Saturday, 24 September 2011

உங்களுக்கு சிங்களம் பேச ஆசையா?


பேச்சுச் சிங்களம்

  • எண்கள்
  • 1 எக்காய் - ஒன்று
  • 2 தெக்காய் - இரண்டு
  • 3 துணாய் - மூன்று
  • 4 ஹத்தறாய் - நான்கு
  • 5 பஹாய் - ஐந்து
  • 6 ஹயாய் - ஆறு
  • 7 ஹத்தாய் - ஏழு
  • 8 அட்டாய் - எட்டு
  • 9 நமயாய் - ஒன்பது
  • 10 தஹயாய் - பத்து
  • 11 எக்கொளஹாய் - பதினொன்று
  • 12 தொளஹாய் - பன்னிரண்டு
  • 13 தஹாத்துணாய் - பதின்மூன்று
  • 14 தாஹத்தறாய் - பதின்நான்கு
  • 15 பஹலுவாய் - பதினைந்து
  • 16 தாசயாய் - பதினாறு
  • 17 தாஹத்தாய் - பதினேழு
  • 18 தாஅட்டாய் - பதினெட்டு
  • 19 தாநமயாய் - பதினொன்பது
  • 20 விஸ்ஸாய் - இருபது
  • 30 திஹாய் - முப்பது
  • 40 ஹத்தலியாய் - நாப்பது
  • 50 பணஹாய் - ஐம்பது
  • 60 ஹட்டாய் - அறுபது
  • 70 ஹத்தாவாய் - எழுபது
  • 80 அசுவாய் - எண்பது
  • 90 அணுவாய் - தொண்ணூறு (தொண்பது)
  • 100 சீயாய் - நூறு
  • 200 தெசிய்ய - இருநூறு
  • 300 துன்சிய்ய - முந்நூறு
  • 400 ஹாரசிய்ய - நாநூறூ
  • 500 பன்சிய்ய - ஐநூறு
  • 600 ஹயசிய்ய - அறுநூறு
  • 700 ஹத்சிய்ய - எழுநூறு
  • 800 அட்டசிய்ய - எண்நூறு
  • 900 நமசிய்ய - தொள்ளாயிரம்
  • 1000 தஹாய் - ஆயிரம்
  • 2000 தெதாய் - இரண்டாயிரம்
  • 3000 துன்தாய் - மூவாயிரம்
  • 4000 ஹத்தர தாதாய் - நாலாயிரம்
  • 5000 பன் தாதாய் - ஐயாயிரம்
  • 6000 ஹய தாயாய் - ஆறாயிரம்
  • 7000 ஹத் தாயாய் - எழாயிரம்
  • 10 000 தாதாய் - பத்தாயிரம்
  • 100 000 லக்சயாய் - இலட்ச்சம்
  • 10 000 000 கோட்டிய - கோடி


                                           சொற்கள், சொற்தொடர்கள்
ஆயுபோவன் - வணக்கம்


நமுத் - ஆனால்(but)

மார்க்க - வழி

பாற - பாதை

மில - விலை

ஒபட்ட சிங்கள தன்னவத? - உங்களுக்கு சிங்களம் தெரியுமா?

ஒயாட தெமழ தேரெனவாத? - உங்களிற்கு தமிழ் தெரியுமா? (ஒயா - உங்களிற்கு, தெமழ - தமிழ், தேருனுவாத அல்லது தன்னுவாத - தெரியுமா?)

ஒயாட்ட டிரைவிங் லைசன்ஸ் தியனவாத? - உங்களிடம் சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளதா?

ஒயாட்ட ஆதார பலபத்ர தியனவாத? - உங்களிடம் வாகனத்திற்கான வரிப்பத்திரம் உள்ளதா?

ஒவ் - ஆம்

தண்ணவா - தெரியும்.

டிக்க டிக்க - கொஞ்சம் கொஞ்சம்

ஒச்சற தமாய் புளுவண்- அவ்வளவுதான் முடியும் (ஒச்சற - அவ்வளவுதான், தமாய் - தான், புளுவண் - முடியும்)

கொஹெத யன்னே? - எங்கே போறீங்க?

கெவல் கொஹெத - வீடு எங்கே? (கெவல் - வீடு, கொகெய்த - எங்கே)?

வல்லவத்த - வெள்ளவத்தை (குறிப்பு: சிங்களத்திலும் தமிழிலும் இடப்பெயர்கள் சிறிதளவு 
மாறுபடும்)

ஒயா கொஹெத வெட கரண்ணே - நீங்கள் எங்கே வேலை செய்கின்றீர்கள்.

மங் திருக்கொணாமலே வெட கரணவா - நான் திருகோணமலையில் வேலை செய்கின்றேன்.

கொஹொமத செப சனிப்ப? - நீங்கள் எப்படி சுகமாயிருக்கின்றீர்களா?

கொழும்பட்ட கொஹொமத யன்னே? - கொழுப்புக்கு எப்படி போறது?

கமத் நே - பரவாயில்லை

வரதக் நே- பரவாயில்லை.

பொஹொம ஹொந்தாய் - மிகவும் நலமாய்யிருக்கின்றேன். (பொஹொம - மிகவும், ஹொந்தாய் - நல்லது)

ஸ்தூதி - நன்றி

கேவத? - சாப்பிட்டிங்களா?

மங் கேவா - நான் சாப்பிட்டேன் (மங் - நான், கேவா - சாப்பிட்டேன்)

தே பொனவத - தேனீர் குடிப்பீர்களா?

ஆண்டுவ - அரசாங்கம்
பட்டங்கத்தத? - ஆரம்பிச்சாச்சா? (ஸ்டாட்பண்ணியாயிற்றா - பொதுவாக சோதனைகள் மற்றும் நேர்முகத்தேர்வுகளில் பாவிக்கப்படுவது)

கீயத - எவ்வளவு?

இத்துறு சல்லி தெண்ண - மிச்சக் காசு தாருங்க (இத்துறு - மிச்சம், சல்லி - காசு, தெண்ண - தாங்க)
மே பாறென் அம்பேபுஸ்ஸ யன்ன புளுவண்த - இந்தப் பாதையால் அம்பேபுஸ்ஸ போக இயலுமா? (மே - இந்த, பாற - பாதை, யன்ன- போக, புளுவண்த - இயலுமா?)

மம ஓயாட்ட கமதி - நான் உங்களை விரும்புகின்றேன்.


மம ஓயாட்ட ஆதரே - நான் உங்களைக் காதலிக்கின்றேன்.





உறவுச் சொற்கள்

  • தாத்தா, தாத்தி, அப்பாச்சி - அப்பா
  • அம்மே (அல்லது அம்மா) - அம்மா
  • ஆச்சி - அம்மம்மா அல்லது அப்பம்மா
  • சீயா - அப்பப்பா அல்லது அம்மப்பா
  • ஐயா - அண்ணா
  • அக்கா - அக்கா
  • மல்லி - தம்பி
  • நங்கி - தங்கை
  • சகோதரயா - சகோதரன்
  • புத்தா - மகன்
  • துவ - மகள்
  • பேனா - மருமகன்
  • மல்லி கே புத்தா - தம்பி யின் மகன்
  • அக்கா கே துவ - அக்கா வின் மகள்
  • மச்சாங் - இது தற்போதைய சிங்களப் பாவனையில் நெருக்கமான நண்பர்களைக் குறிக்கப் பயன்படுகின்றது.
  • லொக்கு அம்மா - பெரியம்மா
  • லொக்கு தாத்தா - பெரியப்பா
  • மாமா - மாமா
  • மசினா - மச்சான்
  • நேனா - மச்சாள்
  • பிரிந்த,பவுல - மனைவி
  • மித்துரா - நண்பன்
  • மித்துரி - நண்பி
  • கொல்லா - இளைஞன்/பையன்
  • பிரிமி - ஆண்
  • கெஹெனு - பெண்
  • கெல்ல - இளம் பெண்
  • லமயா - பிள்ளை
  • யாளுவோ - நண்பர்கள்
காலங்கள்
  • உதே - காலை
  • தவல் - பகல்
  • ஹவச - பிற்பகல், சாயங்காலம், பின்னேரம்
  • ராத்ரிய - இரவு
  • அத - இன்று
  • ஈயே - நேற்று
  • ஹெட்ட - நாளை
  • அவ்ருது - வருடம்


கிழமைகள்

  • இரிதா - ஞாயிறு
  • சந்துதா - திங்கள்
  • அங்கஹருவாதா - செவ்வாய்
  • பதாதா - புதன்
  • பிரஹஸ்பதிந்தா - வியாழன்
  • சிக்குராதா - வெள்ளி
  • செனசுராதா - சனி

நோய்கள்

  • உண - காய்ச்சல்
  • கஸ - இருமல்
  • ஹெம்பிரிஸ்ஸாவ - தடிமன்
  • ஹிபுகும் - தடிமல்
  • ஒலுவ அமாறு - தலை வலி
  • படே அமாறு - வயிற்று வலி
  • செம - சளி
  • பப்புவே அமாறு - நெஞ்சு வலி
  • அதும - வீஸிங்
  • ருத்ர பீடனய - இரத்த அழுத்தம்
  • அஸ் அமாறுவ - கண் வருத்தம்

இடங்களின் பெயர்கள்

  • றோகல - வைத்தியசாலை
  • நகர சபாவ - நகரசபை
  • விஸ்வவித்யாலய - பல்கலைக்கழகம்
  • பாசல - பாடசாலை
  • கோவில - கோவில்
  • கம - கிராமம்
  • நகரைய - நகரம்
  • பலாத - மாகாணம்
  • டிசாவ - மாவட்டம்
  • பன்சல - விகாரை
  • பல்லிய - பள்ளிவாசல்
  • பஸ் நேவதும்போல - பஸ் தரிப்பிடம்
  • வேளந்தசெல - கடை (விற்பனை நிலையம்)
  • போல - சந்தை
  • வேவ - குளம்
  • கங்காவ - ஆறு
  • பலாத் சபாவ - பிரதேச சபை
  • நகர சபாவ - நகர சபை

மரங்களின் பெயர்

  • குபுக் கஸ் - மருத மரம்
  • அம்ப கஸ் - மாமரம்
  • கொஹோம்ப கஸ் - வேப்பமரம்
  • நுக் கஸ் - ஆழமரம்
  • கோஸ் கஸ் - பலாமரம்
  • கேஹேல் கஸ் - வாழைமரம்
  • பெபோல் கஸ் - பப்பாசிமரம்
  • சியம்பலா கஸ் - புளியம்மரம்

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை தெரியப்படுத்துங்கள்