Monday 29 April 2013

அன்ட்ரோய்டு கைபேசிகள் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை


android_os_002அன்ட்ரோய்டு இயங்குதளத்தில் செயல்படும் கைபேசிகள் மற்றும் டேப்லெட் வகை கணனிகளை பெருமளவில் பல நிறுவனங்கள் போட்டி போட்டி தயாரிக்கின்றன.
பெரும்பாலான இளைய சமுதாயம் அன்ட்ரோய்டு என்ற பெயரிலேயே லயித்திருப்பதும் நிதர்சனமே.
நீங்கள் புதிய அன்ட்ரோய்டு கைபேசியோ அல்லது டேப்லெட் கணனியையோ வாங்கும்பொழுது எதைப்பொருத்து வாங்கவேண்டும் என்பதை விளக்குவதற்காக சில குறிப்புகள். நீங்கள் புதிய சாதனங்கள் வாங்கும்பொழுது இத்தகவல் உங்களுக்கு கண்டிப்பாக உதவலாம்.
புதிய அன்ட்ரோய்டு போன் அல்லது டேப்லெட் வாங்கும்பொழுது முக்கியமாக பார்க்கவேண்டியது அதன் RAM நினைவகத்தின் அளவைத்தான்.
இதைப்பொருத்தும் உங்களது செல்போனின் செயல்திறன் இருக்கும். குறைந்தது 512 MB RAM அளவாவது இருக்கவேண்டும். அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். 1 ஜிபி மற்றும் 2 ஜிபி அளவுகளிலும் கிடைக்கிறது. அவற்றின் விலை மட்டும் சற்றே அதிகமாக இருக்கும்.
புதிய அன்ட்ரோய்டு கைபேசி அல்லது டேப்லெட் வாங்கும்பொழுது மிக மிக முக்கியமானது இந்த ப்ராசெசர் என்றழைக்கப்படும் செயலிகளே. இதைப்பொறுத்தே கைபேசி அல்லது டேப்லெட் கணனியின் வேகம் இருக்கும். இதன் அளவு குறைந்தது 1 GHz அளவாவது இருக்கவேண்டும்.




android_os_001
புதிய அன்ட்ரோய்டு கைபேசி அல்லது டேப்லெட் வாங்கும்பொழுது வாரண்டியை மிகமுக்கியமாக கவனிக்கவேண்டும். ஏனெனில் கைபேசி மிகவிரைவில் பழுதுபட்டால் இது உதவியாக இருக்கும். குறைந்தது 1 வருடம் இருந்தாலே நலம்.
புதிய அன்ட்ரோய்டு போன் அல்லது டேப்லெட் வாங்கும்பொழுது அதன் இயங்குதளம் பற்றிய விவரங்களை பார்த்தல் அவசியம். ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் பல பதிப்புகள் உள்ளன. ஆன்ட்ராய்டு 2.3 போன்றவை பழைய பதிப்புகள். 4.1 ஆக இருந்தால் நலம்.
அன்ட்ரோய்டு போன் அல்லது டேப்லெட் வாங்குவதற்கு முன்னரே, அதன் கமெரா தகவல்களை தெரிந்திருக்கவேண்டும். குறைந்தது 5 மெகாபிக்ஸல்கள் அளவுடைய கமெரா இருப்பதே நல்லது. சிறந்த வீடியோக்கள் எடுப்பதற்கும், புகைப்படங்கள் எடுப்பதற்கும் இது உதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை தெரியப்படுத்துங்கள்