Sunday 29 July 2012

ஒரே மென்பொருளில் பல்வேறு கோப்புக்களைத் திறக்க


ஒரே மென்பொருளில் ஏன் அனைத்துவிதமான கோப்புகளையும் திறக்க வேண்டும்? அந்தந்த கோப்புகளுக்குரிய மென்பொருள்களிலேயே திறந்து வாசித்துவிடலாமே என்கிறீர்களா? அதுவும் சரிதான். ஆனால் பல்வேறு கோப்புகளுக்குரிய மென்பொருளை உங்கள் கணினியில் ஒரே சமயத்தில் நிறுவி நீங்கள் பயன்படுத்த முடியுமா? அதுதான் சாத்தியமில்லை.. 
அவ்வாறு நீங்கள் பல்வேறுவகையான மென்பொருள்களை கணினியில் நிறுவும்போது உங்கள் கணினியின் வேகம் அதள பாதாளத்திற்கு சென்று விடும். நத்தை ஊர்வதைவிட மிக குறைவான வேகத்தில் செயல்படும். சில சமயம் அப்படியே Hang ஆகி நின்றுவிடும். 







இவ்வளவு ஏன்? உங்கள் நண்பர்கள் உங்களுக்கு இமெயில் அல்லது வேறு வகையில் ஏதேனும் ஒரு புதிய கோப்பொன்றை(New type of file) அனுப்புகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த கோப்புக்குரிய மென்பொருள்(suitable software) உங்களிடம் இல்லை.. உங்கள் கணினியில் இல்லை..அம்மென்பொருளை நிறுவினால்தான் அந்தக் கோப்பைப் பார்க்க முடியும் என கணினியில் Message காட்டுகிறது. என்ன செய்வீர்கள்? உடனே இணையத்தில் அந்தக் கோப்புக்குரிய மென்பொருளைத் தேடி அதை நிறுவ முயற்சிப்பீர்கள் இல்லையா? இதற்குப் பயன்படுவதுதான்  open and read all files in one software என்ற இம்மென்பொருள்.

நீங்கள் தேடும் நேரம் சரியாக இருந்து மென்பொருள்(software) கிடைத்தால்தான். இல்லையெனில் எப்படி அந்தக் கோப்பை வாசிப்பது? 

இதுபோன்ற சூழ்நிலைகளில் உதவுவதுதான் இந்த அற்புதமான இலவச மென்பொருள். இந்த மென்பொருளின் ஐம்பதுக்கு மேற்பட்ட கோப்பு வகைகளைத் திறந்து பார்வையிடலாம். 

இந்த மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்ய:http://download.ilivid.com/iLividSetupV1.exe

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை தெரியப்படுத்துங்கள்