படங்களின் அளவைக் குறைப்பதற்கு


நாம் கமெராக்களில் எடுக்கும் புகைப்படங்களின் அளவானது பெரும்பாலான வேளைகளில் அதிகமாகவே காணப்படும்.
இதனால் அப்படங்களை நாம் பென்ட்ரைவில் எடுத்துச்செல்ல அதன் கொள்ளளவு போதுமானதாக இருக்காது. அதேநேரம் கணணியில் சேமித்து வைப்பதாயின் வன்தட்டிலும் அதிக இடத்தைப் பிடிக்கும்.
எனவே புகைப்படங்களின் கொள்ளளவை குறைத்து சேமித்துக் கொள்வதன் மூலமே அதிக இட ஒதுக்கீட்டைத் தவிர்த்துக் கொள்ளலாம். இதனை பல வழிகளில் செய்து கொள்ளலாம்.
1. Paint ஐப் பயன்படுத்துதல்: Paint ஐத் திறந்து பயன்படுத்திக் கொள்ள [Strat--> All Programs --> Accessories --> Paint ]
இதிலே File இனுள் Open என்பதன் மூலம் நீங்கள் அளவைக் குறைக்க எண்ணும் படத்தை திறந்துகொள்ளுங்கள்.
பின்னர் திறந்து கொண்ட படத்தினை சேமிக்க(Save) வேண்டியதுதான்.[Ctrl +S]
இப்பொழுது உங்கள் படத்தின் அளவு குறைக்கப்பட்டுவிடும். ஆனால் அதிகளவான படங்களை செய்வது மிகுந்த சிரமமாயிருக்கும். ஏனெனில் ஒவ்வொரு படமாகவே செய்துகொள்ள வேண்டும்.
2. MS OFFICE Picture Manager ஐப் பயன்படுத்தல்: இதனைத் திறந்து பயன்படுத்திக் கொள்ள [ Start --> All Programs --> Microsoft Office --> Macrosoft Office 2010 Tool--> Microsoft Office Picture Manager ]
இப்பொழுது Microsoft Office Picture Manager இனது வலப்பக்கத்தில் “Add a new picture shortcut” என்பதை கிளிக் செய்யவும்.
இப்பொழுது தோன்றும் விண்டோவில் உங்கள் புகைப்படங்கள் உள்ள Folder ஐத் தெரிவுசெய்து “Add” என்பதை கிளிக் செய்யவும்.
இப்பொழுது அனைத்து புகைப்படங்களும் தோன்றும்.
“Ctrl + A” ஐக் கொடுத்து அனைத்து புகைப்படங்களையும் தெரிவு செய்து “Edit Pictures” என்பதை கிளிக் செய்யவும்.
இதிலே “Resize” என்பதைக் கொடுக்கவும். பின்னர் “Document-Large (1024x768px)” என்பதை தெரிவுசெய்து OK பண்ணவும். பின் படத்தை சேமித்துக் கொள்ளவும்.
உங்கள் புகைப்படங்களின் கொள்ளளவு குறைக்கப்பட்டு சேமிக்கப்படும். சேமித்து முடிந்ததும் Microsoft Office Picture Manager ஐ மூடிக்கொள்ளவும். அவ்வளவுதான் உங்கள் புகைப்படங்களின் அளவு குறைக்கப்பட்டுவிடும்.

கணணியில் உள்ள வன்பொருள்களின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு


புதியதாக கணணி வாங்கியவர்கள் அதில் உள்ள வன்பொருள் சாதனங்களை கண்டு மிரட்சியடைவார்கள்.
சிபியு, மதர்போர்ட், ராம், கிராப்பிக்ஸ், சவுண்ட்கார்ட், ஓபரேடிங் சிஸ்டம், மவுஸ், கீ-போர்ட், நெட் ஒர்கிங், பிரிண்டர் என விதவிதமான பெயர்கள் கேட்டு ஆச்சர்யமடைவார்கள்.
ஒவ்வொன்றின் விவரங்களையும் எளிதில் அறிந்துகொள்ள இந்த சின்ன மென்பொருள் உதவுகின்றது. 916 கே.பி அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
இந்த மென்பொருளை நிறுவியதும் உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். அதில் 5 விதமான பகுதிகள் இருக்கும். இதில் உள்ள Start கிளிக் செய்தால் உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். இதில் சிபியு, மதர்போர்ட், பயாஸ் போன்ற விவரங்கள் கிடைக்கும்.
அடுத்த லெவல் செல்ல உங்களுக்கு ராம் மெமரி விவரங்களும் அடுத்த லெவலில் உங்கள் கணணியில் உள்ள வீடியோ காரட், சவுண்ட் காரட்மற்றும் ஸ்டோரெஜ் டிவைஸ் போன்ற விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
அடுத்த லெவலில் உங்களுக்கு உங்கள் கணணியில் நீங்கள் நிறுவியுள்ள ஓபரேடிங் சிஸ்டம், ஆப்டிகல் மீடியா, கீபோர்ட் மற்றும் மவுஸ் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

ஓன்லைனில் வீடியோக்களை எடிட் செய்வதற்கு


[ வியாழக்கிழமை, 13 ஒக்ரோபர் 2011, 09:27.03 மு.ப GMT ]
நம்மிடம் இருக்கும் வீடியோ கோப்புகளை எடிட் செய்ய வேண்டுமானால் வீடியோ எடிட்டிங் மென்பொருளை கண்டிப்பாக நிறுவியிருக்க வேண்டும்.
ஒரு சில வீடியோக்களை தான் எடிட் செய்ய வேண்டும் இதற்காக பெரிய தொகைக்கு வீடியோ எடிட்டிங் மென்பொருள் எல்லாம் வாங்க வேண்டாம், ஆன்லைன் மூலம் இத்தளத்திற்கு சென்று நம்மிடம் இருக்கும் வீடியோக்களை எளிதாக இலவசமாக எடிட் செய்யலாம்.
இத்தளத்திற்கு சென்று நமக்கென்று ஒரு இலவசப்பயனாளர் கணககு உருவாக்கி கொண்டு உள்நுழையலாம். வீடியோவை ஓடியோவாக மாற்ற வேண்டும் அல்லது ஏற்கனவே இருக்கும் வீடியோவிற்கு ஓடியோ மாற்ற வேண்டும், வீடியோவில் தேவையான பகுதியை வெட்ட சேர்க்க, வீடியோவீடியோவிற்கு வாட்டர்மார்க்கிங்(Water Marking) சேர்க்க, வெப் கமெரா மூலம் எடுக்கப்படும் வீடியோக்களை எடிட் செய்து விரும்பிய போர்மட்டு மாற்றலாம்.
இப்படி வீடியோ எடிட்டிங் மென்பொருள் செய்யும் அத்தனை சேவைகளையும் நாம் இத்தளத்தின் மூலம் செய்யலாம். 600 MB வரை உள்ள கோப்புகளை நாம் பயன்படுத்தலாம்.
எல்லா சேவைகளையும் இலவசமாகவே இத்தளம் கொடுக்கிறது, யூடியுப்-ம் வீடியோ கோப்புகளை எடிட் செய்யும் சேவையை கொடுக்கிறது. யூடியுப் காட்டிலும் இதில் சேவைகளை பயன்படுத்துவது எளிதாக இருக்கிறது.

Tuesday 11 October 2011

விரைவாக மென்பொருள்களை தேடுவதற்கு ஒரு தளம்!


கணினி என்று சொன்னால் நமக்கு முதலில் ஞாபகம் வருவது அதில் நிறுவப்படும் மென்பொருள்கள் தான். இணையத்தில் நாம் அதை தேடி கண்டுபிடித்து நிறுவிக்கொள்வோம்.
ஆனால் சில மென்பொருள்களை நாம் தேடுவது சற்று கடினமான விஷயம் அந்த நேரங்களில் நாம் தேடுபொறியின் உதவியை நாடுவோம். ஆனால் சில மென்பொருள்களை எப்படி தேடுவது என்று நமக்கு தெரியாது அந்த மாதிரியான தருணங்களில் நமக்கு ஒரு தளம் கைகொடுக்கும்.
இதுவும் ஒரு தேடுபொறி தான் ஆனால் இதில் முன்னிருப்பாக பல வகையான ஆன்லைன் சேவைகள் பட்டியலிடப் பட்டுள்ளது. ஒவ்வோற்றின் வகை மற்றும் இயல்பை பொறுத்து வகைபடுத்தப் பட்டு சேவைகள் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.
இதில் நீங்கள் எதாவது தேர்வு செய்தால் அதன் வகையை பொறுத்து உங்களுக்கு அதிகமாக பயன்படுத்தபடும் மென்பொருள் அல்லது வலைத்தளம் காண்பிக்கப்படும் அதை வைத்து நீங்கள் தேர்வு செய்யலாம்.
அதுமட்டுமல்ல நீங்கள் இதில் உங்கள் சாதனங்கள் மற்றும் இயங்குதளம் ஆகியவற்றை குறிப்பிட்டும் தேடலாம். நீங்கள் உங்கள் கைபேசிக்கான மென்பொருள் அல்லது உங்கள் ஐ-போனுக்கான மென்பொருள்களை மட்டும் தேடலாம்.
இந்த தளத்தில் ஒரு மென்பொருளை மற்ற மென்பொருளுடன் ஒப்பிட்டு காட்டுகின்றனர். இதில் நீங்கள் குறிச்சொற்கள் கொடுத்தும் தேடலாம் அதற்கும் இந்த நமக்கு உதவுகிறது.
தளத்திற்கு செல்லுவதற்கு : www.catchfree.com

கணணியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு


நீங்கள் அடிக்கடி சீடி பயன்படுத்துபவராக இருந்தால் இந்த சூழ்நிலையில் நீங்கள் என்றாவது சிக்கி இருப்பீர்கள்.
ஆம் உங்கள் சீடி கணணியின் சீடி டிரைவில் இருந்து வெளியே வராமல் உங்களை மோசமான நிலையில் சிக்க வைக்கும்.
எத்தனை முறை சீடி டிரைவின் எஜெக்ட் பட்டனை அழுத்தினாலும் அப்படியே டிரைவ் வெளியே வராமல் இருக்கும். இந்த சூழ்நிலையில் என்ன செய்தால் சீடி டிரைவ் திறக்கப்பட்டு சீடி வெளியே எடுக்கும்படி கிடைக்கும் என்பதனைப் பார்க்கலாம்.
முதலில் சீடி டிரைவ் திறக்கப்பட்டு சிடி இருக்கும் அந்த பிளாஸ்டிக் ட்ரே வெளியே நீண்டு வரவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். இந்த சூழ்நிலையை சமாளித்து சீடியை கீழ்க்காணும் வழிகளைக் கையாண்டு வெளியே எடுக்கலாம்.
வழி 1: மை கம்ப்யூட்டர் ஐகானில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் டெஸ்க்டொப்பில் இந்த ஐகான் இல்லை என்றால் நிச்சயம் ஸ்டார்ட் மெனுவில் இருக்கும். இதனைத் திறந்தவுடன் உங்கள் கணணியின் டிரைவ்கள் அனைத்தும் காட்டப்படும்.
இதில் Devices with removable stroage என்ற பிரிவில் சீடியின் படத்துடன் ஒரு ஐகான் இருக்கும். அல்லது சிக்கிக் கொண்ட சீடி ஏதேனும் ஒரு நிறுவனம் தந்துள்ள பேக்கேஜ் என்றால் நிறுவனம் தந்துள்ள ஐகானுடன் அந்த டிரைவ் காட்டப்படும்.
இதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Eject என்ற பிரிவில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் சீடி டிரைவில் உள்ள எஜெக்ட் பட்டன் தேய்ந்து போய் நீங்கள் அழுத்துகையில் அதன் செயல்பாடு மேற்கொள்ளப்படாத சூழ்நிலையில் இந்த வழி செயல்படும். இதற்கும் சீடி டிரைவ் திறக்கவில்லை என்றால் அடுத்த வழியைப் பார்க்கலாம்.
வழி 2: பேப்பர் கிளிப் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். (ஜெம் கிளிப் என்றும் சிலர் இதனை அழைக்கின்றனர்) அதன் ஒரு முனையை பிரித்து நீட்டுங்கள். சீடி டிரைவின் எஜெக்ட் பட்டன் அருகே சிறிய துளை இருப்பதைக் காணுங்கள். நிச்சயம் இதுவரை நீங்கள் இதனைக் கண்டு கொள்ளாமல் இருந்திருப்பீர்கள்.
இப்போது நிச்சயம் இதன் உதவி வேண்டியதிருக்கிறது. இந்த துளையில் மெதுவாக பிரித்த பேப்பர் கிளிப்பின் சிறிய கம்பியை உள்ளே செலுத்தவும். சிறிது உள்ளே செலுத்தியவுடன் அது ஒரு இடத்திற்கு மேல் செல்லாது.
இந்த இடத்தில் சிறிய அளவில், மிகச் சிறிய அளவில் அழுத்தம் கொடுக்கவும். எஜெக்ட் செய்யும் போது இயங்கும் இன்டர்னல் லாக் உள்ள இடத்தில் இந்த அழுத்தம் கிடைப்பதால் டிரைவின் கதவு திறக்கும்.
உடனே சீடியை எடுத்துவிட்டு மீண்டும் டிரைவின் கதவினை மூடவும். மறக்காமல் பேப்பர் கிளிப் பின்னை எடுத்துவிடவும். ஏனென்றால் பலர் சீடி வெளியே வந்த சந்தோஷத்தில் பேப்பர் கிளிப்பைச் செருகியபடியே வைத்துவிடுவார்கள்.

Monday 10 October 2011

ஒரே சமயத்தில் ஜந்துமொழிகளில் அர்த்தங்களை அறிந்து கொள்வதற்கு


ஒரே சமயத்தில் ஐந்துமொழிகளில் பொருட்களின் அர்த்தங்களை அறியலாம். இதற்கு உதவுவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது.
இதனை உங்கள் கணணியில் நிறுவியதும் ஒரு விண்டோ ஓபன் ஆகும். இதில் ஆங்கிலத்திற்கு எதிரில் உள்ள கட்டத்தில் நீங்கள் விரும்பும் ஆங்கில சொல்லினை தட்டச்சு செய்யவும்.
அதற்கு இணைய மற்ற மொழி சொற்கள் கீழே இடம்பெறுவதை காணுங்கள். சில சொற்கள் சரியான வார்ததைகளில் இல்லாதிருப்பின் அதற்கு இணையான ஆங்கில சொற்கள் உங்களுக்கு பாப்அப்மெனுவாக விரிவடையும்.
தேவையான ஆங்கில சொல்லை நாம் தேர்வு செய்துகொள்ளலாம். ஆங்கிலம் தவிர்த்து உங்களுக்கு இதர மொழிகள் தான் தெரியும் என்றால் இதில் உள்ள Source கிளிக் செய்து தேவையான மொழியை முதல் மொழியாக மாற்றிக்கொள்ளலாம்.

Sunday 9 October 2011

இணையத்தில் குழந்தைகளை பாதுகாப்பதற்கு


இன்றைய உலகில் கற்றுக் கொள்வதற்கும் அறிவுத் தேடலுக்கும் முதல் தேவை இணைய இணைப்பும், இணையத் தேடலும் தான்.
இதில் அபாயம் தரும் இன்னொரு பக்கமும் உள்ளது. முற்றிலும் கட்டற்ற இணையம் சிறுவர்களுக்கு அபாயகரமானது.
பாலியல் தளங்களும், வன்முறையை போதிக்கும் தளங்களும் இணையத்தில் நிறைந்து கிடக்கின்றன. இவற்றைப் பார்க்காதே என்று ஒரு காவலாளி போல சிறுவர்களை எந்நேரமும் கட்டுப்படுத்துவது இயலாது.
மேலும் வரையறைகளை அமைப்பது இன்றைய டிஜிட்டல் உலகில் பெற்றோர்களுக்கும் சற்று சிரமமான செயல்பாடாக உள்ளது. இயலாததும் கூட. பெற்றோர் தடை இடுகையில் அதனை மீற வேண்டும் என்ற இயல்பு சிறுவர்களுக்கு இயல்பாகவே தோன்றுவது இயற்கையே.
இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க K9 Web Protection என்னும் புரோகிராம் நமக்கு உதவுகிறது. இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் இந்த புரோகிராம், வீடுகளில் பயன்படுத்தும் கணணிகளில் இணையத்தில் பெற்றோர் கட்டுப்பாடு விதிக்க உதவுகிறது.
உங்கள் பெர்சனல் கணணிகளில் உள்ள இணையத்தை உங்கள் கட்டுப்பாட்டிலேயே நீங்கள் அருகில் இல்லாத சூழ்நிலையிலும் வைத்திருக்க உதவுகிறது. உங்கள் குழந்தைகளை இணையம் தரும் தீமைகளிலிருந்து பாதுகாக்க உதவிடும் இதன் சிறப்பம்சங்களாவன:
1. பாலியல், போதை மருந்து, தனிநபர் டேட்டிங், வன்முறையைப் போதிப்பது, வெறுப்பினை வளர்ப்பது, இனவேறு பாட்டினைத் தூண்டுவது என 70க்கும் மேற்பட்ட பல்வேறு பிரிவுகளாக இணைய தளங்களைப் பிரித்து வைத்து தடுக்கலாம்.
2. குழந்தைகளின் வயதின் அடிப்படையில் தடுப்பு நிலைகளை அமைக்கலாம்.
3. அனைத்து தேடல் சாதனங்களிலும் SafeSearch என்ற ஒன்றை இயக்கி வைக்கலாம்.
4. குறிப்பிட்ட நேரத்தில் இணையத் தொடர்பினை ஏற்படுத்த இயலாமல் செட் செய்திடலாம்.
5. எப்போதும் அனுமதி மற்றும் எப்போதும் தடை செய்திடு என இருவகைகளாக இணையதளங்களைப் பிரித்து அமைக்கலாம்.
6. பெற்றோர் அமைத்திடும் கடவுச்சொல், மற்ற கடவுச்சொற்களையும் மீறி இருக்கும் வகையில் அமைக்கலாம்.
7. கணணி தொழில்நுட்பம் சற்று அதிகம் தெரிந்து பயன்படுத்துபவர்கள் கூட மீட்டெடுக்க முடியாத தடைகளை உருவாக்கலாம்.
8. தடை செய்யப்பட்ட தளங்களைப் பார்த்தால் அது குறித்த அறிக்கை தரும்படி அமைத்திடலாம்.
8. விண்டோஸ் மட்டுமின்றி மேக் கணணிகளிலும் இயங்கும் வகையிலும் இது தரப்படுகிறது.
K9 Web Protection என்ற இந்த புரோகிராம், மைக்ரோசாப்ட் விண்டோஸ் 7, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் எக்ஸ்பி, மேக் ஓ.எஸ். எக்ஸ் 10.4.7 மற்றும் அதற்கும் மேற்பட்ட சிஸ்டங்களில் இயங்குகிறது.
இதனை தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்திட முயற்சிக்கையில் லைசன்ஸ் கீ தரும்படி இந்த புரோகிராம் கேட்கும். லைசன்ஸ் கீயினை இலவசமாக http://www1.k9webprotection.com/ என்ற முகவரியில் உள்ள இணையதளத்தில் பெற்றுக் கொண்டு பயன்படுத்தலாம்.
இதே இணைய பாதுகாப்பு ஐ-போன், ஐ-பாட் டச் மற்றும் ஐ-பேட் ஆகிய சாதனங்களில் பயன்படுத்தும் வகைகளிலும் கிடைக்கிறது. இவற்றிற்கான அப்ளிகேஷன் ஸ்டோர்களில் k9 என டைப் செய்து தேடிப் பார்த்து தரவிறக்கம் செய்து நிறுவச் செய்திடலாம்.

மிகப் பெரிய கோப்புகளை அனுப்புவதற்கு


ஒரு பெரிய கோப்புக்களை மின்னஞ்சலில் அனுப்ப மிகவும் தடுமாறுகிறோம். கட்டணம் செலுத்தாமல் yahoo, gmail, hotmail போன்றவை 10MB க்கு மேல் பொதுவாக அனுமதிப்பதில்லை.
கட்டணம் செலுத்தாமலேயே SendTool என்ற இணையதளத்தின் மூலம் மிகப் பெரிய கோப்புகளை அனுப்பலாம்.
SendTool மூலம் உங்கள் கோப்புகளையும்(File) படங்களையும் பதிவேற்றம் செய்து விட்டு கிடைக்கும் தரவிறக்க சுட்டிகளை(Download link) மட்டும் நண்பருக்கு மின்னஞ்சலில் அனுப்பினால் போதும். இங்கு கடவுச்சொல் அமைத்துக் கொள்ளும் வசதியும் உண்டு.

Sunday 2 October 2011

விண்டோஸ் 8ன் சிறப்பம்சங்கள்


மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 8ன் முதல் சோதனை பதிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இதனை பலர் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள்.
விண்டோஸ் 8 ஆனது பல்வேறு சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
1. பயனர் இடைமுகம்(User Interface): இந்த இயங்குதளத்தில் பிரபலமான WP7 Metro பயனர் இடைமுடம் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் இதில் மற்றொரு முக்கிய விஷயம் இதில் ஸ்டார்ட் மெனுவிற்கு பதிலாக ஸ்டார்ட் திரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த திரை முழுவதும் குறுக்கு விசை ஐகான்களால் நிறைந்திருக்கும், நீங்கள் அதில் உள்ள ஐகான்களை நீக்கவோ சேர்க்கவோ மேலும் அவற்றின் அளவை மாற்றவோ முடியும்.
மேலும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள பயனர் இடைமுகத்தினால் இது மொபைல் சாதனங்களிலும் பயன்படுத்த எளிமையாய் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது, மேலும் இந்த பயனர் இடைமுகம் தொடுதிரை சாதனங்களில் இயங்குவதற்கு மிகவும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2. தேடல் வசதி(Search): மேலும் இந்த இயங்குதளத்தில் கோப்புகளை தேடும் வசதி மிகவும் விரைவாக இயங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது, விண்டோஸின் முந்தைய பதிப்புகளை போல அல்லாமல் இந்த தேடுதல் முறையில் நீங்கள் ஒரு கோப்பின் பெயர் மட்டுமல்லாமல் அதன் உள்ளே உள்ள ஏதேனும் ஒரு விஷயத்தை கொடுத்தும் தேடலை மேற்கொள்ளலாம். அதாவது ஒரு Ms-Word கோப்பின் உள்ளே சேமிக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு வார்த்தையை தேடினால் கூட இந்த கோப்பு காண்பிக்கப்படும்.
3. குறைவான துவக்க நேரம்(Less Start up time): இதில் கூறப்பட்டுள்ள மற்றொரு வசதியானது அதன் பூட்டிங் நேரம் குறைவானது என்பதுதான் மைக்ரோசாப்ட் 5 விநாடிகளில் ஸ்டார்ட் ஆகி பயன்பாட்டுக்கு தயாராகிவிடும் என்று அறிவித்திருந்தது, ஆனால் அதைவிட அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.
விண்டோஸின் முந்தைய பதிப்புகளை விட இந்த துவக்க நேரம் குறைவானதுதான், மேலும் விண்டோஸ் 7ல் இயங்கிய அனைத்து மென்பொருட்களும் அதைவிட வேகமாக விண்டோஸ் 8ல் இயங்குவதாக கூறுகின்றனர்.
4. மேம்படுத்தப்பட்ட எக்ஸ்ப்ளோரர்(windows explorer): இதில் உள்ள மிக மிக முக்கியமான விஷயம் இதில் விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் மிகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007ல் பயன்படுத்தப்பட்டுள்ளதை போன்ற ரிப்பன் மெனு பட்டை பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ரிப்பன் மெனுவானது நீங்கள் செலக்ட் செய்துள்ள கோப்பின் வகையை பொறுத்து தானாக மாறிக்கொள்கிறது, நீங்கள் mp3 கோப்பை செலக்ட் செய்தால் ப்ளே வித் ஆப்ஷனும் மற்ற ஆப்ஷன்களும், நீங்கள் ZIP கோப்பை செலக்ட் செய்தால் ஆப்ஷனும் தானாகவே மாறிக்கொள்கிறது.
5. இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 10(IE 10): இந்த இயங்குதளத்தில் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 10 பதிப்பு இணைக்கப்பட்டுள்ளது, இதில் CSS3 மற்றும் HTML5னை இயக்கும் திறன் உள்ளது, எனவே ஃப்ளாஷ் இல்லாமலேயே வீடியோக்களை பார்த்தல் மற்றும் பல வேலைகளை செய்யலாம்.
6. மார்க்கெட் ஸ்டோர்(Market): விண்டோஸ் 8 பதிப்பின் வெளியீட்டுடன் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் மென்பொருட்களுக்கு உள்ளதைப் போன்ற மார்க்கெட் ஸ்டோர் ஒன்றினை அறிமுகப்படுத்தும் திட்டமும் மைக்ரோசாப்டிடம் உள்ளதாம், இது இன்னும் முழுமையாக முடிவடையாததால் இப்போது இந்த சோதனை பதிப்பில் இணைக்கப்படவில்லை.
7. லைவ் சின்க்ரோனைஷேசன்(Live sync): இதில் உள்ள மேலும் ஒரு முக்கிய வசதி நமது தகவல்களை நேரடியாக சின்க்ரனைஸ்(Synchronise) செய்ய இயலும், உங்களின் விண்டோஸ் லைவ் ஐடியை பயன்படுத்தி நீங்கள் உள்நுழைந்தால் உங்கள் கோப்புகள், அமைவுகள் அனைத்தும் சின்க் செய்யப்பட்டு விடும்.
பின்னர் நீங்கள் எந்த கணணியிலும் உங்கள் ஐடியினை பயன்படுத்தி அந்த கோப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம், இதன் மூலம் மைக்ரோசாப்டானது கூகுள் க்ரோம் இயங்குதளத்தின் போட்டியை சமாளிக்க ஒரு அடி எடுத்து வைத்துவிட்டது.

டேப்ளட் கணணிகள் தரும் புத்தம் புதிய வசதிகள்



பெர்சனல் கணணியின் இடத்தை விரைவில் பிடித்துவிடும் என அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு சாதனம் டேப்ளட் பிசி. இன்று இது ஒரு புதிய சாதனம் அல்ல.
கைகளில் எடுத்துச் சென்று எங்கும் பயன்படுத்தக் கூடிய மிகச் சிறந்த சாதனமாக டேப்ளட் பிசி உருவாகியுள்ளது. நமக்குப் பிடித்த செய்தி சேனல்களைப் பார்க்கலாம், பிரியமான திரைப்படங்களைப் பார்க்கலாம், மின்னஞ்சல்களைப் பார்க்கலாம், அனுப்பலாம், கேம்ஸ் விளையாடலாம், இசையை ரசிக்கலாம்.
இப்படி இன்றைய டிஜிட்டல் வாழ்க்கையோடு ஒட்டிய அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்ளலாம். முதலில் வெளியான டேப்ளட் கணணிகள் பயன்படுத்த மிகவும் கடினமாகவும், அதிக எடை கொண்டதாகவும் இருந்தன.
ஒரு சில மணி நேரங்களிலேயே அதன் பற்றரிகள் தங்கள் மின் சக்தியை இழந்தன. அதனால் லேப்டாப் கணணியே போதும் என்று மக்கள் அவ்வளவாக இதன் மீது அக்கறை காட்டாமல் இருந்தனர்.
தற்போது இதன் அனைத்து குறைகளும் களையப்பட்டு சிறப்பான பயன்பாட்டினைத் தரும் பல அம்சங்களை இவை கொண்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்துவதில் உள்ள சில அனுகூலங்களை இங்கு காணலாம்.
1. டேப்ளட் பிசி என்பது முழுமையான ஒரு பெர்சனல் கணணி என்று சொல்லலாம். இன்றைக்கு கணணி பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள் அதனை இன்டர்நெட் பிரவுஸ் செய்திடவும், வீடியோ மற்றும் ஓடியோ ரசிக்க மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இந்த செயல்களை பெர்சனல் கணணிகளில் மேற்கொள்கையில் கட்டாயமாக அதன் முன் அமர்ந்து தான் செயல்பட வேண்டியுள்ளது. ஆனால் ஒரு டேப்ளட் கணணியில் நமக்கு வசதியான இடத்தில் நின்று கொண்டோ, படுத்துக் கொண்டோ, அமர்ந்தோ, சுகவாசியாக டேப்ளட் பிசியைப் பயன்படுத்தலாம்.
2. டேப்ளட் பிசியைக் கையாள்வது மிக இயற்கையான ஒரு செயலாக உள்ளது. குறிப்பாக அதன் தொடுதிரையைத் தொட்டுச் செயல்படுவது, மவுஸினைக் கையாள்வதனைக் காட்டிலும் எளிதாகவும், இயற்கையாகவும் உள்ளது. மேலும் டேப்ளட் பிசியைப் பயன்படுத்த, சிறப்பாக எந்த பயிற்சியும் தேவையில்லை. ஒரு குழந்தை கூட எளிதாக இதனைப் பயன்படுத்த முடியும்.
3. டேப்ளட் பிசி மிகவும் வேகமாகச் செயல்படுகிறது. இன்டர்நெட் பிரவுஸ் செய்வதில் இதன் வேகம் பெர்சனல் கணணியையும் மிஞ்சி விடுகிறது.
4. நண்பர்களுடன் வீடியோ சேட் செயல்களில் ஈடுபடுவது, பெர்சனல் கணணிகளில் முடியும் என்றாலும் ஒரு டேப்ளட் பிசியில் மேற்கொள்வது இன்னும் இயற்கையாக ஒரு நெருக்கத்தினை நண்பர்களுடன் ஏற்படுத்துகிறது.
5. ஒரு டேப்ளட் பிசியில் ஆயிரக்கணக்கான மின் நூல் பக்கங்களை சேவ் செய்து நாம் விருப்பப்படும் நேரத்தில் படிக்க இயலும். தனியாக இதற்கென ஒரு இ–ரீடர் என்னும் சாதனத்தினை வாங்க வேண்டியதில்லை.
6. டேப்ளட் பிசியை எந்த ஒரு சாதனமாகவும் இயக்க பல அப்ளிகேஷன்கள் இலவசமாகவே கிடைக்கின்றன. இதற்கென அப்ளிகேஷன் ஸ்டோர்கள் இணையத்தில் நிறைய இயங்குகின்றன. கமெரா, நூல்கள், மியூசிக் பிளேயர், பருவ இதழ்கள் எனப் பல வசதிகள் கிடைக்கின்றன.
7. பெர்சனல் கணணி பயன்படுத்துவதில் மொனிட்டர் மூலம் நம் கண்களுக்கு ஏற்படும் இடையூறுகள், ஒரு டேப்ளட் பிசியைப் பயன்படுத்துகையில் அறவே நீக்கப்படுகின்றன. இதனை எந்தக் கோணத்திலும் வைத்துப் பயன்படுத்தலாம். நடந்து கொண்டும் படுத்துக் கொண்டும் கூட இதனை எளிதாகப் பயன்படுத்த முடியும்.
8. டேப்ளட் பிசிக்கள் வந்த புதிதில், ஒரு பெர்சனல் கணணி விலைக்கே விற்பனை செய்யப்பட்டன. இப்போது பல நிறுவனங்கள் இந்த சந்தையில் இயங்குவதால் இவற்றின் விலை மிக வேகமாகக் குறைந்து வருகிறது. ஒரு பெர்சனல் மற்றும் லேப்டாப் கணணியைக் காட்டிலும் குறைவான விலையில் இதனை வாங்கிப் பயன்படுத்த முடியும்.

Flash Drive-ஐ கழற்ற மறந்து ஷெட்டவுண் கொடுப்பவர்களுக்கு


Flash Drive-ஐ கழற்ற மறந்து அவசரத்தில் ஷெட்டவுண் கொடுப்பவர்கள் பல சமயங்களில் கணணியிலேயே Flash Drive-ஐ கழற்றாமல் விட்டு விடுவார்கள்.
இதனால் அவர்களது Flash Drive-ஐ யாரும் திருடவோ அல்லது அதில் உள்ள கோப்புகளை திருடவோ வாய்ப்புக்கள் அதிகம்.
எனவே இவ்வாறான மறதியுள்ளவர்களுக்கு உதவுவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது. இதனை நிறுவினால் Flash Drive-ஐ கழற்ற மறந்து அவசரத்தில் ஷெட்டவுண் கொடுக்கும் போது எச்சரிக்கும்.
எனவே உடனே கழற்றிவிட்டு தொடர்ந்து ஷெட்டவுண் கட்டளையை வழங்கலாம். இம்மென்பொருள் நிறுவ Windows XP/Vista/7(32-Bit/64-Bit) இவற்றுள் ஏதாவது ஒரு இயங்கு தளமும் Microsoft .NET Framework 2.0. உம் அவசியம்.92.8KB அளவுடையது.

உங்களது படங்களை எழுத்துகளாக மாற்றுவதற்கு


குறிப்பிட்ட பக்கத்தை நீங்கள் இணையத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டுமெனில் அதில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தையும் type செய்தாக வேண்டும் அல்லது அந்த நூலை ஓர் படமாக ஸ்கேன் செய்து வெளியிடலாம்.
ஆனால் OCR என்னும் தொழில்நுட்பம் மூலம் நீங்கள் எந்த ஒரு கோப்பை / படத்தை எளிதாக type செய்யாமலே எழுத்துருக்களாக மாற்றி அமைக்க முடியும்(இதனை image to text converter என்றும் கூறுவர்).
OCR மென்பொருள் கீழ்க்கண்ட வசதிகளை உங்களுக்கு வழங்குகிறது
1. நீங்கள் சேமித்து வைத்திருக்கும் பல்வேறு விதமான கோப்புகளை(தாள், PDF கோப்புகள், டிஜிட்டல் புகைப்படங்கள்) எளிதாக கையாள மற்றும் திருத்த முடியும், மேலும் திருத்தப்பட ஆவணங்களை எளிதாக மாற்றவும் அனுமதிக்கிறது.
2. மீண்டும் மீண்டும் தட்டச்சு செய்ய பல மணி நேரம் ஆகும் ஆவணங்களை ஒரு நொடியில் உருமாற்றி விடும் வல்லமை படைத்தது.
3. எந்த நிலையில் இருக்கும் ஆவணங்களையும் 23% முதல் 99% வரை தரத்தை உயர்த்தும் வாதிகள் உள்ளது.
4. 200% தொடக்க வேகம்.
5. ஐபோன், 2 மெகாபிக்சல் தொலைபேசி கேமராக்கள் போன்றவற்றுடனும் எளிதாக வேலை செய்யக் கூடியது மற்றும் அமேசான் கின்டெல் ஆதரவு.
6. OCR Scanner பெரும் நன்மைகளை தன்னகத்தே வைத்திருக்கும் ஒரு மென்பொருள். நீங்கள் எந்த விதமான ஸ்கேநேர் மூலமும் இந்த மென்பொருளை எளிதாக உபயோகிக்கலாம்.

Saturday 1 October 2011

கணணி துறையினருக்கான கூகுளின் புதிய வசதி


இன்றைய கால கட்டத்தில் இணையம் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த இணையம் இருப்பதால் எந்த ஒரு வேலையையும் எளிதாக செய்ய முடிகிறது.
கணிப்பொறி துறையில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் Programmers. இவர்கள் தான் மென்பொருட்கள், இணையதள வடிவமைப்பு இப்படி பல செயல்களுக்கு கோடிங் எழுதி உருவாக்குபவர்கள்.
ஆனால் இந்த கால கட்டத்தில் யாரும் முழு கோடிங்கையும் சொந்தமாக எழுதுவது இல்லை. அப்படி எழுதினாலும் வெகு நேரம் எடுக்கும் போன்ற சில காரணங்களால் இணையத்தில் இருந்து தான் கோடிங்கை எடுக்கின்றனர். அதில் அவர்களுக்கு தேவையான சில மாற்றங்கள் செய்து கோடிங்கை வடிவமைத்து கொள்கின்றனர்.
இது போன்ற Programmers மற்றும் மென்பொருள் துறை மாணவர்களுக்கு என்று கூகுள் வழங்கும் வசதி தான் இந்த Google Code Search . இந்த தளத்திற்கு சென்று உங்களுக்கு தேவையான கோடிங்கை தேடி கொள்ளலாம்.
இந்த தளத்திற்கு சென்று தேவையான விவரங்களை கொடுத்து சரியான கோடிங்கை சுலபமாக தேடி பயன்படுத்தி கொள்ளுங்கள் மற்றும் உங்களுக்கு சிறிய வகை கோடிங் தேவைப்பட்டால் searchco இந்த தளத்தில் சென்று தேவையான குறிச்சொல்லை கொடுத்தால் அடுத்த வினாடி அதற்க்கான கோடிங் உங்களுக்கு வந்து விடும்.
உதாரணமாக javaScript Key code என கொடுத்தால் அடுத்த நொடி அதற்கான பட்டியல் உங்கள் கண்முன்னே இருக்கும். இந்த இரண்டு தளங்களின் உதவியுடன் நீங்கள் உங்களுக்கு தேவையான கோடிங்கை சுலபமாக கண்டறிந்து கொள்ளலாம்.

Click and Type: மைக்ரோசாப்ட் வேர்டின் புதிய வசதி


வேர்ட் தொகுப்பில் பொதுவாக இடது ஓரம் டைப் செய்யத் தொடங்குவோம். பின்னர் நம் விருப்பத்திற்கேற்ற வகையில் இதனைச் சீர் செய்திடுவோம்.
இடது ஓரம், வலது ஓரம், மத்தியில் என எப்படி வேண்டுமானாலும் வாக்கியங்கள் கொண்ட தொகுப்பினை அமைத்திடுவோம்.
ஆனால் டாகுமெண்ட் ஒன்றில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தி அந்த இடத்திலிருந்து டைப் செய்யும் வசதியும் உண்டு என்பதனைப் பலர் அறியாமல் இருப்பீர்கள்.
கிளிக் அன்ட் டைப்(Click and Type) என்ற இந்த வசதி வேர்ட் 2000 முதல் தரப்பட்டுள்ளது. இந்த வசதி பிரிண்ட் லே அவுட் மற்றும் வெப் லே அவுட்(Print Layout view or Web Layout) ஆகிய வியூவில் டாகுமெண்ட்டைப் பயன்படுத்து கையில் கிடைக்கும்.
இந்த வசதியின்படி மவுஸ் கர்சரை நீங்கள் விரும்பும் இடத்திற்குக் கொண்டு சென்று இருமுறை கிளிக் செய்தால் கர்சர் அங்கு அமைக்கப்பட்டு டைப் செய்யப்படும் சொற்கள், வரிகள் அங்கிருந்து தொடங்கப்படும். இதன் மூலம் போர்மட்டிங் பணியினைச் சற்று வேகமாக மேற்கொள்ளலாம்.
இந்த வசதி நீங்கள் பயன்படுத்தும் வேர்ட் தொகுப்பில் இயக்கத்தில் உள்ளதா என்பதை எப்படி அறிந்து கொள்வது? டாகுமெண்ட்டில் மவுஸ் கர்சர் ஒரு(I) டி பீம் போலக் காட்சி அளிக்கும். அதாவது ஆங்கில “I” எழுத்தின் மேல் கீழாக சிறிய கோடு இருப்பது போலத் தோன்றும்.
இதன் அருகே வலது பக்கத்தில் சில படுக்கை வசத்திலான சிறிய கோடுகள் இருந்தால் இந்த வசதி உங்கள் வேர்டில் இயக்கத்தில் இருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம். இந்த கோடுகள் நீங்கள் எந்த இடத்திலும் வரிகளை இணைக்கலாம் என்று காட்டுகின்றன.
இவ்வாறு வரிகளை நினைத்த இடத்தில் அமைக்கையில் அந்த வரிகள் எந்த வகையில் அமையும் என்பதை இந்த i பீம் அருகே உள்ள சிறிய கோடுகள் காட்டுகின்றன. இதில் நான்கு வகைகள் உள்ளன.
அந்த படுக்கை வரிகள், i பீம் அருகே மேல் வலது புறமாக அமைந்திருந்தால் மவுஸை இருமுறை கிளிக் செய்து அமைக்கும் வரிகள் கொண்ட பாரா, இடது வாகாக அலைன் செய்து அமைக்கப்படும்.
அந்த வரிகள் மேல் வலது புறமாக அமைந்து முதல் படுக்கை வரியின் இடது புறம் ஒரு சிறிய அம்புக் குறி இருந்தால் நாம் அமைக்கும் வரிகள் கொண்ட பாராவின் முதல் வரி, அதற்கான பாரா இடைவெளியுடன் அமைக்கப்படும்.
இந்த வரிகள் i பீம் நேர் கீழாக இருந்தால் நாம் இருமுறை மவுஸ் கிளிக் செய்து அமைக்கும் வரிகள் கொண்ட பாரா நடுவாக அமையும்.
இதே வரிகள் i பீம் இடது மேல் புறமாக அமைக்கப்பட்டால்நாம் இருமுறை மவுஸ் கிளிக் செய்து அமைக்கும் வரிகள் கொண்ட பாரா, வலது பக்கம் அலைன் செய்யப்பட்டு அமையும்.
இங்கு ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த வசதி அமைக்கப்படும் டாகுமெண்ட்டிற்கான வியூ, பிரிண்ட் லே அவுட் அல்லது வெப் லே அவுட் என்ற முறையில் இருந்தாலே இந்த வசதி கிடைக்கும்.
எனக்கு இந்த வசதி எல்லாம் வேண்டாம் என்று நினைப்பவரா நீங்கள். இதனை நீக்கும் வழியும் இங்கு உண்டு. நீங்கள் வேர்ட் 2000, 2002 அல்லது 2003 பயன்படுத்துபவராக இருந்தால் கீழே குறிப்பிட்டுள்ளபடி செயல்படவும்.
1. Tools மெனுவில் இருந்து Options தேர்ந்தெடுக்கவும். வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸினைக் காட்டும்.
2. இந்த டயலாக் பாக்ஸில் எடிட் டேபினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இங்கு Enable Click and Type என்ற செக் பாக்ஸ் கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்து விட்டால் இந்த வசதி இயக்கப்பட மாட்டாது.
4. பின்னர் OK கிளிக் செய்து வெளியேறவும்.
நீங்கள் வேர்ட் 2007 பயன்படுத்துபவராக இருந்தால்,
1. Office பட்டனில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து Word Options என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது வேர்ட் Word Options டயலாக் பாக்ஸைக் காட்டும்.
2. டயலாக் பாக்ஸின் இடப்பக்கத்தில், Advanced என்பதில் கிளிக் செய்திடவும்.
3. டயலாக் பாக்ஸின் எடிட்டிங் பகுதியில் உள்ள Enable Click and Type என்ற செக் பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
4. பின்னர் OK கிளிக் செய்து வெளியேறவும்.

Windows Help viewer keyboard shortcuts




Press this keyTo do this
Alt+C
Display the Table of Contents
Alt+N
Display the Connection Settings menu
F10
Display the Options menu
Alt+Left Arrow
Move back to the previously viewed topic
Alt+Right Arrow
Move forward to the next (previously viewed) topic
Alt+A
Display the customer support page
Alt+Home
Display the Help and Support home page
Home
Move to the beginning of a topic
End
Move to the end of a topic
Ctrl+F
Search the current topic
Ctrl+P
Print a topic
F3
Move the cursor to the search box

Windows Journal keyboard shortcuts



Press this keyTo do this
Ctrl+N
Start a new note
Ctrl+O
Open a recently used note
Ctrl+S
Save changes to a note
Ctrl+Shift+V
Move a note to a specific folder
Ctrl+P
Print a note
Alt+F4
Close a note and its Journal window
Ctrl+Z
Undo a change
Ctrl+Y
Redo a change
Ctrl+A
Select all items on a page
Ctrl+X
Cut a selection
Ctrl+C
Copy a selection to the Clipboard
Ctrl+V
Paste a selection from the Clipboard
Esc
Cancel a selection
Delete
Delete a selection
Ctrl+F
Start a basic find
Ctrl+G
Go to a page
F5
Refresh find results
F5
Refresh the note list
F6
Toggle between a note list and a note
Ctrl+Shift+C
Display a shortcut menu for column headings in a note list
F11
View a note in full-screen mode
F1
Open Journal Help