எனினும் சில வேளைகளில் அசௌகரியங்கள் ஏற்படவே செய்கின்றன. அவ்வாறானதொன்றே நாம் அனுப்பிய மின்னஞ்சல் படிக்கப்பட்டதா இல்லையா என்ற சந்தேகமாகும். அதனை தெரிந்து கொள்வதற்கு ஒரு வழியுள்ளது. மிகவும் இலகுவான படிமுறைகளைக் கொண்ட வழிமுறை இதுவாகும். 1. முதலில் உங்கள் மின்னஞ்சல் கணக்கிற்குள் நுழைந்து கொள்ளுங்கள். 2. நீங்கள் அனுப்பவேண்டிய மின்னஞ்சலை தட்டச்சு செய்து கொள்ளுங்கள். அதன் பின்னர் இத்தளத்திற்கு செல்லுங்கள். ![]() அத்தளத்திற்கு சென்றவுடன் தோன்றும் விண்டோவில் கீழ்க்கண்டவற்றை பின்பற்றவும். 1. உங்கள் மின்னஞ்சல் முகவரி. 2. உங்கள் செய்தியின் தலைப்பு. 3. தரப்பட்டுள்ள உருவங்களில் உங்களுக்கு பிடித்தமானவற்றை தெரிவு செய்து கொள்ளுங்கள். 4. படிமுறை 4ல் காட்டப்பட்டுள்ள பட்டனை அழுத்தவும். இப்பொழுது கீழுள்ள வெற்றிடத்தில் அவ்வுருவம் தோன்றும். 5. அவ்வுருவத்தினை உடனடியாக கொப்பி செய்து உங்கள் மின்னஞ்சல் செய்தியினுள் பேஸ்ட் செய்யுங்கள்.( 60 விநாடிகளுக்குள்) 6. இதன் பின்னர் வழமை போல மின்னஞ்சலை அனுப்பவும். ![]() நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் படிக்கப்பட்டவுடன் மேலே காட்டப்பட்டுள்ளதைப் போன்ற மின்னஞ்சலொன்று உங்கள் கணக்கிற்கு அனுப்பப்படும். (சில வேளைகளில் இம்மின்னஞ்சல் உங்கள் கணக்கின் 'Spam folder' இல் காணப்படலாம்). இதில் பெறுவரின் I.P.முகவரி, எப்பொழுது படிக்கப்பட்டது, எத்தனை முறை படிக்கப்பட்டது, எந்த இடத்தில் படிக்கப்பட்டது, குறித்த நபரால் பாவிக்கப்படும் உலாவி, கணணியின் இயக்குதளம் போன்ற தகவல்களும் தரப்படும். |
Friday, 23 September 2011
நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல் வாசிக்கப்பட்டு விட்டதா என்பதை அறிந்து கொள்ள
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
உங்கள் கருத்தை தெரியப்படுத்துங்கள்