இன்னொரு கணக்கை கையாள்வதென்றால் அதனை Sign out செய்த பின்பே மற்றைய கணக்கை திறப்பதுண்டு. அல்லது வேறொரு Browser ஐத் திறந்து அதனைப் பயன்படுத்துவதுண்டு. ஆனால் இவ்வாறு இல்லாமல் ஒரு Browser இலேயே ஒரே சமயத்தில் எவ்வாறு பல கூகிள் கணக்குகளை கையாளலாம். அதாவது இதனை இரண்டு வழிகளில் மேற்கொள்ளலாம். நீங்கள் ஒரு கணக்கை பயன்படுத்திக்கொண்டு இருக்கும் சந்தர்ப்பத்தில் இன்னொரு கணக்கையும் கையாள வேண்டியேற்படின் அதற்காக " Shft + Ctrl + N " என்பதைக் கொடுங்கள். இப்போ Browser இன் புதிய விண்டோ ஒன்று திறக்கும். இதிலே நீங்கள் பயன்படுத்த இருக்கும் மற்றைய கணக்கை திறந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டியதுதான். உங்கள் ஜிமெயில் கணக்கின் Sign out செய்யும் பகுதிக்குச் செல்லுங்கள். இங்கே "Switch Account" என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போ தோன்றும் பகுதியில் " Sign in to Another Account " என்று காணப்படும். இதனை கிளிக் செய்யுங்கள். இப்போ தோன்றும் புதிய Tap இல் உங்கள் மற்றைய கணக்கினைத் திறந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டியது தான். இதில் Browser இன் ஒரு விண்டோவிலேயே பல Tap களில் வெவ்வேறு கூகுள் கணக்குகளை ஒரே நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். |
Tuesday, 13 September 2011
ஒரே பிரவுசரில் பல்வேறு கூகுள் கணக்குகளை பயன்படுத்துவதற்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் கருத்தை தெரியப்படுத்துங்கள்