வெறும் DELETE மட்டும் அழுத்தி இருந்தால் எளிதாக மறுபயன்பாட்டு பெட்டியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். ஆனால் SHIFT+DELETE அழுத்தி இருந்தால் மீண்டும் பெறுவது கடினம். இதற்கு பல்வேறு மென்பொருள்கள் பல காலமாக கிடைக்கப் பெறுகிறது. அவற்றுள் மிக எளிமையான ஒன்று தான் இந்த "Undelete Plus". இதன் மென்பொருளின் சிறப்பு என்னவென்றால் நீங்கள் இதனை உங்கள் கணணியில் நிறுவ வேண்டியது இல்லை. எடுத்து செல்லத்தக்க(Portable) வகையில் இம்மென்பொருள் அமைந்துள்ளது. 1. மென்பொருளை திறந்ததும் C:/ தெரிவு செய்யப்பட்டிருக்கும் அதை நீக்கி உங்களுக்கு தேவையான டிரைவை குறிக்கவும். பின் Start Scanஐ சொடுக்க உங்கள் பணி தொடங்கப்பெறும். 2. உங்கள் அழிந்து போன கோப்புகள் அனைத்தும் பட்டியலிடப்படும். அனைத்து வகை கோப்புகளும் தனித் தனியே காண்பிக்கப்படும். தேவையான கோப்புகளை தெரிவு செய்து Start Undelete கொடுங்கள். 3. இவ்வழியில் உங்கள் கோப்பை கண்டுபிடிப்பது கடினம் எனில் பின்வருமாறு தக்க மாற்றங்களுடன் முயற்சித்து பார்க்கலாம். 4. டாகுமென்ட் கோப்புகளை மட்டும் தேட விரும்பினால் *.docx என முதல் பேட்டியில் நிரப்பி தேடலாம். அல்லது draftcopy என்று அதன் பெயர் இருக்குமேயானால் அதனை உள்ளிட்டும் தேடலாம். 5. மாற்றி அமைக்கப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட திகதியை கொண்டும் தேடலாம். குறைந்தபட்ச கோப்பு அளவு நிர்ணயித்து தேடும் வசதியும் காணப் பெறுகிறது.(Ex. 100KB). |
Friday, 23 September 2011
அழிந்து போன கோப்புகளை மீண்டும் பெறுவதற்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் கருத்தை தெரியப்படுத்துங்கள்