Saturday 3 December 2011

FORMAT செய்வதற்க்கு Driver CD தடையாய் இருக்கின்றதா?








            நாம் பல காரணங்களுக்காக எமது வன்தட்டை Format செய்ய வேண்டியுள்ளது. உதாரணமாக கணினியின் வேகம் குறைந்து விட்டது, System file கோளாறு, வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதல், வன்தட்டின் பார்ட்டிஷன் அளவை மாற்ற போன்ற பல காரணங்கள்.

ஆனால் அப்படி முடிவு செய்துவிட்ட பின்னர், அந்த முடிவிலிருந்து பின் வாங்குவதற்கு முக்கியமாக ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்கக்கூடும். அது Devise driver CD கையில் இல்லையே? என்பதாக இருக்கலாம். காரணம் மிக சரியானதே. ஏனெனில் புதியதாக நீங்கள் இயங்குதளத்தை(OS) நிறுவிய பிறகு, உங்கள் Graphic card, Sound card, Web cam, Printer, Scanner போன்ற சாதனங்கள் முறையாக வேலை செய்வதற்கு, அந்தந்த கருவிகளுக்கான பிரத்தியேகமான Devise driver உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் அந்த Devise driver CD உங்களிடம் இல்லாத பொழுது, உங்கள் கணினியில் புதியதாக இயங்குதளத்தை நிறுவ அல்லது ஒரே Configuration கொண்ட உங்கள் நண்பரின் கணினிக்கு உங்கள் கணினியில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள Devise driverCopy எடுத்து கொடுக்க, மிகவும் பயனுள்ள Driver backup மற்றும் Restore மென்பொருள் Double driver ஐப் பயன் படுத்தலாம்.

    இதிலுள்ள Scan button ஐ சொடுக்கியவுடன், உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து டிவைஸ் ட்ரைவர்களும் பட்டியலிடப்படும்.

இந்த பட்டியலிலிருந்து நமக்கு தேவையான டிவைஸ் ட்ரைவர்களையோ, அல்லது எல்லாவற்றையுமோ தேர்வு செய்து Backup button ஐ அழுத்தி, பிறகு திறக்கும் Backup Drivers வசனப் பெட்டியில், இதனை எங்கு சேமிக்க வேண்டும் (பென் ட்ரைவிலும்) என்பதை கொடுத்து விட்டால் போதும்.

நீங்கள் தேர்வு செய்திருந்த அனைத்து Driverகளும் அதற்கான குறிப்பிட்ட Folderகளில் Backup ஆகியிருப்பது தனிச் சிறப்பு.

இயங்குதளத்தை மறுபடியும் நிறுவிய பிறகு இந்த Backup Folderக்குச் சென்று இங்குள்ள Double driver அப்ளிகேஷனை ரன் செய்து ட்ரைவர்களை மறுபடியும் எளிதாக Restore செய்து கொள்ளலாம். 

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை தெரியப்படுத்துங்கள்