Friday, 23 September 2011

தங்கள் கணணி இயங்க ஆரம்பிக்கும் போது பயனாளர்களுக்கு அறிவுரைகளை வழங்க


நீங்கள் உங்கள் சொந்தப் பாவனையில் உள்ள கணணியை உங்கள் நேரடிக் கண்காணிப்பின் கீழேயே பிறரைப் பயன்படுத்த அனுமதிப்பது வழமை.
ஏனெனில் தாங்கள் தங்கள் கணணி மேல் வைத்துள்ள கவனிப்பு மற்றும் அக்கறை போல் மற்றைய விருந்தாளிகள் வைத்திருக்க மாட்டார்கள் என்பது அனைவரும் தெரிந்ததே.
கணணி வைத்திருக்கும் அனைவருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனை என்றால் வைரஸ் ஆகத்தான் இருக்கும். எனவே தான் நாம் Pen Drive போன்றவற்றை பாவிக்கும் போது வைரஸ் எதிர்ப்பான்களைக் கொண்டு நன்கு சோதித்தபின் அவற்றைப் பயன்படுத்துகின்றோம்.
நாம் இல்லாத வேளையில் இன்னொருவர் நமது கணணியைப் பாவிப்பதற்காக அனுமதி வழங்கும் போது பயன்படுத்துபவர் எவ்வாறான விடயங்களில் மிகுந்த அக்கறை காட்டவேண்டுமோ அவ்வாறான விடயங்களை கணணி இயங்கும் வேளையில் தெரிவிப்பதற்கு ஒரு வழிமுறை உள்ளது.
இதற்கு நீங்கள் முதலில் Start இல் சென்று RUN என்பதை திறந்து அதிலே "regedit" என்று type செய்து Enter செய்யுங்கள். இப்போ உங்களுக்கு Registry Editor என்ற விண்டோ திறக்கும். இதிலே இடப்பக்கத்தில் கீழ் காட்டப்பட்ட ஒழுங்கில் System என்பது வரை செல்லவும்.
HKEY_LOCAL_MECHINESOFTWAREMicrosoftWindowsCurrentVersionpoliciessystem.
இப்போ வலப்பக்கத்தில் உள்ள Legal Notice Caption என்பதை Double Click செய்து திறந்து கொள்ளுங்கள். இதிலே Data Value என்பதில் தலைப்பை[Heading] கொடுத்து Enter பண்ணவும்.
பின்னர் அதன் கீழே உள்ள Legal Notice Text என்பதைத் திறந்து அதன் Data Value என்ற இடத்தில் தங்கள் கணணி விருந்தினர்களுக்கு என்ன செய்தி வழங்கப் போகின்றீர்களோ அதனைக் கொடுத்து Enter பண்ணவும்.
எடுத்துக்காட்டாக வணக்கம் நண்பர்களே தாங்கள் Pen Drive ஐப் பயன்படுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதனை வைரஸ் எதிர்ப்பானைக் கொண்டு நன்கு சோதித்தபின் பயன்படுத்தவும். அத்துடன் தாங்கள் சேமிக்க விரும்பும் ஆவணங்களை Desktop, C: Drive தவிர்ந்த ஏனைய Drive இல் சேமிக்கவும். நன்றி.
இனிமேல் நீங்கள் கணணியை இயக்க ஆரம்பிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மேற்குறிப்பிட்டது போன்ற செய்தியே தோன்றும். அதனை வாசித்து OK கொடுத்த பின்னரே கணணியின் Desktop தோன்றும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை தெரியப்படுத்துங்கள்