இதற்கு முதலில் இந்த லிங்கை கிளிக் செய்து இந்த மென்பொருளை பதிவிறக்கிக் கொள்ளவும். அடுத்து ஓபன் ஆகும் விண்டோவில் தேவையான டாக்குமெண்டை திறந்து கொள்ளுங்கள் அல்லது புதியதாக ஒன்றை தட்டச்சு செய்து கொள்ளுங்கள். இதில் உள்ள Reading டேபை கிளிக் செய்யுங்கள். Read என்பதை கிளிக் செய்யுங்கள். நீங்கள் தட்டச்சு செய்த அல்லது ஓப்பன் செய்த டாக்குமெண்டை இந்த மென்பொருள் படித்துக் காண்பிக்கும். இதில் உள்ள மற்றும் ஒரு வசதி என்னவென்றால் இதில் விதவிதமான 12 ஆண்-பெண் குரல்கள் உள்ளது. உங்களுக்கு எது தேவையோ அதை தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் இதில் உள்ள டாக்குமெண்டை படிக்க வைத்து அதை wav.mp3 என எந்த வகையான ஓடியோ-சீடியாகவும் எளிதில் மாற்றிக் கொள்ளலாம். மாணவர்கள் தயாரிக்கும் கட்டுரையை ஓடியோ சீடியாக மாற்றிக் கொண்டு ஒலியாக கேட்டால் எளிதில் மனதில் பதியும். இதில் பல வண்ணங்களும் இணைத்துள்ளதால் வேண்டிய வண்ணத்திற்கு இதன் முகப்பை மாற்றிக் கொள்ளலாம். Read வசதி மூலம் நாம் தட்டச்சு செய்யும் போதே தட்டச்சு செய்ததை கேட்கும் வசதியும் மற்றும் கர்சரை எங்கு வைத்திருந்தாலும் அங்கிருந்து கேட்கும் வசதியையும் இதில் கொண்டு வரலாம். |
Friday, 23 September 2011
உங்களது கணணியிலும் நோட் பாட் பேச வேண்டுமா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் கருத்தை தெரியப்படுத்துங்கள்