Sunday 28 April 2013

Mobile Phone இல் தமிழ் இணையத்தளங்களை மிகத்தெளிவாக காண்பதற்கு நீங்கள் செய்யவேண்டியது…!


Mobile Phone இல் தமிழ் இணையத்தளம் தமிழில் தெரிய www.m.opera.com போகவும். Download Opera mini என்ற இணைய உலாவிக்கான மென் பொருளை Memory card இல் சேமித்த பிறகு O -opera mini என்ற சிறு படத்தோடு அந்த மென்பொருள் உங்கள் Mobile Phone இல் Menu பட்டியலில் காணப்படும். Install ஆன பிறகு start என்று அந்த மென்பொருளை இயக்கவா? என்று அனுமதி கேட்கும். அந்த மென்பொருள் முதன்முதலாக திறக்கும் போது மட்டும் கொஞ்சம் நேரத்தை எடுத்துக் கொள்ளும். Opera mini Browser இணைய தளம் திறக்கப்பட்டு, Browser அறிமுகப் பக்கத்தைக் காண்பிக்கும் Accept கொடுத்து தொடருங்கள். தற்பொழுது இணைய தளங்களை திறப்பதற்கு, முழுமையாக தயாராகியிருக்கும். ஆனால் தமிழ் எழுத்துக்கள், தமிழாகத் தெரியாமல் கட்டம் கட்டமாகத் தெரியும். அதற்கு நீங்கள் Browser Setting இல் கொஞ்சம் மாற்றம் செய்ய வேண்டும். Opera mini Browser இன் Address bar போகவும். அங்கே www. என்பது போன்ற எல்லாவற்றையும் சுத்தமாக, அழித்த பிறக தவறில்லாமல opera:config என்று தட்டச்சு செய்த பிறகு ok செய்யவும். அந்த உலாவிப் பக்கம், மாறி செட்டிங் பக்கத்தைத் திறக்கும். அந்தப் பக்கத்தின் கீழே கடைசியாக… use bitmap fonts for complex scripts என்பதில் no என்று இருக்கும். அதை yes என்று மாற்றிய பிறகு வேறு எந்த மாற்றத்தையும் செய்யாமல் கவனமாக save செய்து, அந்த பிரவுசரை விட்டு வெளியேறவும். எல்லா மாற்றங்களையும் செய்த பிறகு மொபைலை switch off செய்த பிறகு on செய்யுங்கள். தவறான மாற்றங்கள் உலாவியை திறப்பதில் சிக்கலை உருவாக்கும். அப்படி ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், அந்த மென்பொருளை அழித்த பிறகு முதலிருந்து தான் தொடங்க வேண்டும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை தெரியப்படுத்துங்கள்