Pages

Sunday, 4 September 2011

கணணி சார்ந்த விடயங்களை கற்றுக் கொடுக்கும் இணையம்






கூகுள் கோட் யூனிவர்சிட்டி என்னும் பெயரில் கூகுள் இணைய பல்கலையை நடத்தி வருகிறது.
இந்த பல்கலையில் பட்டம் வாங்க முடியாது என்றாலும் கணணி சார்ந்த விடயங்களை கற்று கொள்ளலாம். கணணி கல்வி தொடர்பான இணைய பாடங்களை இந்த இணைய பல்கலையில் கூகுள் பட்டியலிட்டுள்ளது.


புதிய புரோகிராமிங் மொழிகள்இ எச்.டி.எம்.எல் வடிவமைப்புஇ இணையதள பாதுகாப்புஇ ஆன்டிராய்டு என பல்வேறு தலைப்புகள் தொடர்பான இணைய பாடங்கள் வீடியோ விளக்கங்களோடு இடம் பெற்றுள்ளன.


ஆர்வம் உள்ளவர்கள் தங்களுக்கு தேவையான பாடத்தை கிளிக் செய்து படிக்கலாம். கட்டணம் கிடையாது என்பதோடு உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டிய தேவையும் இல்லை.


இணையவாசிகள் தங்களுக்கு தேவையான பாடதிட்டம் உள்ளதா என்று தேடிபார்க்கும் வசதியும் உள்ளது. மாணவர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டு சந்தேகத்தையும் தீர்த்து கொள்ளலாம்.


பேராசிரியர்கள் மற்றும் இணைய நிபுணர்கள் தங்களது இணைய பாடங்களை இங்கே சமர்பிக்கவும் செய்யலாம். புதிய பாட திட்டங்கள் மற்றும் பிரபலமாக உள்ள பாடங்களும் தனியே அடையாளம் காட்டப்பட்டுள்ளன.


இணையதள முகவரி 

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை தெரியப்படுத்துங்கள்