Friday, 23 September 2011

போக்குவரத்து நெரிசலை குறைக்க கூகுள் அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய வழிமுறை


பெருகும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும், வாகன ஓட்டுநர்கள் விரைவாகவும் சிரம்மின்றி செல்லக்கூடிய வகையில் கூகுள் புதியதாக ஒரு தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதற்கென பிரத்யோகமாக கூகுள் மேப்பை அறிமுகம் செய்துள்ளது. இதில் சிகப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறக் கோடுகளால் போக்குவரத்து எவ்விதம் உள்ளது, எவ்வழிகளில் செல்வது, செல்லும் இடத்தை விரைவாக எவ்வாறு அடைவது, செல்லுமிடத்திற்கு உள்ள பல வழிகள் மற்றும் கால அளவு என பல்வேறு விபரங்களை விளக்கமாய் காட்டுகிறது.
இதன் மென்பொருள் பொறியாளர் கூறுகையில்,"தற்போதைய நிலையில் போக்குவரத்து நிலை எவ்வாறு உள்ளது என்பதை கணக்கில் கொள்ளாமல் எவ்வழியில் சென்றால் வேகமாக செல்லலாம் என்பதை கருத்தில் கொண்டே இதற்கு முன்பான நேவிகேஷன் இருந்தது" என்று கூறினார்.
வெவ்வேறு சாலைகளையும், குறுக்கு வழிகளையும், தேசிய நெடுஞ்சாலைகளையும் கருத்தில் கொண்டே இது இருந்தது. ஆனால் தற்போதைய நேவிகேஷன் தானாகவே சிறந்த வேகமாகச் செல்லக் கூடிய சாலைகளை போக்குவரத்தின் நிலைக்கேற்ப வழிகாட்டும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை தெரியப்படுத்துங்கள்